வெற்றியின் நாள் VICTORY DAY ஏப்ரல் 21, 1963 சீரா விஸ்டா அருகில் அரிசோனா, அமெரிக்கா 1. நான் இங்கு வந்து இருக்கும் சிலாக்கியத்திற்காகவும், மேலும் தேவனுடைய ராஜ்யத்திலே என்னுடைய உடன் குடிமக்களையும் சந்திப்பதற்காகவும் என் நன்றியறிதலை வெளிப்படுத்த விரும்புகிறேன். இந்த காலையில் சிறிது ஐக்கியம் கொள்வதற்காக நீங்கள் இந்த சகோதரனுடைய வீட்டில் ஒன்று கூடியிருக்கையில், இது ஆதி சபையை ஒருவிதமாக எனக்கு நினைவுபடுத்துகிறது. கிறிஸ்தவ மானது முதலாவது துவங்கி இயங்கிய விதமாக அவர்கள் கபடு இல்லாத இருதயத்தோடு வீடுகள் தோறும் அப்பம் பிட்டார்கள்" என்று வேதாகமம் கூறுகிறது. நாம் இந்த காலையிலே இங்கே இருக்கும் வேளையில் அதுதான் நமக்கு வேண்டும். கபடு இல்லாத இருதயம் - ஒரே நோக்கம். ஒரு காரியத்தை நாம் செய்து முடிக்க முயற்சிக்கிறோம், அது, நாம் இங்கே பூமியின் மீது இருக்கும் வரை யில் நம் வாழ்க்கையில் தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றுவது. ஒருவேளை, அநேக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே , தேவனானவர் தம்முடைய முடிவே இல்லாத ஞானத்தின் மூலமாய், நாம் இந்த காலையில் இங்கே இருப்போம் என அறிந்திருப்பார். மேலும் இங்கே, பின்பக்கமாய், அந்த புல்வெளியிலே, அல்லது இந்த பாலைவனத்திலே, இந்த சிறிய கட்டிடத்தின் உள்ளே இருப்போம் என்பதை அநேக ஆயிரம் ஆண்டுகள் முன்னே அவர் அறிந்திருந்தார். 2. இப்போது, டூசானிலிருந்து இங்கே வரும்படியான சில நண்பர்களை நாங்கள் சந்தித்தோம். ஸ்டிரிக்கர் குடும்பத்தார், அவர்களுடைய காரில் ஜெனரேட்டர் பழுதடைந்து விட்டது. எங்களால் கொண்டு வரக் கூடியவர்களை, அம்மையாரையும், பிள்ளைகளையும் சேர்த்துக் கொண்டு வந்தோம். மற்றவர்கள் அந்த ஜெனரேட்டரை சீர்ப்படுத்தியவுடன் வருவார்கள். அங்கே ஏதோ சிறிய குறுக்குத் தெருவுகளில், அது எங்கே என்று எனக்குத் தெரியாது. ஆனால், இங்கே வந்திருப்பதற்காக நாங்கள் சந்தோஷப்படுகிறோம். 3. இப்பொழுது, இங்கேயுள்ள சகோதரன் ஐசக்ஸன், நாங்கள் ஒருவரை ஒருவர் அதிகமாக அறியமாட்டோம். நாங்கள் கிறிஸ்துவுக்குள் சகோதரர்கள் என்றும் சில சமயங்களில் ஐக்கியம் கொண்டிருக்கிறோம் என்று மாத்திரம் அறிவோம். எங்களுடைய முதல் சந்திப்பு, பல வருஷங்களுக்கு முன்னே பீனிக்ஸில் என்று நம்புகிறேன். இப்போது அவருடைய மனைவி இங்கேயிருந்தால், எனக்கு அவர் யார் என்று தெரியாது. இப்போது நாங்கள் அந்த அளவுக்குதான் ஒருவரை ஒருவர் அறிவோம். அவருடைய குடும்பம், அவருடைய மனைவி யார் என்று தெரியாது. நான் இங்கே உள்ளே வரும்போது கதவருகில் நின்ற ஒரு கறுப்பர் இன சகோதரன் என் கையை குலுக்கிய அவர் மிகவும் நேர்த்தியானவர், நீ இங்கே உள்ளே வருவதற்கு மிகவும் விருப்பப்படுவதாக, உன்னை உணர செய்தது. எனவே, இங்கே இந்த ஜனத்தின் மத்தியில் இன்று காலையில் இருப்பது, இது எனக்கொரு சிலாக்கியமாயிருக்கிறது. 4. மேலும் பாருங்கள், நான், ஆயிரம் தடவை ஆயிரங்கள் இருக்கும் படியான அநேக ஜனங்கள் நிறைந்த வட்டாரங்களிலே பேசும்படியான சிலாக்கியத்தை நான் அனுபவித்திருக்கிறேன். ஆனால், என் ஊழியத்தின் நினைவுகூருதல்கள் இப்படிப்பட்ட நேரங்களைப்பற்றிதான். சுமார் ஒன்று. இரண்டு டஜன் மக்கள் சேர்ந்து உட்கார்ந்து இருப்பார்கள். தேவனானவர் மக்களுடன் நெருங்கி இடை படுவதைப் போல, காணப்படும் நாம் சிறிய எண்ணிக்கையில் ஒன்று சேரும்போது, ஒருவரையொருவர் அதிகமாக அறிகிறோம் என்று நான் நினைக்கிறேன். "எங்கே இரண்டு பேரோ , மூன்று பேரோ என் நாமத்தினாலே கூடிவருகிறார்களோ, அங்கே உங்கள் மத்தியில் நான் இருக்கிறேன்' என்று அவர் சொன்னதை போல, நாம் இருக்கும் போது, தேவனுடைய வார்த்தை நமக்கு நெருங்கியிருப் பதைப் போல காணப்படுகிறது. 5. நேற்று இரவு, நடுராத்திரியிலே, ஒரு மனிதனும், அவருடைய மனைவியும், (நடந்து போன ஒரு சிறு காரியத்தினால் பயித்தமாகிக் கொண்டிருக்கிறு வாலிபப் பெண்ணும் இருந்த வீட்டில் நான் ஒன்று கூடினேன். மேலும், நாங்கள் அங்கே ஒன்று கூடியபோது, அந்த வாலிபப் பெண்ணும், நானும் மாத்திரம், ஏனென்றால், சொல்லப்பட வேண்டிய சில விஷயங்களின் நிமித்தம், நாங்கள் அங்கே ஒன்றாக இருப்பது நல்லது என்று தீர்மானித்தேன். எனவே, அங்கே இந்த வெளிச்சம் வந்தது. தேவனுடைய இந்த தூதனானவர் அங்கே நாங்கள் இருந்த இடத்தில் சரியாகக் கூடி வந்தார். தேவன் தம்முடைய வாக்குத்தத்தங்களை காப்பாற்றுகிறார் என்று காண்பித்தார். 6. பிறகு, ஒரு மிக முன்னணியிலிருக்கிற குடும்பத்தைச் சேர்ந்த, இருபத்து இரண்டு வயது சென்ற ஒரு வாலிப மனிதன், முகவீக்க நோயை பெற்றிருந்தான். இந்த அம்மை நோய் அவன் மீது விழுந்திருந்தது. உங்களில் அநேகருக்கு இது என்னவென்றும், விசேஷமாக ஆண்பிள்ளைகளுக்கு இது எப்படி என்றும் தெரியும். இது அப்படியே கொஞ்சம் குறைய அவர்களை கொன்று விடுகிறது. இந்த பையன், பல நாட்களாக, இரண்டு வாரங்களாக 105 டிகிரி சுரத்துடன் இருந்தான். இப்போது. கைகால்கள் விழுந்து போவ தற்கு ஏற்ற நிலைமை என்று நீ அறிவாய். சுரத்தையும், வியாதியின் பிடியையும் பிடிக்க டாக்டர்கள் அப்படியே தங்களால் ஆன வரை பென்சிலின் போன்றவைகள் எல்லாவற்றையும் கையாண்டு முடித் திருந்தார்கள். அது எந்தவித பிரயோஜனமும் இல்லாமல் காணப் பட்டது. ஆனால், ஒரு நிமிஷ நேரத்திலே , தேவனுக்கு முன்பாக, அந்த சுரத்தின் சிறு துணிக்கையும் அந்த வாலிபனை விட்டு அகன்றது. அவன் சுகத்துடன் எழுந்தான். இது, பிரதானமான நபர் கிறிஸ்து தான் என்று நமக்கு காண்பிக்கிறதாய் இருக்கிறது. நாம் இந்த காலையில் இங்கே, இருப்பது அந்த காரணத்தினால் தான், இந்த ஓய்வு நாளிலே கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்வதற்காக. 7. நான் இங்கே வரவும், நம்முடைய விலையேறப் பெற்ற சகோதரனுடனும், உங்களோடும் ஒரு சந்திப்புக்காக எதிர்பார்த் திருந்தேன் . இங்கே இருக்கும்படியாக இந்த சிறு கூட்டத்தில் இருந்து சகோதரன் அநேக தடவைகள் அனுப்பித் தந்த உங்களுடைய தசமபாகங்களை நான் பெற்றுக் கொண்டிருக்கிறேன். அது போன்ற பொக்கிஷங்களாயிருக்கிறவைகளை என் ஆத்துமாவுக்கு மிகவும் புனிதமாக கருதுகிறேன். ஏனென்றால், அது அங்கிருந்து எங்கே போயிற்று என்பதை பற்றி நான் பதில் சொல்ல வேண்டியவனாயிருக்கிறேன் என்பதை அறிவேன். நான் அதை மிகவும் நிச்சயமாக வாழ்த்துகிறேன். உங்களுடைய நம்பிக்கை யுள்ள தன்மைக்காக என்னுடைய நன்றியறிதலை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த சிந்தனையை நீங்கள் செயல் படுத்தியிருக்கிறீர்களோ, உங்களுக்கு உள்ள தசமபாகங்களையும், மேலும், இவ்விதமாக வீடுகளில் கூட்டங்களையும் அறிந்திருந்தும், இருந்தாலும் உங்களுக்கு உள்ள சொற்பமானதும், உங்களுக்கு தெரிந்திருக்கும் அளவில், ஊழியத்தை தாங்குவதற்காக போக வேண்டும். என்றிருக்கிறீர்கள். ஆகவே, அதிலிருந்து மேற்கொண்டு, அதற்கு நான் பொறுப்புள்ளவனாக இருந்தாக வேண்டும். மேலும், நான் நம்முடைய கர்த்தருக்கு ஒரு நல்ல உக்கிராணக்காரனாக இருக்க விரும்புகிறேன். நாம் இந்த பூமியில் என்ன செய்தோம் என்று நான் பதில் சொல்ல வேண்டிய அந்த நாளிலே. 8. இப்போது, ஒரு காரியம் உண்டு. பின்புறமான இந்த இடத்தில் நாம் வாகனப் போக்குவரத்தின் இரைச்சலால் தொல்லைப் பட மாட்டோம், அது நல்லது. இதை எவ்விதமாகச் சொல்வது என்று எனக்கு சிறிது கூட தெரியவில்லை. ஆனால், பல நாட்கள் நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய ஒரு எழுப்புதல் கூட்டங்களை நாம் இந்த பின்புறமான இடத்தில் நடத்தினால் நல்லது என்று நினைக் கிறேன். ஏனெனில், இந்த விதம் எப்படியென்றால், நீ சும்மா உள்ளே வருகிறாய், "எப்படி இருக்கிறாய், உன்னை சந்திப்பதில் எனக்கு சந்தோஷம் " என்று சொல்லி கர்த்தரைப் பற்றி சில வினாடிகள் பேசிவிட்டு, திரும்பிப் போய்விடுகிறாய். நான் டூசானில் ஒன்றரை மணிக்கு இருக்க வேண்டியவனாயிருக்கிறேன். நாம் அப்படியே அதுபோல இங்கே சந்தித்து, ஒருவர் கையை ஒருவர் குலுக்கி விட்டு, "எப்படியிருக்கிறீர்கள், உன்னை சந்தித்திலே சந்தோஷம்" என்று கூறிவிட்டு போய் விடுவோம். ஆனால், உனக்குத் தெரியுமா? நாம் சந்திக்கப் போகிற ஒரு நாளைக் குறித்து சிந்திக்கிறேன், அங்கே நாம், "போய் வருகிறேன்" என்று சொல்ல மாட்டோம். நாம், "உன்னை பார்ப்பது இதமாக இருக்கிறது, நீ மறுபடியும் வருவாய் என்று நம்புகிறேன் என்று சொல்ல மாட்டோம். இங்கே, நாம் ஒன்று சேர்ந்து இருக்க இரண்டு, மூன்று மணி நேரத்தை கணக்கிடு வோமானால், அங்கே . நாம் உட்கார்ந்து ஒரு பத்து லட்சம் வருஷங்கள் பேசலாம், அதாவது அங்கே நேரம் என்று ஒன்று இருந் தால். மேலும், நாம் உட்கார்ந்த பொழுது இருந்ததை விட நேரம் குறைந்து போகாது. அது நித்தியமாயிருக்கும், அதற்கு அங்கே முடிவே இல்லை. மேலும், நாம் தேவனுடைய மகாபெரிய பரதீசின் பலகணிகளின் வழியே நடந்து செல்லவும், தூதர்கள் வாழ்த்திப் பாடவும் கூடிய அந்த நேரத்தை நினைத்துப் பார்ப்பது எப்படி யிருக்கிறது! 9. நாம் யுத்தத்தை ஜெயிக்கும் நோக்கத்துடன் சண்டை யிடவும், பிறகு உலகத்தின் காரியங்களை மேற்கொள்ளவும் அவசிய மான காலம் இதுதான். மேலும், அங்கே , எந்த சண்டையும் இருக் காது. கடைசி ஜெபமானது செய்யப்படுகிறது. நான் ஜெபக் கூட்டங் கள் நடத்த வேண்டிய அவசியமிருக்காது. அங்கே ஜனங்கள் இரட்சிக்கப்படும்படியான வாய்ப்பு இல்லாமல் போகும். அங்கே சுகப்படுத்தும்படியான வியாதிகள் இல்லாமல் போகும். அது, அப்படியே ஒரு பெரிய மகிமையுள்ள காரியமாயிருக்கும். மேலும், நம்மால் கூடியது என்ன? மனுஷ ஜீவன்கள் என்ற நிலையில் இன்று காலையில் நாம் என்ன வாக்கு கொடுக்க முடியும்? அந்த நேரத்திற் கான வாக்குத்தத்தத்தை நோக்கிப் பார்ப்பதைக் காட்டிலும், ஏதாகிலும் பெரியதாயிருக்கக் கூடிய, எதையுமே, நாம் எதை நோக்கிப் பார்க்க முடியும்? 10. நாம் காலங்கள் மாறிப் போவதை நோக்கிப் பார்க் கிறோம். தங்கள் தாயின் மடியிலிருக்கும் பால் குடிக்கும் குழந்தைகளையும், சின்ன பள்ளிக் கூட சிறுவர்களையும், வாலிப ஆண்களையும் பெண்களையும், அதற்கு பிறகு நடுத்தர வயது, அதற்கு பின்பு, வயோதிபத்தையும் பார்க்கிறோம். பள்ளிக்கு போகும் பையன், போன வருடம் அவன் தன் தாயின் மடியில் பால் குடிக்கின்ற குழந்தையாயிருந்தான். பிறகு, வாலிபனானவன் போன வருடம் தான் பள்ளிக்கூடத்தில் சேர்ந்ததைப் போல இருக்கிறது. பிறகு, வாலிப வயது, நடுத்தர வயதாகிறது. பிறகு, வயோதிபம் என்று தொடரு கிறது. - ஒரு வாயு பூமியின் மீது பறந்து விழுந்து விடுகிறதைப் போல. சாலொமோன் சொன்னதைப் போல, இது ஒரு புஷ்பத்தைப் போல் இருக்கிறது. இது எழுந்து வளர்கிறது, அது வெட்டப்பட்டு, அழிந்து போகிறது. நாம் இங்கே இருக்கப் போகிற நேரத்தின் பலனை நாம் ஆதாயப்படுத்த விரும்புகிறோம். ஆகவே, இப்போது, நம்முடைய தலைகளை ஜெபத்திற்காக வணங்குகையில் அவருடன் பேசுவோமே? மேலும் இங்கே , ஜெபத்தின் போது நினைவுக்கூரப்பட வேண்டும் என்று யாராவது விரும்பினால், உதாரணமாக, வியாதி யாயிருந்த தேவைகள் இருக்கலாம், நீ அதை அப்படியே தேவனிட மாய் தெரிவிப்பாயானால், "இப்போது கர்த்தாவே, நான் இந்த விண்ணப்பத்தைக் கேட்க தான் உள்ளே வந்தேன் என்று சொல். நான் அறிந்து கொள்ளும்படியாகச் சிறிது அப்படியே உங்கள் கரங்களை உயர்த்தி, "என்னை நினைவுகூருங்கள்" என்றுச் சொல். கர்த்தர் உன்னை அதிகமாக ஆசீர்வதிப்பாராக. 11. "உம்முடைய வார்த்தையினாலே வானங்களையும், பூமியையும் உருவாக்கினவராயிருக்கிற சர்வ வல்லமையுள்ள தேவனே! இன்றைக்கு இங்கே, இன்று காலையில் இந்த வார்த்தை யைப் பற்றியும், வார்த்தையாகவே இருக்கிற ஒரு மகாப் பெரிய வரைப் பற்றியும் பேச வந்திருக்கிறோம். இந்த பாலைவனத்தின் பின் புறத்திலே, மறுபடியும் கூடி வரும்படியான இந்த பிரமாதமான சிளாக்கியத்தற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இது இங்கே தானே ஒரு நாள் ஓடி போய் விட்ட ஒரு தீர்க்கதரிசியின் கவனத்தை, ஒரு பற்றியெறிகிற முட்புதர் இழுத்தது. மேலும் அங்கே தானே அவன் தேவனாலே புதிதாக கட்டளையிடப்பட்டு, அனுப்பப்பட்டு அடிமை தளத்திலே கிடந்த தேவனுடைய சுதந்தரமான அந்த நாட்களிலிருந்த மக்களுக்கு, ஒரு மகாப் பெரிய மீட்பராக மாறினான். மேலும், ஓ! மகத்துவமான தேவனே!! நீர் இன்று காலையில் எங்க ளோடு கூட, பாலைவனத்தின் பின்புறத்திற்கு வரமாட்டீரா? நாங்கள் அறிகிறபடி நீர் உலகத்தில் சுற்றில், பெரிய தலைமை தேவால யங்களிலும் நீர் இருக்கிறீர் , ஆனால் நீரோ அளவுக்கு அப்பாற்பட்ட தேவன் என்று அறிந்திருக்கும் பட்சத்தில், எந்த இடமும் உமக்கு அளவுக்கு மிஞ்சி சிறிதானதல்ல, அல்லது இந்த பூமியின் பரப்பின் மீது நாங்கள் எவ்வளவு அதிகமாய் சிதறடிக்கப்பட்டிருந்தாலும், ஆயினும், சர்வ வியாபியாகிய உம்மால் எல்லா சமயங்களிலும், எல்லா இடங்களிலும் இருக்க முடியும். இதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். ' 12. மேலும், இந்த கூடி வருதலிலே, இன்றைக்கு காலையில், நம்முடைய சகோதரனுக்காகவும், அவருடைய சிறிய மந்தைக் காகவும், மேலும் அவர்களுடைய மன தைரியத்திற்காகவும், அவர் கள் இன்றைக்கு இந்த பூமியின் மேல் தேவனுடைய காரியத்தில் காண்பிக்கும் உண்மையான ஆதரவுக்காவும் உம்மை ஸ்தோத்தரிக்கிறோம். உம்முடைய ஆசீர்வாதங்கள் அவர்கள் மேல் வரும்படியாக வேண்டுகிறோம். கிறிஸ்துவுக்காக விருப்பமுள்ள ஒரு இருதயம் இருக்கும் வரையில் அங்கோ , எங்கேயாவது, ஒரு செய்தியாளனும் இருந்து, அந்த பசித்த ஆத்துமாவுக்கு செய்தியை கொண்டு வரட்டுமேன். மேலும், பரலோக பிதாவே, இப்போது தங்கள் கரங் களை உயர்த்திய மக்களுடைய தேவைக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்களுடைய கரங்களுக்கு கீழே, இருதயத்தை சூழ்ந்து துடித்துக் கொண்டிருப்பது என்னவென்று உமக்கு தெரியும். அவர்களுக்கு ஒரு தேவை இருக்கும். அது வியாதியாக இருக்குமானால், கர்த்தாவே, இதோ நாங்கள் பேசிக் கொண்டிருந்தபடி, பால் ஷார்ரிட்ஜ் சில மணி நேரங்களுக்கு முன்னே தூக்கி எடுத்தவராகிய நீர், எல்லா மருத்துவ விஞ்ஞானத்தாலும் நிறுத்த முடியாததாய் பற்றி எரிகிற ஜுரத்தினால் அவன் சாவுக்கும், வாழ்வுக்கும் மத்தியில் கிடந்த போது. இருந்த போதும், ஒரு சிறிய ஜெபமானது மாத்திரமே அந்த சுரத்தை உடனே நிறுத்தியதே! நீரேயேகோவா தேவன். இன்றைக்கும் கூட நீர் அந்த அளவிற்கு பிரதிநிதித்துவம் உடையவரென்றும், அந்த அளவிற்கு உண்மையாகவே, இங்கே, இந்த பாலைவனத்தின் பின் புறத்திலே, அன்றைக்கு மோசேயுடனே அந்த வனாந்தரத்தின் பின் புறத்திலே இருந்ததைப் போலவே இருப்பதை காண்பிப்பீராக. 13. நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஏனென்றால், நீர் ஜெபத்தை கேட்பீர் என்று நான் அறிவேன். நாங்கள் வெறுமனே எங்கள் உள்ளங்களிலே கற்பனை செய்யும் காரியங்களைக் கேட்பது தவறாக இருக்கும் என்றறிந்தவர்களாய் மிகவும் தாழ்மையுடனும், மிகவும் உண்மையுள்ளவர்களாகவும் உம்மிடத்திலே வருகிறோம். அதாவது, நாங்கள் கேட்பது எதுவோ அதை நாங்கள் கட்டாயம் விசுவாசிக்க வேண்டும், மேலும் நாங்கள் எங்களுக்குத் தெரிந்த எல்லாவற்றையும் கொண்டு எங்கள் இருதயங்களில் தானே, அதைக் கொடுப்பது தேவனுடைய சித்தமாய் இருக்கிறது என்று முடிவு எடுத்தவர்களாக நாங்கள் அதிசிரத்தையும், அதி நிச்சயமும் உடைய வர்களாயிருக்க விரும்புகிறோம், கர்த்தாவே! ஆகவே, இன்றைக்கு காலையில் இங்கேயுள்ள ஒங்வொரு வியாதியஸ்தரையும் சுகப் படுத்துவீர் என்று நான் ஜெபிக்கிறேன். இழந்து போன ஒவ்வொரு வரையும் இரட்சியும். இதைத் தந்தருளும். இன்றைக்கு ஏதாகிலும் சொல்லப்படவும் அல்லது செய்யப்படவும், அவர்கள் நிற்கும், உட்கார்ந்திருக்கும் இடத்தில் தானே அல்லது வேறு எங்கு இருந் தாலும் தேவனுடைய விசுவாசமான நங்கூரமானது அவர்களுடைய இருதயங்களுக்குள்ளே நகர்ந்து வரக் காரணமாயிருக்கட்டுமேன், அது முழு முடிவாக இதை அவர்களுக்கு நிலைப்படுத்தட்டுமேன். அனுக்கிரகம் செய்யும் பிதாவே! 14. இங்கே இந்தக் குடியிருப்பை ஊழியத்திற்காக வைத்திருக்கிற சகோதரனை ஆசீர்வதியும், இப்போது உம்முடைய வார்த்தையின் மூலமாய் எங்களுடன் பேசும். ஏனெனில் நாங்கள் அதற்காக தான் இங்கே கூடி வந்திருக்கிறோம். கர்த்தாவே! நாங்கள் ஒருவரோடொருவர் கொள்ளும் ஐக்கியத்தை நேசிக்கிறோம். ஆனாலும் நாங்கள் வேண்டும் என்பது நீர் தான் கர்த்தாவே! நாங்கள் அங்கே வெளியே போய் மரத்தடியில் உட்கார்ந்து ஒருவரோ டொருவர் பேசிக் கொள்ளலாம், ஆனால் இங்கேயோ, உம்மிடத்தில் தயை காண்பதற்காகக் கூடி வந்திருக்கிறோம். கர்த்தாவே, இப் போது நீர் எங்களோடு இடைப்பட மாட்டீரா? எங்களுடைய இருதயங்களிலே உமக்கு ஒரு ஆசனத்தை வழி செய்வீராக! அதிலே நீர் அதிகாரத்துடன் அமர்ந்து பேசி, இன்றைக்கு எங்களுக்கு தேவைகள் என்ன என்று சொல்வீராக! மேலும், நாங்கள் எங்கள் அன்பை உமக்கு எடுத்துக் காண்பிப்பதைப் போல, உம்முடைய அன்பும் எங்களுக்கு எடுத்துக் காண்பிக்கப்படட்டுமேன். இதை நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறோம், ஆமென்! 15. இப்போது, நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த காலங்கள் பிரமாதமான காலங்கள் ஆகும். நான் இன்றைக்கு என்னச் சொல்லப் போகிறேன் என்று நேற்று சிந்தித்துக் கொண்டிருந்தேன், இங்கே வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த சிறிய ஜெபக் கூட்டத்திற்கு வருவதை நான் என்ன சொல்லப் போகிறேன்? மேலும், நான் கர்த்தரிடத்தில் எனக்கு உதவும்படியாய் கேட்டேன். உங்களுக்கு எடுத்துச் சொல்லும்படியாய், ஒரு வேதப் பாடத்தின் மேல் சில குறிப்புகளை எடுத்துக் கொண்டேன். நாம் கர்த்தருடைய ஆசீர் வாதங்களுக்காக காத்திருக்கையில், நீ உன் இருதயத்தை திறந்து, புரிந்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகிறோம். மேலும், கிறிஸ்துவினுடைய மிக லேசான தட்டுதல் உன் இருதயத்தின் மேல் விழுமானால் - ஞாபகமிருக்கட்டும் - நீ ஒரு விசுவாசியாய் இல்லா விட்டால், இது வரையில் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளவேயில்லை என்றால், - உனக்கு நிகழ்ந்த காரியங்களிலேயே இது ஒரு மகா பிரதானமான காரியமாயிருக்கும், - நீ இந்த வீட்டில் இன்று காலையில் கூடி வந்திருப்பது. அந்த தட்டுதல் உன் இருதயத்திறிகு வரும்போது, நீ அதை ஏற்றுக் கொள்வாயானால், அது ஜீவனுக்கு போகும் வாசலாய் இருக்கும். அதை மறுப்பதென்பது மரணமாகும். மேலும், விசுவாசிக்க முடிந்த எல்லா விசுவாசிகளுக்கும் ஒரு திறந்திருக் கிற கதவு உண்டு என்று காண்பிக்கத்தான் நாம் இங்கே இன்று காலையில் வந்திருக்கிறோம். 16. இப்போது நான், இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாட்டின் புத்தகத்தில் இருந்து வாசிக்க விரும்புகிறேன், 15வது அதிகாரம், ஒரு சிறு பாகத்தை நான் வாசிக்க விரும்புகிறேன். வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் 15-ம் அதிகாரத்தின் முதல் நான்கு வசனங்கள். "பின்பு வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழுவாதைகளையுடைய ஏழு தூதரை கண்டேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிகிறது. அன்றியும், அக்கினி கலந்த கண்ணாடிக் கடல் போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக் கொண்டு அந்த கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன். அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும், ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான் களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுது கொள் வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள் . 17. கர்த்தர் சித்தம் கொண்டால், நான் அதிலிருந்து ஒரு வேதப்பாடத்தை எடுத்து, அதை வெற்றியின் நாள்" என்று அழைக்க விரும்புகிறேன். வெற்றியின் நாள் - நாம் அடையாளப் படுத்துவதுப் போல - ஒரு முடிவான ஜெயம். 18. நாம் இப்போதுதானே படித்த அதிகாரத்தில் உள்ள மக்கள் அப்போதுதான் ஜெயத்தைப் பெற்றிருந்தார்கள். ஜெயம் என்பது ஒரு பெரிய வார்த்தை என்று நம்புகிறேன். அது, நீசத்துருவை தோற்கடித்தால், நீ மேற்கொண்டு ஜெயவீரனாய் ஜெயத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறாய் என்று அர்த்தமாகிறது. மேலும், நாம் ஜெயத்திற்காக பாட்டுக்கள் பாடி ஆர்ப்பரிக்கிறோம். மேலும், இங்கே . இந்த ஜனங்கள் அந்த கண்ணாடியும் அக்கினியும் கலந்த சமுத்திரத்திற்கு ஏதோ ஒரு காரியத்தினண்டையில் வந்திருக் கிறார்கள் என்று பார்க்கிறோம். ஆகவே, அவர் மிருகத்தின் மீதும், அவனுடைய சொரூபத்தின் மீதும், அவனுடைய நாமத்தின் முத் திரையின் மீதும் வெற்றி கொண்டார். இந்த காரியங்கள் எல்லாம். அவைகளின் மேல் இவர்கள் வெற்றிக் கொண்டு, மறுபக்கத்திலே, அக்கினி கலந்த கண்ணாடிக் கடலின் மீது நின்றுக் கொண்டு, சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு வாழ்த்துப் பாடில்களைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். 19. இப்போது, வெற்றியைப்பற்றி பேசுகையில், "வெற்றியின் நாள் போன்றவைகளும் நாம் வெற்றியின் நாளை நினைக்கும்போது அது நம்மை யுத்தத்தைப் பற்றிய சிந்தனைகளுக்கு திரும்பவும் கொண்டு வருகிறது. இதோ சமீபத்தில், கடந்த சில வருடங்களில் யுத்தத்தின் வெற்றியின் நாள் என்று அழைக்கப்பட்ட ஒரு நாளுக்கு நாம் வந்தோம். அங்கேதானே, எதிரியின் மீது நாம் ஜெயத்தை அடைந்தோம். அதைக் குறித்து நாம் சிந்திக்க வேண்டியிருப்பது மிகவும் வருந்தத்தக்கதுதான். ஆனால், நீதிமானான ஆபேலின் இரத்தம் தொடங்கி இந்த உலகமானது மனித இரத்தத்தினால் ஊறிப் போய் உள்ளது. உலகத்தை தாக்கிய முதல் மனித இரத்தம் நீதிமானான ஆபேல்தான். அவன் தன்னுடைய இரத்தத்தை சிந்தி யாக வேண்டியது எதினால் என்றால், அவன் விசுவாசத்தினால் தேவனுக்குப் பாவபரிகார பலியாக இந்த ஆட்டுக்குட்டியை செலுத்தினான். தேவனும் அவனுடைய பலியை ஏற்றுக் கொண்டார். ஏன்? காரணத்தினால்தான், அவனுடைய பொறாமையுள்ள சகோதரன், அவன் மேல் பொறாமைக் கொண்டு, நீதிமான் ஆபேலை கொலை செய்தான். மேலும், அதினிமித்தம் அது பூமியின் மீது எல்லா மனித இரத்தமும் ஊற்றப்பட காரணமாயிற்று. இந்த பழைய பூமியானது நிச்சயமாய் உலகம் முழுவதிலும், இதினால், மனித இரத்தத்தினால் ஊறியிருக்கிறது. 20. அதற்கு ஒரு காரணம் உண்டு. இந்த மனித இரத்த மானது சிந்தப்பட்ட காரணம் ஏதோ ஒன்று இருந்தது. அதினால் முதலாவது காரணமானது. பொறாமையினாலே என்று நாம் காண்கிறோம். தேவன் ஆபேலின் பலியை ஏற்றுக் கொண்டக் காரணத்தால் காயீன் ஆபேலின் மீது பொறாமைக் கொண்டான். எபிரேயர் 11ம் அதிகாரம், "விசுவாசத்தினாலே ஆபலே காயீனுடைய பலியிலும் மேலான பலியை தேவனுக்கு செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான்” என்று நமக்கு சொல்லு கிறது. காயீனோ இதைப் பற்றி பொறாமை கொண்டவனாக இருந் தான். ஏனெனில், அவனுடைய பலியானது நிராகரிக்கப்பட்டு, ஆபேலின் பலியோ ஏற்கப்பட்டது. ஆபேல் இதை, விசுவாசத்தைக் கொண்டு செய்தான். வேதாகமம், அவன் இதை விசுவாசத்தின் மூலமாக செய்தான் என்று சொல்லிற்று: 21. இந்த இரண்டு பையன்கள் தேவனிடத்தில் தயைப் பெறவும், தாங்கள் ஜீவனின் தோட்டத்திலிருந்து வந்து கொஞ்ச காலம்தான் ஆயிற்று என்று அறிந்திருந்து திரும்பி வரவும் முயற்சிப்பதைக் காண்கிறோம். மேலும், அவர்கள் தங்களுடைய பெற்றோர்களின் மீறுதலின் நிமித்தம் மறுபக்கமாய் விழுந்து போய் மரணத்திற்கு அடிமைகளாய் இருந்தார்கள், இந்த காலையில் நாம் எல்லோரும், மரணத்திற்கு அடிமைகளாய் நிற்கிறோமே, அதைப் போலவே. அவர்கள் மறுபடியும் ஜீவனைக் கண்டு அடையத்தக்கதாய் அந்த இடத்திற்கு திரும்பவும் போவது எப்படியென்று அறிய விரும்பினார்கள். இப்படி செய்தவர்களாய் அவர்கள் தேவனிடத்தில் தயவைப் பெற முயற்சித்தார்கள். எனவே காயீன் மலர்களையும் வயலின் கனிகளையும், மற்றும் அதிலிருந்த வேறு எல்லாவற்றையும் கொண்ட ஒரு அழகான பலியை செலுத்தி, அவன் அதை பலிபீடத்தின் மீது வைத்தான். ஆனால், ஆபேல் ஆவிக்குரிய வெளிப்பாட்டைக் கொண்டு, மரணத்தைக் கொண்டு வந்தது வயலின் கனிகள் அல்ல என்றும், மரணத்திற்கு காரணமாயிருந்தது இரத்தம் என்றும் அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. ஆகவே, குற்றமில்லாத ஒரு பலியின் இரத்தத்தை பதிலுக்கு செலுத்தினான். தேவனும் அதை ஏற்றுக் கொண்டார். 22. அந்த குறிப்பிட்ட நாள் தொடங்கி இதுவரையிலும், அதுதானே நம்முடைய பாவங்களுக்காக தேவனுடைய பரிகாரமாக இருந்து வருகிறது. வேறே வழி இல்லை, எனெனில், அவர் வேறு அடிப்படையில் அதை ஏற்றுக் கொண்டிருந்தால், அப்படியானால் நாம், தேவனிடத்தில் தயவைப் பெற, அந்த அடிப்படையின் மூலமாகத்தான் வரவேண்டியிருக்கும். ஆனால், தேவனோ ஒரு குற்றமில்லாத பலியின் குற்றமில்லாத இரத்தத்தை மாத்திரம் ஏற்றுக் கொண்டார். ஆகையினாலே, இந்த பெரிய ஸ்தலங்களின் அழகானது தேவனுடைய ஏற்றுக் கொள்ளுதலாக இருக்குமானால், இன்றைக்கு . நாம், "அவர் மறுபடியுமாக பாலைவனத்தின் பக்கமாக , இரயில் தண்டவளாத்தின் பக்கமாக உள்ள இந்த சிறிய குடியிருப்புக்கு வருவாரோ? அவர் இங்கே திரும்பி வந்து நம்மை சந்திப்பாரோ?" என்று சந்தேகப்பட்டுக் கொண்டிருப்போம். 23. ஆனால், இது, காயீன் செலுத்திய அழகாகிய ஒரு பெரிய கோபுரங்களுள்ள தேவாலயமாக இருந்திருக்குமானால், ஏன், நாம் நம்முடனே கூடவும், காற்றிடத்திலும் பேசுகிறவர்களாகவும் காணப்படுவோம். ஆனால், தேவனானவர் சிந்தப்பட்ட இரத்தத்தின் அடிப்படையில் வந்தார். ஆகவே, இன்றைக்கு நாம் எவ்வளவு ஏழையாக இருந்தாலும், இன்னும் ஒரு பெரிய இடத்தை தேவனுக்கு கொடுக்க நாம் எவ்வளவாக ஆசைப்பட்டாலும் பரவாயில்லை, இப்போது அவர் ஏற்றுக் கொள்வதைக் காட்டிலும் கூடுதலாக அவர் ஏற்றுக் கொள்ளமாட்டார். ஏனென்றால், நாம் ஒரு குற்ற மில்லாத பலியின் இரத்தத்தின் அடிப்படையில் வருகிறோம். அது தான் பாவிகளாகிய நமக்கு ஜீவனைக் கொடுக்கிற கிறிஸ்துவாய் இருக்கிறது. 24. இந்த இரத்தமானது சிந்தப்பட்டதின் காரணம் இதுதான்; தேவன் பார்க்கும்படியாக மனுஷனை அழைக்கிறார். ஆனால், மனிதனோ தன்னைக் காண்பித்துக் கொள்ள விரும்புகிறான். மனிதனோ தன்னுடைய சொந்த ஆலோசனையின் அடிப்படையிலே, தேவன் தனக்கு காண்பிக்க முயற்சிக்கிறதை பார்க்க விரும்புகிறான். தேவன் மனிதனுக்கு எதையோ காண்பிக்க முயற்சிக்கிறார், ஆனால் மனிதனோ, அதை. தான் பார்க்கிற விதமாகவே ஏற்றுக் கொள்ள விரும்புகிறான். ஆனால் இது, எந்த ஒருவரும் ஒரு காட்சியைக் காண்பிக்க விரும்பு வதைப் போலவே இருக்கிறது. இந்த காட்சியை காண்பிக்க விரும்புவதற்கு ஒரு காரணம் இருந்தாக வேண்டும். நீ, "அங்கே அந்த மலையைப் பார்” என்று சொல்வாயானால், இப்போது. உன் கவனத்தைத் தொட்ட ஏதோ ஒன்று அங்கே உண்டு. ஆகவே நீ அற்த மலையைப் பார்க்கும்படியாக என்னிடம் சொல்கிறாய்; அல்லது "இந்த மரத்தைப் பார்". புரிகிறதா? அந்த மரத்தைப் பற்றி எதையோ நான் பார்க்க வேண்டும் என்று நீ விரும்புகிறாய். 25. இப்போது, தேவனானவர், திரும்பிவரும் ஒரு வழிக் காக மனுஷனை அந்த குற்றமில்லாத பலியை நாட வைக்க முயற் சிக்கிறார். மனுஷனே அதை நோக்கி தன்னுடைய சொந்த விதத்தில் பார்க்க விரும்புகிறான். இந்த குற்றமில்லாத மனிதனுக்கு பதிலாக அடிக்கப் பட்ட பலியிலே தேவன் அவனுக்கு காண்பிப்பதைப் பார்க்க அவனுக்கு விருப்பமில்லை. ஆகையினாலே, அதுவே தொல்லைக்கு காரணமாயிற்று. ஆயினும், மனிதன் அதை செய் தாலும் - கண்ணாடியை எடுத்து தூரமான இடத்தை குறிவைத்து தேவன் தனக்கு காண்பிக்க முயற்சிப்பதை அவன் பார்த்தாலும், தன் கண்ணாடியை சரியாக குறி வைக்கத் தவறுகிறான். 26. நீண்ட காலத்திற்கு முன்னே மலைகளுக்கு பிரயாணம் போய்விட்டு, சாலையில் வரும்போது யாரோ ஒருவர், "இதோ, இந்த கண்ணாடியை எடுத்து அதோ அங்கு ஒரு குறப்பிட்ட பொருளைப் பார்", என்று சொன்னார். நல்லது, நான் கண்ணாடியை எடுத்து மூன்று அல்லது நான்கு வித்தியாசமான பொருள்களைக் கண்டேன். நீ பார்த்தாயா, அதில் ஏதோ தவறுண்டு என்று நான் தெரிந்து கொண்டேன். இந்த வயலில் நின்று கொண்டிருந்த கலை மான்கள். அங்கே, அவைகள் மூன்று அல்லது நான்கு ஒன்று சேர்ந்து நின்று கொண்டிருந்தன. அது என்னவாயிருந்தது என்று தெரியுமா? - அந்த கலைமான், மிகச் சீராக, அப்படியே ஒரு கலைமான் தான். கண்ணாடியும் நல்லப்படியாகத் தான் இருந்தது. ஆனால், நான் செய்திருக்க வேண்டியது என்னவென்றால், அந்த குறிவைத் தலை ஒழுங்குபடுத்தி அந்த மூன்று கலைமான்களும் ஒரே கலைமானாக தெரிய வைத்திருக்க வேண்டும், புரிகிறதா? அங்கே ஒரு கலைமான் தான் உண்டென்று நான் அறிவேன். ஏனென்றால், அப்படித்தான் எனக்கு சொல்லப்பட்டது. ஆனால், அந்த கண்ணாடியை எடுத்து அதின் வழியாய் பார்த்தால் நான் அங்கே மூன்று கலைமான்கள் நிற்பதைக் கண்டேன். அப்படி யானால், கண்ணாடியானது குறித் தவறி போயிருந்தது. நான் ஒரு கலைமானைப் பார்க்கும் அந்த ஒழுங்குக்கு வரும் வரையில் நான் அதை குறிப் பார்க்க வேண்டும். மேலும், அப்போது, நான் அது எப்படி காணப்படுகிறது என்று பார்க்கக் கூடும் வரையில் கண்ணாடியானது காட்சியை அருகாமை யில் கொண்டு வருகிறது. 27. இப்போது, தேவன் நமக்கு இந்த வேதத்தைத் தருகிறார். வேதாகமம் வார்த்தையாயிருக்கிறது, மேலும், வார்த்தை தேவனாயிருக்கிறது. அதுதான் நமது பைனாகுலர்ஸ், அதுதான் நம்முடைய கண்ணாடி. ஆனால், அப்போது, நாம் வேதாகமத்திற்குள் பார்க்கப் போய், நான்கு அல்லது ஐந்து வழிகளைப் பார்ப்போமானால், அது சரியாகக் குறி பார்க்க வேண்டியிருக்கிறது. புரிகிறதா? நாம் தேவனிடத்தில் ஒரே ஒரு பக்தியான நோக்கத்தைக் காணக்கூடிய இடத்திற்கு அதைக் கொண்டு வரவேண்டியவர்களாயிருக்கிறோம். ஆனால் மனிதனோ, ஒரு நிர்வாகத்தை தொடங்க விரும்புகிறான், இவ்விதமாக நடந்து ... மேலும் அடுத்தவன் என்ன விரும்புகிறான் என்றால்... "அப்படியானால் நான் அவனைக் காட்டிலும் பெரிய ஆளாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன். எனவே நான் "இங்கே" தொடங்குகிறேன். "நம்முடைய பையன்களுக்கு இன்னும் நல்லப் படிப்பை கொடுப்போம், பிறகு நாம் இதைச் செய்வோம்..." என்ன விதமாக, பார்த்தாயா? அவர்கள் கண்ணாடியைக் குறி வைக்கத் தவறி விடுகிறார்கள். தேவனானவர் அவர்கள் ஒரு காரியத்தைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார். அதுதான். அவர்களுடைய பாவங்களுக்காகச் சிந்தப்பட்ட குற்றமில்லாத இரத்தம். 28. அதுதான் மெய்யான காரியம். நமக்கு ஒரு நிர்வாகம் தேவையில்லை. எனக்கு அவர்களுக்கு எதிராக ஒன்றுமில்லை. ஆனால், அவர்கள் செய்விக்கும் சேதப்படுத்துதல் மாத்திரமோ , மக்களை வெளியே இழுப்பதும், சகோதரத்துவத்தைப் பிரித்துப் போடுவதும், மேலும் மற்றக் காரியங்களும். ஆனால் நாம் ஒரே காரியத்தை நோக்கிப் பார்ப்பது நமது தேவையாயிருக்கிறது. மேலும் அதுதான் அந்த நம்முடைய பதிலுக்கு வந்தவர். அந்த பதிலுக்கு வந்தவர் இயேசு கிறிஸ்துவாயிருக்கிறார். 29. மேலும், இன்றைக்கு நாம் எவ்விதமாக வளைந்து திருகிப் போயிருக்கிறோம் என்று நீ பார்க்கிறாய். மேலும் ஸ்தாபனங்கள் "மெதோடிஸ்டுகள் ஒரு எழுப்புதலை பெற்றுக் கொள்கிறார்கள். நிச்சயமாக, அது பாப்டிஸ்டுகள் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது, மெதோடிஸ்டுகள்தான் அது" என்று சொல்கின்றன. அடுத்தவர்களை எல்லா சமயங்களிலேயும் விலக்கிப் போடுகிறார்கள். ஆனால், நாம் அதை அந்த விதமாகப் பார்க்க விரும்புகிறதில்லை. அங்கே ஒரே தேவன் உண்டு என்று நாம் கண்டு கொள்ளும் வரையில் அந்த குறிப் பார்க்கும் ஆற்றலை நாம் செயல்படுத்திக் கொண்டே இருக்க விரும்புகிறோம். நீ அங்கே மூன்று பேரைக் காண்பாயாகில் நீ அந்த கண்ணாடியைச் சிறிது சீராகக் குறிவைப்பது நல்லது, எப்படி யென்றால், நீங்கள் ஏதோ தவறாக பார்க்கறீர்களே! நீ அதை உள்பக்கமாக கொண்டு வந்து, நாம் எல்லோரும் மேலாக ஒரே தேவன் உண்டென்று கண்டுபிடிப்பது நலமாய் இருக்கும். மேலும், அவர் மனித வர்க்கத்தின் தேவனாயிருக்கிறார். அவர் தேவனாக இருக்கும் பட்சத்தில், ஒவ்வொரு மனுஷ ஜீவன் மீது நாட்டம் கொண்டவராயிருக்கிறார். ஏனெனில், இது அவருடைய சிருஷ்டிப்பாக இருக்கிறது. மேலும் அவர் முதிர் வயதானவர்கள் மீதும், நடுத்தர வயதானவர்கள் மீதும் நாட்டமுள்ளவராயிருக்கிறார். அவர் நம்முடைய நிறங்களில் நாட்டமுள்ளவராயிருக்கிறார். வெள்ளையில், பழுப்பு நிறத்தில், கருப்பில், மஞ்சள் நிறத்தில் - நமக்கும், நம்முடைய முற்பிதாக்களுக்கும் உரிய தேசங்களின் பல்வேறு வித்தியாசமான தோலின் நிறங்களில் நாட்டம் உள்ளவராய் இருக்கிறார். அவர் நம் எல்லார் மேலும் நாட்டமுள்ளவராயிருக்கிறார். அவர் வெறும் யூதர்களின் மேல் மாத்திரமோ, அல்லது, மஞ்சள் வர்க்கம், கருப்பு வர்க்கம், வெள்ளை வர்க்கம் போன்ற ஒரு வர்க்கத்தினர் மீது மாத் திரம் நாட்டம் கொண்டவராக இருக்கவில்லை. அவர் முழு மனித வர்க்கத்தின் மீதும் நாட்டமுள்ளவராயிருக்கிறார், மேலும், அவர் மனித வர்க்கத்தை தமது வார்த்தையைக் கொண்டு ஒரு காரியத்தில் சரியாக குறி பார்த்து, "ஒரு தேவன் தான் உண்டு" என்று சொல்ல வைக்க முயற்சி செய்கிறார். மேலும் அந்த தேவனானவர், நமக்கு பதிலாக ஒரு குற்றமில்லாத பலியைக் கொடுத்து, பாவத்தை நீக்கி அப்புறப்படுத்தி, முழு மனித வர்க்கத்தையும் இரட்சிப்பதற்காக தாமே ஒரு மனிதனாக மாறினார். 30. யோவான், அந்த தீர்க்கதரிசி இதை மிகவும் அழகாக விளக்கிக் கூறினான், "இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி". யாராக இருப்பினும், முழு பாவத்தின் பிரச்சினையானது, சரியாக அங்கேதானே நமக்கு பதிலாக வந்த அந்த குற்றமற்ற பலியிலே தீர்க்கப்பட்டது. 31. ஆனால், மனிதன் தேவனுடைய பைனாக்குலரைக் கைக் கொள்ளத் தொடங்கும் பொழுது, இங்கேயோ , அவன் இயற்கை யானவைகளை அவ்வளவாக நோக்கிப்பார்க்கிறான், வார்த்தையானது கொடுக்கும் ஆவிக்குரிய அர்த்தங்களை அவன் பார்க்கத் தவறுகிறான். மனிதன் பார்க்க முயற்சிக்கும் போது அவன் செய்யும் பெரிய காரியங்களில் இது ஒன்றாகும், ஏனென்றால் காயீன் கண்ணாடியின் வழியாகப் பார்த்ததைப் போல அவன் பார்க்கிறான். அவன் ஒரு சுயசாதனையைப் பார்த்தான். காயீன் நினைத்தான், "இப்போது. ஆபேலை என்னண்டையில் இருந்து என்னால் அப்புறப்படுத்தக் கூடுமானால், அப்போது, நான் ஒருவன் மாத்திரம் இருப்பேன்' என்று. புரிகிறதா? அடுத்த நண்பனை அப்புறப்படுத்திப் போடு. அதைத் தான் மனிதன் வருஷங்கள் எல்லாம் தொடர்ந்து செய்ய முயற்சித் தான். தனக்கு தூரமாக அடுத்தவளை அப்புறப்படுத்துவது. அந்த அடுத்த நண்பனை தன்னுடனே கூட வழியிலே கொண்டு வரவேண்டிய வகை இருக்கும்போது, அதற்குப் பதிலாக, "ஓ , அந்த சின்ன கூட்டமா? அவர்களை அப்படியே பீறி வெளியேப் போடு . மேலும் இங்கே யுள்ள இந்த கூட்டம், அவர்கள் இப்படிப்பட்டவர்கள், அப்படிப் பட்டவர்கள்..." என்பது. புரிகிறதா? நாம் அதை செய்யக் கூடாது. நாம் அவர்களை ஒரே முழுமையான காட்சியின் அண்டையில், அதாவது இயேசுகிறிஸ்துவின் அண்டையில் கொண்டு வர முயற்சிக்கிற வர்களாக இருக்க வேண்டும். 32. நேற்று இரவு ஒரு வாலிப அம்மையார், ஒரு சிறிய காதல் விவகாரத்தில் ஈடுபட்ட ஒரு ஊழியக்காரரின் மகள், அதைக் குறித்து தன் மனத் தெளிவை இழந்திருந்தாள். மேலும், அவள் முறிந்துப் போன நிலைக்குப் போயிருந்தாள். ஒரு மிகவும் சவுந்தரிய முள்ள வாலிப ஸ்திரீ. சுமார் 23 வயதிருக்கும். அவள் சுமார் 12 வயதான சிறுமியாயிருந்த போது, அவள் சிக்காகோ அருகில் எல்கின் என்ற இடத்தில் இருந்தாள். மேலும், பார்க்கும் போது, பரிசுத்தாவியானது வார்த்தையைக் கேட்க வந்து இருந்தவர்களின் ஊடே சென்று, அவள் யார் என்று அழைத்து, மேலும், "நீ முறு முறுக்கிற இருதயமுள்ளவளா யிருக்கிறாய். டாக்டர்கள், நீ 15 வயது வரையில் உயிர் வாழ முடியாது என்று சொல்கிறார்கள். ஆனால் கர்த்தர் இவ்விதமாக உரைக்கிறார். நீ சுகமாக்கப்பட்டாய்," என்று சொல்லிற்று. 33. நேற்றிரவு, அவள் ஒரு வித்தியாசமான வகை இருதயத் தொல்லையை உடையவளாயிருந்தாள். அது ஒரு ஆவிக்குரிய இரு தயத் தொல்லை. அவளுடைய காதலன் பிரிந்து ஓடிப் போய், வேறு ஏதோ ஸ்திரீயைக் கல்யாணம் செய்து விட்டான். மேலும், இருப்பினும் அவள் இன்னும் கூட காதலித்துக் கொண்டிருந்தாள். இந்த பையனும், அவன் இன்னும் கூட அவள் மீது, காதல் உள்ளவனாக இருப்பதகாவும் மேலும் அவனுடைய தகப்பனார் இது நடப்பதற்கு காரணமாயிருந்தார் என்றும் சொல்லிக் கொண்டிருந்தான். புத்திக் கெட்டத்தனம்! அவன் அந்த அடுத்தப் பெண்ணைக் கல்யாணம் செய்துதான் ஆக வேண்டியிருக்கவில்லை!! அவன் அதை செய்தான், ஏனென்றால், உனக்காக சரியான விதமான அன்பைக் காண்பிக்க அவன் தவறிவிட்டான்' என்று நான் சொன்னேன். மிகவும் சரி!!! 34. ஆனால் பாருங்கள், அதிலேதானே எல்லாம் அப்படியே லயித்துப் போய் அங்கே அந்தப் பெண் அப்படிப்பட்ட ஒரு மயக் கத்தில் உட்கார்ந்திருந்தாள். ஆகவே, அவள், "ஓ! ஜானி என்னை நேசிக்கிறான் என்று எனக்குத் தெரியும்! எனக்குத் தெரியும்!!" என்றாள். 35. அவளால் பார்க்க முடிந்ததெல்லாம் அவ்வளவுதான். அந்த ஒரே சிறிய உலகத்தில் தனியாக அவள் வாழ்ந்தாள். அவள் அங்கேதானே தன்னை உருவாக்கிக் கொண்டாள். நான் அவளுடைய கரத்தைப் பற்றி கொண்டு, "நான் சொல்வதைக் கேள்..." என்றேன். அப்போது கர்த்தர் ஒரு தரிசனத்திலே, அவள் அறிந்திருந்த, நான் அறியாத ஒரு நிகழ்ச்சியை, அவர்களுக்கே நிகழ்ந்த ஏதோ விவா காரத்தை எனக்கு காண்பித்தார். மேலும் அது. சொல்லப்பட்டப் போது, அது அவளை மிகவும் துரிதமாக தெளிவித்தது. "இப்போது, நீ அங்கிருந்து வெளியே உள்ள சமயத்திலே, கல்வாரியை நோக்கிப் பார்! நீ அங்கே போய் இடிப்பதற்கு முயற்சிக்க ஆரம்பித்தாய். ஒரு ஊழிய்ககாரரின் மகள் ! ஒரு பெந்தேகொஸ்தே ஊழியக்காரரின் மகள்!! நீ செய்த அந்த காரியங்களைச் செய்து, அந்த மனிதனால் உண்டானத் துக்கத்தை மூழ்கடிக்க முயற்சி செய்தாய், தன் விரலின் சிட்டிகை அளவிற்கு கூட உன்மேல் அக்கரையில்லாத யாரோ ஒரு வனுக்காக" என்று நான் சொன்னேன். "அதோ அங்கே கல்வாரி யைப் பார் பெண்ணே !, அதுதான் திரும்பி வர ஒரே வழி". 36. நாம் நம்மைச் சரியாக குறிவைக்க வேண்டும். நாம் வாழ்கிறோமோ, சாகிறோமோ, மூள்கிறோமோ, மூழ்கி சாகிறோமோ, இது கல்வாரியாக, கிறிஸ்துவாக இருக்கிறது. அதனிடத்திற்கு தான் தேவனானவர் நாம் திரும்பி வர வேண்டும் என்று விரும்புகிறார். 37. அதன் பிறகு, தேவனுடைய வார்த்தையின் குறி வைப்பதிலே, அதை ஒருசேரக் கொண்டுவந்து, தேவன் அதைச் சொல்ல வைக்கும் ஒரே காரியத்தை சொல்ல வைக்காமல், நாம் இயற்கைக்குரிய பக்கத்தைப் பார்க்கிறோம். அப்படி செய்யும் படி யான மனிதன், தன்னைப் எப்படிப்பட்ட சூழ்நிலையில் கொண்டு சேர்க்கிறான் என்றால், அதாவது அவனுக்கு காண்பிக்கப்படுவதற்குப் பின்னே விரைந்து போய் விடுகிறான். "இதோ ஒரு வாய்ப்பு", நம்முடைய சிறிய குழு, நம்மால் இதைச் செய்ய முடியும், மீதியான அவர்களிடம் நமக்கு எந்த விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை," முதலாவதாக ஏதாவது காண்பிக்கப்பட்டது குறி வைத்து பார்த்து, அது நாம் ஒருவருக்கொருவர் பாவிக்க வேண்டிய சகோதர சிநேகம் என்றும், அது நாம் ஒருவரையொருவர் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றும், மேலும் ஒருவரோடொருவர் சேர்ந்து தேவனை ஆராதிக்க வேண்டியது என்று அறிந்துக் கொள்வதற்கு பதிலாக, அவர் ஒரு மனுஷனை, அவன் உடுத்தியுள்ள ஆடைகளினி மித்தமும், அவனுக்கு உள்ள கல்வியறிவினிமித்தமும், அல்லது அவனுடைய தோலின் நிறம் போன்றவைகளினிமித்தமும் அவனைக் கேவலப்படுத்துகிறார்கள். ஆகையால் அது மக்களைப் பிரிக்கிறது, மனுஷர்களோ அதன் பின்னாலே போய் விடுகிறார்கள். இது உள் ளான மனுஷன் கிரியைச் செய்வதற்கு ஒரு வாய்ப்பைத் தருவதேயில்லை. 38. நாம் மூன்று அம்சங்கள் ஒருங்கிணைந்த ஜீவன்களா யிலுக்கிறோம். ஆத்துமா, சரீரம், ஆவி, ஆனால் இயற்கையான உள்ள மானது, (உனக்குள்ளே கிரியை செய்கிற இரண்டு சக்திகள், உன்னுடைய உள்ளமும் ஆவியும் ஆகும். புரிகிறதா2) ஆக , மிகவும் மெருகு ஏற்றப்பட்ட உள்ளமானது தன்னுடைய புத்திசாலித்தனத் தினால் எதையாவது சாதிக்க முயற்சிக்க செய்யும். மேலும், அவன் அதைச் செய்யும் போது, அவன் தனக்குள்ளிருக்கும் ஆவிக்குரிய மனிதனை விட்டு தன்னைத் தானே தூர விலக்குகிறான். ஆக, தொல்லையை உண்டு பண்ணுவது அது தான். அதே சமயத்தில் தான், பார்த்தாயா? அவன் தானே அதைப் புரிந்துக் கொள்ள முயற்சி செய்தான்! சமீபக் காலத்தில் நான் இங்கே பேசியது போல, அது நம்முடைய கூடாரத்தில் என்று நினைக்கிறேன். அதாவது தேவனான வர் அவ்வளவு மகா பெரியவராயிருக்கிறார். ஆக, அவரால் மிகவும் | எளிமையாய் மாற முடியும். 39. இப்போது பார், நாம் மேன்மையுள்ளவர்களாக ஆகி விட்டால், நம்மால் எளிமையாக இருக்க முடியாது. நமக்கு அளவுக்கு அதிகமாக தெரிந்திருக்கிறது. "இது இப்படித்தான் இருந்தாக வேண்டும். நாங்கள் சொல்லுகிற விதமாக, இல்லாவிட்டால் அது சரியாகவே இல்லை! புரிகிறதா?” நல்லது, அந்த விதமாக இருக்கும் போது, நாம் தேவனை விட்டு விடுகிறோம். ஆனால், ஒரு மேன்மையான மனிதன் இன்னும் அதிகமாக, இன்னும் அதிகமாக கூடுமானால், அதிமேன்மையாகிக் கொண்டே இருக்கக் கூடுமானால், அவன் என்ன செய்யக்கூடும்? அவன் அப்படியே நேராக திரும்பி வந்து, அவ்வள வாய் தன்மையுள்ளவனாகவும் அவ்வளவாய் எளிமையானவனாய் ஆகி, அப்போது ஜனங்கள் அவனுக்கு மேலே நடந்து கடந்து போவார்கள், ஆனால், அதை அறியாமலிருப்பார்கள். புரிகிறதா? அவர்கள் மத்தியில் உள்ள மேன்மையான நபரது ! 40. நாம் செய்யும் அதே காரியம்தான். நாம் ஒரு மின் பொறியை அளவு எடுக்கிறோம். நாம் ஒரு அணுவை இரண்டாகப் பிளக்கிறோம், நாம் சந்திரனுக்கு ஒரு செய்தியை அனுப்புகிறோம், நாம் சாதாரண புல்லின் மேலாக நடந்து போகிறோம், அதைப் பற்றி எதுவும் அறியாதவர்களாயிருக்கிறோம், அது வாஸ்தவம்தானே! அந்த சிறிய புஷ்பம், அதை அந்த சிறிய விதைக்குள்ளே பூமிக்கு அடியில் மறைத்து வைத்து, அடுத்த வருஷம் அதை ஒரு புஷ்பமாக வெளியே கொண்டு வரும்படியாய் அந்த ஜீவனைக் கண்டுபிடிக்கவும், அது என்ன வென்று விளக்கிக் கூறவும் யாராலும் முடியாது. ஒரு சாதாரண புல் இணுக்கு, உலகத்திலுள்ள எல்லா விஞ்ஞானி களாலும் ஒரு கொத்துப் புல்லை, ஒரு இணுக்கை உருவாக்க முடி யாது. அவனால் அதை செய்ய முடியாது, ஏனென்றால் அது தனக்குள் ஒரு ஜீவனைக் கொண்டு இருக்கிறது. "தேவதூதர்கள் நடக்க பயப்படும் இடத்தில் முட்டாள்கள் லாடமடிக்கும் அணிகளோடு கூட காலணிகள் போட்டு நடப்பார்கள்” என்று சொல்வார்கள். அது மெய்யாகவே உண்மை தான். நாம் எளிமையான காரியங்கள் மேலே நடக்கிறோம், நாம் தேவனுக்கு மேல் நடந்து கடந்துப் போகிறோம். நாம் சாதாரணமான ஒன்றைத் தேடி, விசேஷமான ஒன்றின் மேலே நடக்கிறோம். இப்போது, அதுதான் விஷயம், புரிகிறதா? விசேஷமான ஒன்றின் மேல் நடப்பது. ஆக, நம்மால் நம்மை எளிமையாக்கிக் கொண்டு கீழே இறங்கக் கூடுமானால், அப்போது யாருமே அதோ அங்கே வெளியே உள்ள அந்த கொடியைக் கூட பார்க்க முடியாது. அது என்ன? தேவன்! அது என்ன? அது எரிமலை சாம்பலும், அதற்குள் ஒரு ஜீவனுமாயிருக்கிறது. திரும்பி, "அந்தப் பக்கமாகப் பார், அங்கே ஒரு வல்லமையான மரம் நிற்கிறது. Cottonwood என்று நம்புகிறேன். அது என்ன? அதுவும் எரிமலை சாம்பல். அதினுள் ஒரு வித்தியாசமான ஜீவன் இருக்கிறது. இந்த வகையான ஜீவன் ஒரு மரத்தை உருவாக்கியது. அந்த வகையான ஜீவன் ஒரு கொடியை உருவாக்கியது, புரிகிறதா? மேலும், நாம் என்னவாயிருக்கிறோம்? ஜீவன், அதற்குள் இருக்கும்படியான எரிமலை சாம்பல். நாம் எதுவாக இருக்கிறோமோ, அதுவாக நம்மை உருவாக்கியது. என்ன? நாம், சிறிது கூட "அதைக்" காட்டிலும் கூடுதலாக இருந்திருக்க மாட்டோம், ஆனால் தேவனானவர் நமக்குள்ளே நித்தய ஜீவனை வைத்தார், அப்போது நாம் தேவனுடைய பிரஜை களாய் ஆகிறோம். எனவே, அதினிமித்தம் நாம் வார்த்தையை தேவனுக்கு குறி வைக்கிறோம். 41. ஆனால், மனுஷனானவன், உள்ளான மனுஷனுக்கு எது சரியானது என்று விளக்கிச் சொல்ல வாய்ப்பைக் கொடுப்பதேயில்லை, அதுதான் தொல்லையை உண்டாக்குகிறது. 42. நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், அவன் இதைச் செய்யாவிட்டால் என்ன ஆகும்? அவனுடைய கோபம், காயீனைப் போல, வேகமாக பொங்கி எழும்புகிறது. அவன் பொறாமை அடைந்திருக்கிறான். தன்னுடைய தேயல்லாமல் தேவன் ஆபேலின் பலியை ஏற்றுக் கொண்டது அவனுக்குப் பிடிக்கவில்லை. அவன் தன் சொந்த பலியை விரும்பினான். அவன் தன்னுடைய சொந்த வழியை விரும்பினான். "ஓ! என் சகோதரனே! தேவன் ஏற்றுக் கொண்டதற்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். இப்போது நமக்கு ஒரு வழியை உடையவர்களாயிருக்கிறோம். அதாவது ஒரு வழியை யேகோவா ஏற்றுக் கொள்கிறார் என்று நாம் அறிகிறோம். ஏனென்றால், உன் பலியை பெற்றுக் கொண்டதின் மூலமாய் இதை அவர் நிரூபித்தார்" என்று ஆபேலிடத்தில் கடந்து வந்து சொல்வதற்கு பதிலாக ..... 43. - அதுதானே செய்திருக்க வேண்டிய காரியமாய் இருந்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக அவன் பொறாமைக் கொண்டான். இப்போது, அந்த அதே காரியத்தை உடைய மனிதர்களையும் நீ பார்க்கவில்லையா? அது அப்படியே அவனுடைய வழியாய் இருக்கிறது. புரிகிறதா? தேவனானவர் சத்தியம் என்று நிரூபிக்கும் வழியை ஒப்புக் கொள்வதற்கு பதிலாக, தேவன் தாமே சம்பவத்திற்குள் வந்து, "இதுதான்", "இந்த அடை யாளங்கள் விசுவாசிப்ப வர்களுக்கு கட்டாயம் நடக்கும்", "நான் உங்களோடும் உங்களுக்கு உள்ளும் இருப்பேன். இதோ சிறிது காலம் உலகம் என்னைக் காணாது. ஆகிலும் நீங்கள் என்னைக் காண்கிறீர்கள். ஏனென்றால், நான் உங்கள் உடனும் உங்களுக்குள்ளும் இருப்பேன். உலகம் என்னைக் காணாது. ஆனால் நீங்கள் காண்பீர்கள். காயீன் என்னைக் காணமாட்டான். ஆனால் ஆபேலே நீ என்னைக் காண்பாய்” என்று சொல்லுகிறார். 44. கடந்து வந்து "அருமையாயிருக்கிறது. தேவனானவர் மக்கள் மத்தியில் கிரியைச் செய்து வருவதை நாம் காண்கிறோமே. நாமும் அதைச் செய்வோம்" என்று சொல்வதற்கு பதிலாக, "கிடை யாது ஐயா! சடங்குகளுடனும் பொறாமையுடனும், காயீனிடமிருந்த அதே காரியம். அவன் தன் சகோதரனின் இரத்தத்தை வேண்டும் என்கிறான். பாதையில் இருந்து அவனை அழித்துப் போட முயற்சி செய்கிறான். நம்மை விட்டு அவர்களை அப்புறப்படுத்துங்கள்! அவர்கள் ஒரு பரிசுத்த பைத்தியக்கார கூட்டமே தவிர வேறெதுவுமில்லை!!" நான் சொல்வதின் அர்த்தத்தை நீங்கள் அறிவீர்கள். தொல்லையை தொடங்குவது அதுதான். தொல்லை ஆரம்பமாகும் இடம் அதுதான். 45. முறிக்கப்பட்ட சத்தியவாக்கு, அங்கேதானே உடைக்கப் பட்ட ஐக்கியம் பிரிவினையைச் செய்கிறது. குடும்பங்களை உடைக்கிற காரியம் அதுதான். அந்த வாழ்க்கை சக்கரத்தை விவாகரத்துக்களை நோக்கி நகரச் செய்வது அந்த காரியம் தான். சரியாக, அந்த காரியமேதான் ஐக்கியங்களை உடைக்கிறது. ஏதேனில்தானே, ஐக் கியத்தை உடைத்தது இதுதான், ஏனென்றால், தேவனின் வார்த் தையின் மேல் பார்வையை செலுத்தும் படியான குறிப்பார்த் தலிலே தவறியவளாய் ஏவாள், சத்துருவின் வாக்குவாதங்களுக்கு செவிக் கொடுத்தாள். அவள் மாத்திரம், "தேவன் இவ்விதமாகச் சொன்னார். அதுதான் அதற்கு முடிவு. தேவன் இவ்விதமாகச் சொன்னார்" என்பதை அவள் அப்படியே பற்றிக் கொண்டிருந்தால், எவ்வளவு நன்றாயிருக்கும்! ஆனால் அவள் அதைச் செய்ய விரும்பவில்லை! புரிகிறதா? அவள் தன் கண்ணாடியின் குறிப்பார்த்தலை மாற்றிப் போட்டு பார்க்கத் துவங்கினாள், புரிகிறதா? இப்போது சரிதான்! ஒருவேளை இந்த மனிதன் சொல்வது சரியாகத்தான் இருக்கும். ஒருவேளை அவன் சரியான ஆளாக இருப்பான். இப்போது, தேவன் சொன்னது சரியானது என்று நாம் அறிவோம். மேலும், "இவன் சொல்வதும் சரியாக இருக்கலாம். இது தேவன் சொல்லியிருக் கிறவைகளின் மேல் சிறிது கூடுதலான வெளிச்சத்தை காண்பிக் கிறதே தவிர வேறு ஒன்றுமில்லை" என்று அவள் நினைத்தாள். அப்போது, ஒரே ஒரு வழி மாத்திரமே இருக்க வேண்டிய தற்கு பதிலாக, இரண்டு வழிகள் அங்கே காணப்பட்டது. 46. நீ அதை பார்க்கிறாயா? இன்றைக்கும் இதே விதமாக தான் காரியங்கள் நிகழ்கின்றன. மிகச் சரியாக, அதே ஸ்தானத்திற்கு திரும்ப வருவது. புரிகிறதா? நீ இரண்டு ஆலோசனைகளை பார்க்கலாம். அங்கே இருப்பது ஒன்றே ஒன்றுதான்! அங்கே சடங்கு கிடையாது, தேவனுடைய வார்த்தையும், தேவனுடைய நோக்கமும், தேவனுடைய திட்டமும் தான். மற்ற எல்லாத் திட்டங்களும் நல்லவை அல்ல! ஏவாளும் கூட இந்த தீமையான காரியத்தைச் செய்தாள். எனவே அந்த காரணத்தின் நிமித்தம்தான், இன்றைக்கு தேவனானவர், தம்முடைய வார்த்தையிலே ஸ்திரீகள் ஊழியக்காரராயிருப்பதை அனுமதிப்பதே கிடையாது. இது வார்த்தையிலே அனுமதிக்கப்பட வில்லை, அவ்வளவுதான்! 47. இன்று காலையில் எங்கள் வீட்டில், காலையாகார மேஜை அருகில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். இங்கே சரியான நேரத்தில் வரும்படியாகவும், பிறகு வேறே ஒப்புக் கொடுக்கப்பட்ட ஊழியங்களுக்கு திரும்பி போவதற்காகவும் நாங்கள் புறப்பட விரும்பினோம். எனவே நாங்கள் மேஜையண்டையில் பேசிக் கொண்டிருந்தோம், பிறகு தேவ தூதர்களைப் பற்றி வார்த்தைகள் பேசப்பட்டன. என் சிறுப் பையன், ஜோசப், அங்கே உட்கார்ந்து தேவத் தூதர்களைப் பற்றி ஏதோ ஒன்றைச் சொன்னான். "இப்போது டாடி, தேவன் ஒரு மனிதனாய் இருக்கிறார், ஆனால் தேவத் தூதர்கள் மனுஷிகளாயிருக்கிறார்கள்" என்றான். "அப்படிப்பட்ட காரியம் ஒன்றும் இல்லை" என்று நான் சொன் னேன். அப்போது, என் மகள் சாராள், "ஆனால் டாடி, அவர்கள் பாவாடைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஸ்திரீகள் தான்!” என்று சொன்னாள். 48. "ஏதோ ஒரு மனோதத்துவவாதி அந்த படத்தை வரைந் தான்" என்று நான் சொன்னேன். வேதாகமத்தில் நீ ஒரு போதும் ஒரு தூதனானவன் "அவள்" என்றழைக்கப்பட்டதைப் பார்க்க வில்லையே! அது "அவன்” என்று இருந்தது. அவன், அவன், அவன்! "அவள்” அல்ல. ஒரு தேவத்தூதன் ஸ்திரீயாக இருப்பதாக ஒரு காரியமே இல்லை. வேதாகமத்திலே இருந்ததே கிடையாது. அங்கே ஜீவனுள்ள தேவனுடைய சபையில் கிடையாது - செய்தி கொண்டு வரும் ஸ்திரீ என்பதாக ஒரு காரியம் இல்லை! ஒரு தூதனானவன் ஒரு செய்தியாளனாய் இருக்கிறான். இதை தேவன் அனுமதிக்கவே இல்லை . ஏனென்றால், ஆதாம் முதலாவதாக உருவாக்கப்பட்டான். அதற்கு பிறகு, ஏவாள் உருவாக்கப்பட்டாள், மேலும் ஆதாம் வஞ்சிக்கப் படவில்லை, ஆனால் ஸ்திரியானவள் வஞ்சிக்கப்பட்டவளாய், மீறு தலிலே காணப்பட்டாள். ஆனபடியினால், பவுல், "உபதேசம் பண்ணவும், எந்த அதிகாரஞ் செலுத்தவும் நான் உத்தரவு கொடுக்கிறதில்லை. ஆனால், அவள் அமைதலாயிருக்க வேண்டும். நியாயப்பிரமாணமும் சொல்கிறப்படியே" என்று சொன்னார். 49. இப்போது, இதில் தானே, நம்முடைய பெந்தெ கொஸ்தே குழுக்கள் அதற்கு புல்லின் வேர்களாகயிருப்பதை நீ பார்க்கலாம். அவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? அவர்கள் அந்த குறிப்பை வைத்து, "இருக்கட்டும், இதோ , மின்னலைப் போல பிரசங்கம் செய்யவில்லை ஒரு ஸ்திரீ" அது சந்தேகமேயல்ல! சில பெண் பிரசங்கிமார்களால் பிரசங்கம் செய்ய முடியும். அது, ஒரு ஆண் பிரசங்கி அதனுடைய நிழலில் கூட நிற்க கூடாதபடியாக விருக்கும் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், கதியாய் இருக்கிறதோடு அதற்கு ஒரு சம்மந்தமும் இல்லை. பவுல் சொன்னார். "ஒருவன் அந்நிய பாஷைகளில் பேசும் போது அதற்கு வியாக்கி யானம் கூறுபவன் இல்லாமலிருந்தால், அப்போது அவன், மவுனமா யிருக்கக் கடவன்." நீ சொல்லலாம், ஆனால், என்னால் மவுனமாயிருக்க முடிய வில்லையே?" 50. ஆனால், வேதாகமானது உன்னால் முடியும் என்று சொல்லுகிறது. ஆகவே, அதுதான் காரியம் . புரிகிறதா? இது கிரம மாக செய்யப்பட்டு ஆக வேண்டும். சீராக வைக்கப்பட வேண்டும். தன் ஸ்தானத்தில் வைக்கப்பட்டு, மேலும் எப்போதும் அங்கேயே தன் ஸ்தானத்தில் நிலைத்திருக்க வேண்டும். அங்கே குறித்தவறிப் போவாய் ஆனால், மேலும் அது மனஸ்தாபங்களையும், பேராசையையும் போன்ற வைகளையும் உண்டாக்குகிறது. நாம் நம்மை வார்த்தையுடன் திருப்பும் படியாக குறிவைக்காமல், நாம் நம்மை வெளியேற்றும்படியாக குறி வைக்கிறோம். 51. இப்போது இது குடும்பங்களின் ஐக்கியத்தை உடைத் துப் போடுகிறதென்று நாம் காண்கிறோம். இது சபைகளின் ஐக்கி யத்தை உடைத்துப் போடுகிறது. இது, தேசங்களின் ஐக்கியத்தை உடைத்துப் போடுகிறது. அது அதே காரியம்தான். தேசங்கள் தங்களுடைய வழியையே செயல்படுத்த விரும்புகின்றன. ஜெர்மனி யானது, தங்களுடைய வழியை கடைப்பிடிக்கப்படுவதை காண விரும்புகிறது. ரஷ்யா தன்னுடைய வழியை மாத்திரம் பார்க்க விரும்பு கிறது. அமெரிக்கா தன்னுடைய வழியை மாத்திரம் பார்க்க விரும்பு கிறது, புரிகிறதா? அதுதான்! இது தேசங்களின் ஆவி என்று நீ காண்கிறாய். நீ எங்கே போனாலும் ஒரு தேசத்திற்குரிய ஆவியைக் காண்கிறாய். மேலும், அவர்கள் வித்தியாசமான வழிகளை வைத்திருக்கிறார்கள். இது எவ்வளவு ஆச்சரியம்! 52. நீ ஜெர்மனிக்குள் போவாயானால், நீ ஒரு இராணுவ ஆவியைக் காணலாம். எல்லா காரியங்களும் இராணுவமாய் இருக்கிறது. நீ நேராக நின்று, நேராக நடந்து, நேராக மூலைகளில் திரும்பி மற்றும் எல்லாம் ஆக வேண்டும். இது இராணுவமாய் இருக்கிறது. | 53. நீ பிரான்சுக்குள் போனால், ஒரு ஒழுக்கக் கேடான ஆவியை காணலாம். . வெறும் ஸ்திரீகளும், திராட்ச ரசமும், சாராயமும், மேலும் அது போன்ற காரியங்களைக் காணலாம். புரிகிறதா? 54. நீ பின்லாந்துக்குள் போனால், நீ அங்கே துரோகம் இல்லாத ஆவியைக் காணலாம். எல்லா காரியமும் உண்மை உள்ள தாய் இருக்கிறது. அவர்கள் எல்லாவற்றிற்கும் கிரயம் செலுத்தியாக வேண்டும். இது கட்டாயம் செய்யப்பட வேண்டும். அவர்கள் எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டியிருந்தாலும், அது எவ் வளவு விலையானாலும் பொருட்டல்ல, இது அப்படித்தான் இருந் தாக வேண்டும். 55. நீ அமெரிக்காவினுள் வருவாயானால், நீ ஒரு பெரிய ஹா, ஹா, ஹா, ஹா ஹாவைக் காண்பாய். இது அப்படித்தான் இருக்கிறது. அதுதான் அமெரிக்காவின் ஆவி! யாராவது ரேடி யோவிலே ஒரு அசுத்தமாக தமாஷ் காரியத்தை சொன்னால் எல்லோரும் அதற்கு சிரிக்கிறார்கள் - எர்னி ஃபோர்டும் (Ernie Ford), மற்றச் சிலரும், ஜோக் அடித்துக் கொண்டு - அல்லது Arthur Godfferyயும் அந்த கூட்டமும் - உங்களுக்கு புரிகிறதா? அதுதான் அமெரிக்காவின் ஆவி. நீ இதை அவ்விதமாகத்தான் காண்பாய். 56. பிறகு, அப்போதந்த ஆவிகள், மற்றொரு ஆவியின் மேல் பொறாமைக் கொள்கின்றன. பிறகு அவைகள் என்ன செய்கின்றன? அவைகள் யுத்தத்தை விளைவிக்கின்றன. அது சரிதான். 57. இப்போது, நீங்கள் பார்த்தீர்களா? ஒவ்வொரு தேசமும் சாத்தானால் ஆளப்படுகின்றன. வேதாகமம் அவ்விதமாகச் சொல்லு கிறது. அவன் தேசங்களின் கடவுளாயிருக்கிறான்! சாத்தான், இயேசு வானவரை மலையின் உச்சிக்கு கொண்டு சென்று, உலகத்தின் எல்லா இராஜ்யங்களையும் அவருக்கு காண்பித்து, எல்லா இராஜ்யங்களையும் ஒரு வினாடி நேரத்தில் காண்பித்து, "இவைகள் என்னுடையவை. நான் விரும்புகிற எதையும் நான் அவைகளுடன் செய்ய முடியும். அவைகளை உமக்கு கொடுத்து விடுகிறேன் - நீ என்னை வணங்கினால்" என்றான். 58. இயேசுவானவர், "என் பின்னாலே போ சாத்தானே!" என்று சொன்னார். அவர் அவைகளுக்கு. ஆயிரம் வருஷம் அர சாட்சியிலே சுதந்தரவர்ளியாவார் என்று அவர் அறிந்திருந்தார். ஆகவே, அவர் அவனை வணங்க வேண்டிய அவசியம் இல்லாம லிருந்தது. 59. இப்போது தேவனானவர் மறுபடியும் வந்து, தம்முடைய இராஜ்யத்தை ஸ்தாபிக்கும் போது, அங்கே வித்தியாசமான வகைகளான ஆவிகள் இருக்காது - ஒரு ஜெர்மானிய ஆவி, ஒரு பிரான்சு ஆவி, பிறகு ஒரு Norway ஆவி, மேலும் ஒரு அமெரிக்க ஆவி - இது அப்படியாக இருக்காது. இது ஒரே ஆவியாயிருக்கும், ஆமென். தேவனுடைய ஆவி எல்லா இருதயங்களிலும் ஜீவிப்பதாக இருக்கும். அது சரி, மேலும் அங்கே ஒரே கொடியும். ஒரே தேசமும், ஒரே ஜனமும் இருக்கும். தேவனுடைய பிதாவாக இருக்கும் கோதரர்களாய் இருக்கும் தன் மையுமே குமாரத்துவம். 60. நாம் காண்கிறதென்னவென்றால், அந்த ஜனங்கள் இதை செய்கிற காரணத்தால், மேலும் இந்த பெரிய விரோதங்கள் போன்றவைகளும் - இதை சாத்தான் ஆளுகைச் செய்யும் வரையில் அங்கே யுத்தங்களும், தொல்லைகளும் இருக்கத்தான் போகிறது. மத்தேயு 24-ல் "நீங்கள் யுத்தங்களையும், யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்" என்று இயேசுவானவர் சொன்னார். 61. ஏன்? உலகத்தின் அதிபதி, சாத்தான், தேசத்தின் பலமாய் இருப்பவனின் நிமித்தமே! இங்கே ஒரு தேசத்தின் ஆவி யுண்டு. இதோ ஒரு தேசத்தின் ஆவி, இது பிசாசுகளாயிருக்கிறது. அவர்களால் ஒருவரோடொருவர் சேர்ந்து வாழ முடியவில்லை. 62. நாம் நாய்கள் இழுக்கும் வண்டியில் போவோமே! அங்கே மேலே எஸ்கிமோ தேசத்திலே, வடக்கு அலாஸ்கா மற்றும் இன்னும் மேலே வடக்கு மாகாணங்கள் சுற்றிலும், அங்கே எங்கள் வழிக்காட்டியானவன், Huskies என்று அழைக்கப்பட்ட நாய்களை ஓய்வு நேரத்தில் அவிழ்த்து கட்டி வைக்கும் போது, அவன் ஒன்றை இங்கேயும். அடுத்ததை அங்கேயுமாக கட்டுவான். "ஏன் இதை நீ செய்கிறாய்?" என நான் கேட்டப் போது, அவன் "அவைகள் பிசாசி னால் அவ்வளவாய் நிறைந்திருப்பதால் அவைகள் ஒன்றையொன்று கொன்று விடும்" என்றான். 63. அப்படியே சொல்ல வேண்டும், அவைகள் நினைப்பது எல்லாம் அதுதான். சரிதான், அதுதான் பிசாசு, உங்களுக்கு புரி கிறதா? அவன் ஒரு கொலைக்காரன், பிசாசுகளும் கூட, பிசாசுகளு டன் சண்டைப் போடுகின்றன. பார்த்தீர்களா! அவைகள் எப் பொழுதும் ஒன்றோடொன்று சண்டைப் போடுகின்றன. ஆனால் தேவன், முழுவதுமே அன்பாயிருக்கிறார். எனவே, நீ ஒருவரை யொருவர் நேசிப்பதைக் காட்டிலும் வேறெதுவும் செய்ய முடியாது. ஆகவே நீங்கள் பாருங்கள், இந்த கொள்கை முழுவதுமாக மறுபடி யும் இப்படியே திரும்பி அந்த ஆவிகளின் அடிப்படையில், ஆதி காலத்துக்கு திரும்புகிறது. ஆதியாகமம் வித்துக்களின் அதிகாரமா யிருக்கிறது. இன்றைக்கு இந்த பூமியில் நமக்கு உண்டாகி இருக்கிற வைகள் எல்லாம் அது உற்பத்தி செய்கிறது. 64. இப்போது, நமக்கு யுத்தங்களும், ஜெயங்களும், பெரிய ஜெயங்களும் உண்டு. ஒரு தேசமானது, உள்ளே வந்து, அடுத்ததை அடித்து வீழ்த்தி, "மகிமை! நாம் ஜெயத்தை அடைந்தோம்!! நாம் அவர்களை அடித்துப் போட்டோம்!!" என்பார்கள். பிறகு. நீ அறிந்து கொள்ளும் முதற் காரியம் என்னவென்றால், அவர்கள் நண்பர் களாகி, கைகளை குலுக்கி, ஒருவரோடொருவர் வியாபாரம் செய்வார்கள். சிறிது காலத்திற்கு பிறகு, வேறொரு ராஜாவோ, வேறு ஒரு தலைவனோ உள்ளே வருவான், அல்லது இன்னொரு ஆட்சியாளனோ , அல்லது வழிமுறையோ வரும். பிறகு நீ அறிந்து கொள்கின்ற முதல் காரியம் என்னவென்றால், அவர்கள் அவர் களுடைய பேரப்பிள்ளைகளாகி, துப்பாக்கிகளுக்கு திரும்பி, மறுபடியும் ஒருவரோடொருவர் சண்டைப் போடுகிறார்கள். "யுத்தங்களும், யுத்தங்களின் செய்திகளும்”..... 65. இவன் வந்து அடுத்தவனை நோக்கிப் பார்த்து, "நீ எனக்கு இப்போது சேவை செய்ய வேண்டும். நானே ஜெயித்தவன், நீயோ தோற்று போய் விட்டாய்” என்பான். 66. நான் ஒரு வாக்கியத்தை ஒரு சமயம் கேட்டேன். "தேவன் மனிதனை உண்டாக்கினார். மனிதன் அடிமைகளை உண்டாக்கினான்." தேவனானவர், ஒருவர் மேல் ஒருவர் ஆட்சி செய்வதற்காக மனிதனை உண்டாக்கவில்லை. தேவன் அவர்களை சகோதரர்களாய் இருக்க, அது சரி, சகோதரர்களாயிருக்கவே உண்டாக்கினார். ஒருவர் மீது ஒருவர் ஆட்சி செய்ய அல்ல. உயர்ந்த ரக ஜாதியுமில்லை, உயர்ந்த ரக தேசமுமில்லை, உயர்ந்த ரக பாஷையுமில்லை! நமக்கு ஒரே பாஷை யுண்டு, தெய்வீக தன்மை. நமக்கு ஒரே சகோதரத்துவம் உண்டு, அதுதான் மனிதன்! அது மனிதன்தான், அவன் யார் என்பது பொருட்டல்ல! நாம் ஏன் ஒருவரையொருவர் சண்டை செய்து கொள்ள வேண்டும்? ஆனால் அவர்கள் இதை செய்கிறார்கள். சில சமயங்களில் ஒரு நல்ல தேசமானது, தன்னில் ஒரு செயல்முறையை கொண்டிருக்கும். அது நல்லதை செய்ய முயற்சித்து, தன்னுடைய உரிமைக்காக போராடும். பிறகு, ஒரு தீய தேசம் உட்பிரவேசித்து அதை மேற்கொள்ளும். பிறகு அதனால் இங்கே அவர்கள் இந்த தேசத்தை சொந்தமாக்கிக் கொண்டு, பிறகு அந்த விதமாக மாறு வார்கள். பிறகு போக்கும் வரத்துமாய் இருப்பார்கள். அப்படியே முன்னும் பின்னுமாய் மாறுவார்கள். 67. தேசங்கள், அவர்கள் தங்கள் விடுதலைக்காகவும், தங்களுக்கு சொந்தமாக்க நினைத்ததை : பற்றிக் கொள்ளவும் சண்டையிட முயற்சித்து பல பெரிய தேசத்திற்காக ஜெயங்களை அடைந்திருக்கிறார்கள். மேலும் சாத்தான் அவர்களை அடக்கி ஆளும் காலம் எல்லாம் அவர்கள் தொடர்ந்து சண்டைமப் போட்டுக் கொண்டுதானிருப்பார்கள். ஆனால் அவர்கள் பல பெரிய ஜெயங்களை பெற்றிருக்கிறார்கள், மகா வெற்றிகள். பின்னோக்கிப் போய், ஆதி கால தொடக்கத்திலிருந்தே, எவ்விதமாக தேசங்கள் தேசங்களை ஆட்சி செய்தன என்றும், பல பெரிய வெற்றிகளை விழாக் கொண் டாடினார்கள் என்கிற விதமாக நம்மால் காண்பிக்க முடியும். முதலாம் உலகப் போரில் இருந்ததைப் போல, அப்போது பல தேசங்கள் கூட்டி வந்து, ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தின் மைதானங்களில் சந்தித் தார்கள், மேலும் தேசங்களின் பல வித்தியாசமான நபர்கள், வித்தியாசமான கொடிகளின் கீழே சண்டையிட்டார்கள். இது முதலாம் உலக மகாயுத்தம் என்றழைக்கப்பட்டது. 68. இங்கே இரண்டு, மூன்று அல்லது நான்கு சகோ தரர்கள் உட்கார்ந்து இருக்கிறார்கள். நீங்கள் அதை நினைவுகூரலாம். என்னால் அதை நினைவுகூர முடிகிறது. எனக்கு ஐம்பத்து நான்கு வயதாகிறது. எனக்கு ஞாபகமிருக்கிறது. நான் ஒரு சிறு பையனாக இருந்த போது, சுமார் 8 அல்லது 9 வயது, 1914-ல், பார்ப்போமே, ஒன்பது, பத்து, பதினொன்று, பன்னிரெண்டு, பதிமூன்று, பதினான்கு. . யுத்தம் ஆரம்பமான போது எனக்கு வயதாயிருந்தது. யுத்தம் வரப்போகிறது என்று அவர்கள் சொன்ன போது ஞாபகமிருக்கிறது. பிறகு அப்பாவுக்கு சுமார் 22 வயதாயிருந்தது. அவர்கள் அவரை யுத்தத்திற்கு அனுப்பியாக வேண்டியிருந்தது. அவர் சாலையின் மேல் பக்கமாக வந்தார். அவர் ஒரு குதிரை வண்டியிலிருந்தார். எங்களுக்கு கீழ்புறமாகவிருந்த பல மைல் தூரத்திலிருந்து பண்டக சாலைக்கு போயிருந்தார். 69. அதில் ஒரு மூட்டை பீன்ஸ் பருப்பு வைத்திருந்தது. அதை நான் தூக்கியெடுத்த போது, நினைத்துக் கொண்டேன், அவர்கள் ஏதாவது யுத்தத்தை தொடங்க வந்தால், அவர்களை இந்த பீன்ஸ் பருப்பு மூட்டையினால் அடிப்பேன், அவர்கள் வந்தால், என்று யுத்தத்தைப் பற்றிய சிந்தனையே போதும், மேலும் என் அப்பா யுத்தத்திற்கு போயாக வேண்டியிருந்தது! பிறகு எக்காளங்கள் சப்தமிட்டன. 'பிறகு அது, "உங்கள் பத்திரங்களை வாங்குங்கள்" போன்ற மேலும் பல காரியங்கள், நமக்கு எல்லோர்க்கும் ஞாபகமிருக்கும், நாம் போய் இந்த உலக மகாயுத்தத்தை செய்து, இதை செய்து தீர்த்து விடுவோம்". பிறகு அவர்கள், "ஐக்கிய நாடுகள் என்பதை ஒழுங்குபடுத்தினார்கள். அதற்கு பிறகு, "நித்திய மான சமாதானம் இனிமேல் இருக்கும், அவ்வளவுதான், வேறு யுத்தங்கள் கிடையாது" என்றார்கள். 70. பிறகு மிகக் குறுகிய காலமான 20 வருடங்களில், நாம் மறுபடியும் நேராக அதில் ஈடுபட்டிருந்தோம். எப்போதும் போலவே அதே கட்டுடன், இன்னும் ஒரு உலக மகா யுத்தம்! ஏன்? இது பேராசை, பொறாமை! காய்ஸர் வில்ஹம் ஜெர்மனியை விட்டு போனவுடன். அப்போது, அடால்ஃப் ஹிட்லர் என்ற பெயரையுடைய ஏதோ ஒரு நண்பன் உள்ளே வந்தான், அவன் ஆஸ்திரியாவைச் சேர்ந்தவன், பிறகு இந்த மனுஷருடைய மனதையெல்லாம் (பிசா சினால் ஏவப்பட்டார்கள்) அதாவது அவர்களால் உலகத்தையே வீழ்த்த முடியும் என்பதாக கலைத்து போட்டான். அதோ உன் காரியம் ; புரிகிறதா? இது மறுபடியும் பிசாசுக்கு எதிராக பிசாசு என்றிருந்தது. அந்த தேசங்களின் குற்றம் இல்லாத குடிமக்கள் ஒருவரையொருவர் யுத்தத்திலிருந்து, யுத்தத்திற்கு தொடர்ந்து வழி நடத்தினார்கள். மேலும் இது எல்லா காலங்களிலும் தொடர்ந்து இப்படிதான் இருக்கிறது. 71. இப்போது? அடுத்த காரியம் என்ன தெரியுமா? இன்னும் ஒரு யுத்தம் வருகிறது. முழு உலகமும் மறுபடியும் யுத்தத்திற்கு சென்றது. இன்னும் சிறந்த ஆயுதங்களுடனும், இன்னும் சிறந்த விமானங்களுடனும், இன்னும் பெரிய வெடிகுண்டுகளுடனும் அவர்கள் சண்டைப் போட்டார்கள், இரத்தம் சிந்தினார்கள். மரித் தார்கள். பட்டினியாய் இருந்தார்கள், குளிரில் உறைந்து போனார் கள், மற்ற எல்லாமே ஆனார்கள். யுத்தம்! யுத்தம்!! யுத்தம்!!! பிறகு அங்கே, நாம் Victory Day என்றழைக்கும் வெற்றியின் நாள் வந்தது. அங்கேயிருந்து தான் நான் இந்த வேதப் பாடத்தைத் தெரிந் தெடுத்தேன். அந்த Victory Day - வெற்றியின் நாள், அந்த நாள் தான் அவர்கள் வெற்றியை எடுத்துக் கொண்டார்கள். அப்போது, இராணுவங்கள் மற்ற இராணுவங்கள் மேல் வெற்றியை பெற்றார் கள், வெற்றியின் நாள்!! 72. அங்கே ஒரு D - நாளும் ஒரு V - நாளும் இருந்தது. அந்த D- நாளில் தானே அவர்கள் யுத்தத்திற்குள்ளாக பிரவேசித் தார்கள். V-நாளின் போது தானே சமாதானம் கையொப்பமிடப் பட்டது. அப்போது, ஜெர்மனியும், அவர்களுடன் கூட்டு சேர்ந்த மற்ற தேசங்களும் மற்ற தேசங்களிடம் சரணடைந்தன. பிறகு நாம் என்ன செய்தோம்? வெற்றியின் நாளிலே நாம் பாட்டுகள் பாடி னோம். நாம் அலறினோம், நம்முடைய தொப்பிகளை மேலே தூக்கி யெறிந்தோம். ஆகாயத்திலே நம்முடைய துப்பாக்கிகளைச் சுட்டோம். நாம் அழுதோம், ஊதல்களை ஊதி, மேளங்களை அடித்தோம், இசையை வாசித்தோம், ஒருவரையொருவர் முதுகில் அடித்தோம். அது என்னவாயிருந்தது? இது ஒரு வெற்றியின் நாள் ! ஓ! நாம் வெற்றியை அடைந்தோம்! "நாம் ஜெயித்தோம் ! நாம் ஜெயித்து விட்டோம். மேலும் அது ஒரு பெரிய காரியமாயிருந்தது. இது, கிறிஸ்தவ தேசங்கள் என்று பெயரளவில் அழைக்கப்பட்டவர்களுக்கு சமாதானத்தை கொண்டு வந்தது. மேலும், நமக்கு மூச்சு விட சிறிது நேரம் கிடைத்தது. உயிரோடு இருந்த சில பையன்கள் வீடு திரும்பினார்கள். இவ்விதமாக நடந்தது. 73. அவைகள் அநேக சிறந்த நாட்களாயிருந்தன, அவைகள் அநேகமானவைகள், மேலும் பெரிய யுத்தங்கள். ஆனாலும், உனக்குத் தெரியுமா, அந்த விதமான சண்டைகள் போடப்பட்ட எல்லாக் காலங்களிலும், அங்கே தேவனுடைய விசுவாசிக்கக்கூடிய மக்களும் பலப் பெரிய வெற்றியின் நாட்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஓ! ஆம் ஐயா! இது இரண்டுப் பக்கங்களிலும் இருந்திருக்கிறது. கண்ணாடியானது குறிப்பார்க்கப்பட்டு இயற்கையானதின் பக்கத் திற்கு சென்ற போதும், வெற்றியின் நாட்களும், அது மாத்திரமல்ல. இது வார்த்தைக்குள்ளாக குறி பார்த்த போதும், மேலும் வேதாகம மானது சில சமயங்களில் இன்னும் ஒரு வெற்றியின் நாளைக் கொண்டு வருகிறது. இவைகள் போலவே அநேகமானவைகளை நாம் பெற்று கொண்டிருக்றோம் - நம்முடைய விரோதிக்கு எதிராக அநேக பெரிய போராட்டங்கள். மேலும் அங்கே முன் வரிசையில் நிற்பவர்களாக, தேவன் சிறந்த மனிதர்களை வைத்திருந்தார். அவர்கள் தேவனுடைய ஆவியைக் கொண்டு மனிதர்களுடைய சிந்தனைகளைச் சிறைப்பிடிக்கக் கூடியவர்களாய், மேலும் அவைகளை அப்பாலே உள்ள தேவனுடைய ராஜ்யத்திற்குள்ளே தூக்கியெறிந்து வெற்றிப் பெற்றவர்களாய்க் கடந்து வந்தார்க்ள். 74. நாம் ஒவ்வொரு நாளும் சண்டை செய்கிறோம். ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒவ்வொரு நாளும் ஒரு யுத்தம் செய்கிறான். இந்த நேரத்திலும் நாம் ஒரு யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறோம் - சரியானத ற்கும் தவறானதற்கும் மத்தியில் - நமக்குள்ளே இது தொடர்ந்து நடை பெறுகிறது. நாம் அதைப் பெற்றுக்கொள்ளலாமா? நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் உலகத்திற்கு தலை வணங்கலாமா? நாம் வைத்திருக்கும் இந்த எண்ணத்தை நாம் விட்டுவிடலாமா? மேலும் நாம் இதைப் பார்த்தால், குறிவைத்தால், இதை ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரையில் உள்ளபடி எடுத்துக் கொண்டால், அது கர்த்தர் இவ்விதமாக உரைக்கிறார் என்பதாகவே ஒவ்வொரு தடவையும் அங்கே கடைசி வரையில் இருக்கும். நாம் இதை விட்டுவிட முடியாது! நாம் மீதியானவர்களுடன் விட்டுக் கொடுக்க முடியாது! நம்மால் இதைச் செய்ய முடியாது. அவ்வளவு தான்! நாம் இந்த ஸ்தானத்தில் நிலைத்து இருந்தாக வேண்டும், அதுதான் எல்லாம். சத்துருவானவன் எவ்வளவு பெரிய வனாக இருந்தாலும், நமக்கு எதிராக அவன் கூடுதலாக இயந்திரங்களை வைத்திருந்தாலும், எத்தனை ஸ்தாபனங்கள், எத்தனை இதுவும் அதுவும் எதுவும் இருந்தாலும் அது பொருட்டல்ல! ஆனாலும், நாம் இந்த குறியை தேவனுடைய வார்த்தையின் மேல் வைத்து, முதலில் அங்கே நாம் ஒரே காரியம்தான் இருப்பதைக் காண்கிறோம், அது தான் இயேசு கிறிஸ்துவின் இரத்தம், மேலும் அவர், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதே. ஆனபடியினால், வேறு எவராவது என்னச் சொன்னாலும் அது எதையும் மாற்றப்போவது கிடையாது. அவர்கள், அதிசயங்கள் நடக்கும் நாட்கள் கடந்துப் போய்விட்டன என்றும், தெய்வீக சுகப்படுதல் என்பதாக எந்தக் காரியமும் இல்லை என்றும், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்பது இல்லாத ஒன்று என்றும், மேலும் இந்த இயேசுகிறிஸ்துவின் நாமத் தில் ஞானஸ்நானம், அது அவருடைய சீஷர்களுக்கு மாத்திரம் என்றும் சொல்லுவார்கள். இவைகள் எல்லாம் வார்த்தையை விட்டு நம்மை குறித்தவறிப் போக முயற்சி செய்யும். இருப்பினும், யார் வேண்டுமானாலும் இது அங்கே இல்லை" என்று சொல்லட்டும், இது திரும்பி வார்த்தைக்கே குறி வைக்கும்! அது சரி! 75. ஆகவே, நாம் ஒரு யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறோம், மேலும் தேவனுடைய வீரர்கள் எப்பொழுதும் யுத்தம் பண்ணு கிறவர்களாயிருக்கிறார்கள். மேலும் நீ, சின்ன சபையே, இங்கே திரும்பவும் ஞாபகப்படுத்திக் கொள், நீ அந்த இராணுவத்தின் ஒரு பகுதியாயிருக்கிறாய்! நீ இங்கே பின்புறமாக ஒரு எல்லைக் காவலாக இருக்கிறாய். உனக்கு எல்லைக் காவல் என்றால் என்னவென்றுத் தெரியும். நீ அதில் ஒரு பாகத்தை இங்கே உன் பக்கமாய்க் கொண்டு வரவேண்டும். ஆகவே, நீ இங்கே, கொடியை ஏற்றிப் பிடிக்கும் இடமாகவும், சரியானதைச் செய்யும்படிக்கும் உலகத்திற்கு இருக்கும் ஒரே நம்பிக்கை இயேசு கிறிஸ்துதான் என்று தொடர்ந்து அறிக்கை யிடவும் நீ ஒரு எல்லைக் காவலாய் இருக்கிறாய். மெதோடிஸ்டு சபை அல்ல! பாப்டிஸ்டு சபை அல்ல! பிரஸ்பிடேரியன் சபையோ கத் தோலிக்க சபையோ அல்ல! அல்லது யூதர்களோ அல்லது வேறே எதுவாயிருக்குமோ, அதுவல்ல! வர்க்கம், வம்சம் அல்லது நிறம், இது அதைப் போல அல்ல! இது இயேசு கிறிஸ்து! அவர்தான் அது. அவர் நம்முடைய வெற்றி வீரர். அவர்தான் அது! இந்த செயற் பாட்டின் பிரதான தளபதி! இதுதான் அவருடைய கட்டளைகள், நாம் கட்டளைகளை நிறைவேற்றித்தான் ஆகவேண்டும். 76. உங்களில் சில பையன்கள் யுத்தத்தில் சேவை செய் தீர்கள். எப்பொழுதாவது எப்படி உன்னால்... தளபதி ஒரு கட்டளையைக் கொடுத்தால், உங்களால் எப்படி திரும்பிப் போய் அதைத் தலை கீழாகச் செய்ய முடியும்? ஏன்? நீ முழு இராணுவத்தையும் கெடுத்து விடுவாயே? அது சரிதான். அதை ஒரு கலகத்திற்குள்ளாக ஆழ்த்தி விடுவாய்! நீ கட்டளைகளை நிறைவேற்றித்தான் ஆகவேண்டும். மேலும் நீ இதை செய்வதற்கு உள்ள ஒரே வழி, குறியை வைத்து, நோக்கம் என்ன என்றும், இதுவெல்லாம் எதைப் பற்றியது என்றும் பார்ப்பதுதான். 77. ஆகட்டும். நாம் அநேகப் பெரிய சண்டைகளை, ஆவிக் குரிய சண்டைகளைச் செய்திருக்கிறோம். அநேகப் பெரிய வெற்றியின் நாட்களை சபையானது பெற்றிருக்கிறது. நான் சபையை, கிறிஸ்துவின் சரீரத்தைக் குறிக்கிறேன். இப்போது, நான் ஸ்தாபன ஒழுங்குகளைக் குறித்துப் பேசுகிறேன், விசுவாசிகளான சரீரமானது, காலங்கள் தோறும் தொடர்ந்து பல வெற்றியின் நாட்களைக் கண்டிருக்கிறது. நாம் பல்வேறு யுத்தங்களையும், யுத்தங்களைப் பற்றிய செய்திகளையும், V- நாட்களையும், V- நாட்களையும், மேலும் V- நாட்களையும், சந்தித்தோம். இது முடிவிலே அர்மகெதோனில் நடக்கப் போகிற மகா யுத்தத்தில் வந்து சேரும். ஆக, அதுவே கடைசியானதாக இருக்கும். அந்த மேன்மையான ஆயிரங்கால அரசாட்சிக்கு சிறிது முன்னதாக அவள் அர்மகெதோன் யுத்தத்திற்கு வரும்போது, அது எல்லாவற்றையும் தீர்த்து வைக்கும். அர்மகெதோன் பூமியைச் சுத்தப்படுத்துவதாக இருக்கும்! இந்த பூமியானது அணுக்களின் வீசுதலினாலும், மேலும் எரிமலைச் சாம்பல் போன்றவைகளாலும் தன்னை மறுபடியும் தூய்மைப்படுத்திக் கொண்டு, பூமியின் மேல் ஊறிப் போன மனித இரத்தத்தையும், பாவத்தையும் பூமியானது தனக்கு அடியிலே மூழ்கடிக்கும் போது மறுபடியுமாக எரிமலைகள் வெடித்துச் சிதறி அந்த மேன்மையான ஆயிரங்கால அரசாட்சிக்காக இந்த பூமியை புதுப்பித்து சுத்தப்படுத்தும். ஒரு ஜனமானது இங்கே வாழும்படியாக அவர் தம்முடைய சபையை அந்த சமயத்தில் சுத்தப்படுத்துகிறார். ஆமென்! நான் உங்களுக்கு சொல்கிறேன் பாருங்கள், இது எனக்கு பிடித்தமாயிருக்கிறது. ஆம் ஐயா ! அதோ ஒரு காலம் வருகிறது அப்போது இது பிரமாதமாக இருக்கும்! 78. இப்போது பெரிய V நாட்களைப் பற்றி, வீரர்களில் சிலரை நினைவுகூருவதற்காக நாம் சிறிது பின்னோக்கிப் போவோம். நாம் கடைசியிலே பின்னாக போகலாம், ஆனால் சிறிதுப் பின்னோக்கி மோசே வரையில் போவோம். ஒரு பெரிய யுத்தத்திற்குள்ளாகப் பிரவேசிக்கும்படியானக் காலம் மோசேக்கு ஏற்பட்டிருந்தது. வெற் றியை சபையானது தனக்குள்ளே வெகு காலமாக மறந்து விட்டி ருந்தது. 79. இன்றைக்கு சபையின் தொல்லை அதுதான். நாம் மிகவும் நீண்டக் காலமாக , இயேசு கிறிஸ்து, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை மறந்துப் போனோம். தேவன் சுகப்படுத்துகிறவர் என்றும் அவரால் நோயாளியை சரியாக்க முடியும் என்றும் மறந்துப் போனோம். பரிசுத்த ஆவியின் ஞானஸ்நான மானது சீஷர்களின் மீது ஊற்றப்பட்டது என்பதையும், மேலும் அது பரம்பரை பரம்பரையாக யாவருக்கும் கொடுக்கப்பட்டது என்ப தையும், யார் சித்தம் கொண்டாலும் வரலாம் என்பதையும் மறந் தோம். நாம் அதை நீண்ட, நீண்ட காலத்திற்கு முன்பே மறந்து போனோம். 80. அவ்விதமாகவே இஸ்ரவேல் மறந்துப் போயிற்று. அவர் கள், கீழே எகிப்திலே திருப்தியாகி மேலும் அவர்கள் அடிமை களாக மாறினார்கள். பிறகு இதோ, இங்கேயிருந்த மோசே, தன்னுடையச் சொந்த அறிவுச் சம்மந்தமான காரியங்களாலே , அறிவுச் சம்மந்தமான சாதனைகளாலே இராணுவ பலத்தினாலும் இஸ்ரவேலை வெளியேக் கொண்டு வரும்படியாகப் போய், அதைச் சாதிக்காமல் போனான். ஆனால், வனாந்திரத்தின் பின்புறத்திலே தேவனிடத்திலிருந்து வந்த ஒரேயொரு வார்த்தையானது, அந்தக் காரியத்தையெல்லாம் மறுபடியும் கொதிக்க வைத்தது. மோசேக்கு என்ன நேரிட்டது? அவன் தன்னுடைய கண்ணாடியைக் குறிவைத்தான்! 81. அவன் இந்த சவுந்தர்யமுள்ள கருப்பு நிறமான எத்தி யோப்பியப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டு, பிள்ளைகளைப் பெற்று, தன்னுடைய மாமனாரின் ஆடுகளை வளர்த்து வந்தது. தேவ னுடைய ஒரே நோக்கமாக இருக்கவில்லை. ஆனால் அவனுடைய செயற்கட்டளையானது, தேவனுடைய பிள்ளைகளை அந்த அடிமைத் தனத்திலிருந்து விடுவித்து வெளியே கொண்டு வருவதாக இருந்தது. அதுதான் அவனுடைய கட்டளை. அவன் அதற்காகத்தான் பிறந்தான். மேலும் நம்மில் ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றுக்காகப் பிறந்திருக் கிறோம். நாம் காரணமில்லாமல் இங்கே வைக்கப்படவில்லை! அந்த மலையானது சும்மா இருப்பதற்காக அங்கே உண்டாகவில்லை. அந்த மரமானது ஒரு நோக்கத்திற்காக அங்கே வைக்கப்பட்டிருக்கிறது. எல்லாமே ஒரு நோக்கத்திற்காக இருக்கிறது. இது சேவை செய்துதான் ஆக வேண்டும். மேலும் நாம் கூட ஒரு நோக்கத் திற்காகத்தான் இங்கே இருக்கிறோம். ஒரு வேளை அது ஒரு நபருக்கு சாட்சி சொல்லி, அந்த நபரை இரட்சிப்படையச் செய்யவும், மேலும், அதிலிருந்து ஒரு பிரசங்கியார் எழும்பி, பத்து இலட்சம் ஆத்து மாக்களை கிறிஸ்துவிடம் அனுப்புவதாகவும் இருக்கலாம். 82. டுவைட் மூடி (Dwight Moody) அவர்களின் மன மாற்றத்தையும், அதுபோன்ற அநேகரையும் நீங்கள் பார்க்கிறீர்கள். வெறும் ஒரு வயதான சிறிய ஸ்திரீ, ஒரு சிறிய வயதான துணி துவைக்கும் ஸ்திரீ, ஏதாகிலும் தேவனுக்காக செய்ய வேண்டும் என்பதாக தன் இருதயத்தில் ஒரு செய்தியுடன் இருந்தாள். அவள் ஒரு பழைய குதிரை வண்டிகள் லாயத்தை வாடகைக்கு எடுத்து, ஒரு ஊழியக்காரரை, அங்கே வந்து பிரசங்கிக்கும்படிச் செய்தாள். மேலும், தன் கழுத்துக்கும் கீழே தொங்கும் தலை முடியுடன், தன் தகப்பனாரின் தோள் பட்டைகளை மாட்டிக் கொண்டிருந்த அந்த சிறுவனைத் தவிர வேறே ஒருவரும் அன்றைக்கு இரவு அங்கே போய் அந்தப் பீடத்தண்டையில் முழங்காற்படியிடவில்லை! டுவைட் மூடி! ஐந்து இலட்சம் ஆத்துமாக்களை இயேசு கிறிஸ்துவிடம் அனுப்பினார். புரிகிறதா? அந்த ஸ்திரீயானவளும் செய்வதற்காக எதோ இருந்தது! அது ஒரு நோக்கத்திற்காக! அவள் ஒரு நோக்கத்திற்காக துணி துவைக்கும் ஸ்திரீயாக உருவாக்கப்பட்டாள். தேவனானவர் உன்னை வைத்திருக்கும் இடத்தை வெறுக்காதே! ஆனால் உனக்கான நோக்கத்தை நிறைவேற்று! இந்த நாட்களில் ஒன்றில், அங்கே அந்த மேன்மையான வெற்றியின் நாள் வரும். அப்போது யுத்தம் முடிவடையும். 83. கவனியுங்கள், தன்னுடைய கண்ணாடியைக் குறிவைத்தப் பின்பு, அது தேவனுடைய திட்டம்தானா என்பதையும், தான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பார்த்தப் பிறகு, மோசே புறப்பட்டுப் போனான். அவன் கீழேயிறங்கிப் போனான், அவன் கடுமையாக சண்டை செய்தான், அநேகப் பெரியப் போராட்டங்கள் அவனுக்கு நேர்ந்தது. ஆனால் அவனுடைய சோதனையான போராட்டங்களில் ஒன்று, அதை நான் எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். அது, தேவன் அவனுக்கு காண்பித்த பல்வேறு காரியங்கள் மூலமாய், வார்த்தை யைப் பேசவும் அது பொருளாக மாறும்படியாகவுமான அற்புதங் களையும் அடையாளங்களையும் அவன் காண்பித்ததின் மூலமாய் 'சாதனைகளைச் செய்தப் போதுதான். 84. அதே காரியத்தை நாம் இன்றைக்கும் உடையவர்களாக இருக்கிறோம். வியாதியஸ்தர்களின் மேல் வார்த்தையைப் பேசுவது - பிறகு அது சுகமாகவதைப் பார்த்திருப்பது! மேலும் இந்த மற்றக் காரியங்களையும் செய்வது! தேவனுடைய வார்த்தைகள் மனித உதடுகள் மூலமாயப் பேசப்படுவது! "நீ இந்த மலையை நோக்கி நகரு என்று சொல்வாயானால், மேலும் சந்தேகம்படாமலிருந்து, ஆனால், நீ சொன்னது நடந்தேரும் என்று விசுவாசித்தால், நீ சொன்னதை நீ பெற்றுக் கொள்ளலாம்" இயேசு இவ்விதமாகச் சொன்னார், இப்போது நாம் அதை விசுவாசிக்கிறோம். மேலும் இதைப் பற்றிக் கொள்ளு கிறோம். இதை எடுத்து இதை நம்புகிறோம். 85. மோசே அதைச் செய்தான். அவன் அங்கே போய்ச் சேர்ந்தான், தேவனும் தான் அவனுடன் இருப்பதை நிரூபித்தார். ஆனால் அவர்களையெல்லாம் சேர்த்தப் பிறகு... 86. கிறிஸ்தவ வாழ்க்கையானது, (நண்பனானவன் முழுக்க, முழுக்க கிறிஸ்துவின் மேல் மையங் கொண்டிராவிட்டால்) கிறிஸ்துவ வாழ்க்கையானது எவ்வளவு அநேகமான ஏமாற்றங்களையுடைய தாகக் காணப்படுகிறது. ஆனால், அந்த ஏமாற்றங்கள், தேவனுடைய தெய்வீக் சித்தம் நமக்கு நிகழ்வதாக இருக்கிறது. அவர் நம்மை நதியைத் தொடுவதற்கு அனுமதித்து, நாம் என்ன செய்வோம் என் றும் பார்க்கிறார். 87. மோசே, தன் ஊழியத்தின் பாதையிலே, இஸ்ரவேலின் பிள்ளைகளை வழி நடத்தினான், பார்வோனின் இராணுவம் அவனுக்குப் பின்னால் வந்தது, மேலும் ஐந்து இலட்சம் ஆயுதம் தரித்த ஆண்களிட மிருந்து தூசு பொங்கி எழும்பிற்று, இங்கேயோ இருபது இலட்சம் உதவியற்ற யூதர்கள் இருந்தார்கள், ஒன்றும் இல்லாமல் நின்றார்கள், புருஷர்கள், ஸ்திரிகள், குழந்தைகள் போன்றவர்கள். மேலும் சிவந்த சமுத்திரம் அவர்களைத் தடுத்துவிட்டது. போவதற்கு அங்கே இடமேயில்லை, புரிகிறதா? ஆனால், அவன் ஜெபித்து முடித்தப் போது, மோசே , ஒரு V- நாளைப் பெற்றுக் கொண்டான். அவன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு அழ ஆரம்பித்தான், அப்போது கர்த்தரோ, "நீ ஏன் என்னை நோக்கிக் கூப்பிடுகிறாய்? நான் இதை செய்யும்படிக்கு உனக்குக் கட்டளையிடவில்லையா? அவர்கள் தங்கள் கடமையின் வழியில் தொடர்ந்துப் போகும்படியாக பிள்ளைகளிடத் தில் பேசு” என்றார். ஆமென்! அதோ காரியத்தைப்பார்த்துக் கொள்! 88. "என்னை நோக்கி சப்தமிட்டுக் கூப்பிடாதே! நீ இந்த ஜனங்களை அங்கே கொண்டு போக உத்திரவாதம் பெற்றிருக்கிறாய்! அவர்கள் முன்னேறிப் போகவும், தங்கள் கடமையின் பாதையில் நேராக நிலைத்திருக்கும்படியாக பேசு , போதும்" ஆமென். 89. வியாதியாயுள்ள மனுஷனுக்கு அது எப்படிப்பட்ட உற் சாகமூட்டுதலாக இருக்க வேண்டும். பின்வாங்கிப் போனவனுக்கு அது எப்படிப்பட்ட உற்சாகமூட்ட வேண்டும்! உன்னைத் திருப்பி, மறுபடியும் தொடங்கு. உன் ஊழியத்தின் பாதையிலே நிலைத்து இரு ! சிவந்தச் சமுத்திரங்களைத் திறப்பது தேவனுடைய கடமையாயிருக் கிறது. இது தேவனுடைய வேலையாயிருக்கிறது. நீ பேச மாத்திரம் செய்து, முன்னேறி நகரு ! நீ செய்ய வேண்டியதெல்லாம் அவ் வளவுதான். 90. மோசேவுக்கோவென்றால், அந்தப் பெரிய V- நாளானது, அங்கே கீழே சமுத்திரத்திலிருந்தது. ஓ! அது மோசே வுக்குத்தானே எப்படிப்பட்ட வெற்றியின் நாளாக இருந்தது. மேலும் தங்களுடைய தீர்க்கதரிசியின் சத்தத்திற்குக் கீழ்படிந்த இஸ்ரவேலின் பிள்ளை களுக்கும்கூட! அவர்கள் பேசிவிட்டு முன்னேறிப் போன போது, மோசே, "பத்து அற்புதங்களை நீங்கள் ஏற்கனவேப் பார்க்கவில்லையா? பிறகு இன்னும் சந்தேகப்படுகிறீர்களே?" என்று சொன்னான். பிறகு அவன் அந்தக் கோலைத் தன் கையில் பிடித்து, சமுத்திரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். தேவனானவர் இரவு காலத்தில் ஒரு காற்றை அனுப்பி, அந்த சமுத்திரத்தை ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கமாக வீசினார். அப்போது அவர்கள் காய்ந்த நிலத்தின் மேல் நடந்தார்கள்! வெற்றியின் நாள்! 91. இங்கேப் பாருங்கள், நம்முடைய பாடமானது, இன் றைக்கு , "அவர்கள் அந்த அக்கினிக் கலந்த கண்ணாடிக் கடல் மேல் நின்று மோசேயின் பாட்டைப் பாடினார்கள்” என்பதாக சொல்லுகிறது. மோசே, அவன் கடந்து வந்தப் பிறகு, அவன் என்ன செய் வது என்று அறியாதிருந்தான். எனவே அவன் கடந்தும் போனான், இங்கேயோ, பார்வோனின் சேனை வந்து, அவன் செய்துக் கொண்டி ருந்தக் காரியத்தைப் போலவே தானும் பாவனைச் செய்து முயற் சித்தது. மாம்சமான பாவனை! பிறகு என்ன நடந்தது? சமுத்திரமானது உள்ளே விழுந்து, அவர்கள் ஒவ்வொருவரையும் மூழ்கடித்தது. அவன் மரித்தும் போன விசாரணைக்காரரைக் கண்டான். 92. மிரியாம் ஒரு தம்புருவை எடுத்துக் கொண்டு, கரை யோரம் இந்தத் தம்புருவை அடித்துக் கொண்டுப் போனாள். மேலும் இஸ்ரவேலின் புத்திரிகள் அவளைப் பின்சென்றார்கள் - கூவிக் கொண்டும், தம்புருவைத் தட்டிக் கொண்டும், நடனமாடிக் கொண்டும்! மோசே ஆவியிலே பாடினான்! அது ஒரு பழையக் காலத்துப் பரிசுத்த ஆவியின் கூட்டமாக இல்லையென்பாயானால், நான் ஒரு பரிசுத்த ஆவியின் கூட்டத்தைப் பார்க்கவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். "இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனிமேல் என்றைக்கும் காணமாட்டீர்கள்". எப்படிப் பட்ட நாள்! இது எல்லாம் முடிவடைந்தது. 93. ஏதோ ஒரு நாள். கிறிஸ்தவர்களுக்கும்கூட இன்னும் ஒரு வெற்றியின் நாள் வரும். அது சரி. 94. கவனியுங்கள், யோசுவாவும் நதியின் அண்டையில் ஒரு வெற்றியின் நாளைப் பெற்றுக் கொண்டான். யோசுவா எரிகோவிலே ஒரு வெற்றியின் நாளைக் கண்டான். அவன் நிச்சயமாக இதைக் கண்டான். அவன் , அதோ , ஏப்ரல் மாதத்தில் அங்கேயிருக்கிறான். யோர்தான் ஒருவேளை ஒரு மைல் அகலமாக இருந்திருக்கலாம். ஏனென்றால், மேலே, மலையின் உச்சியிலே, பனியானது உருகுகிறது. ஆக, நதியானது சமபூமியின் மேலெல்லாம் படர்ந்தது. சந்தேகமில் லாமல், சத்துருவானவன், "தேவன் ஒரு சரியான சேனாதிபதிதான், அல்லவா? தம்முடைய சேனையை வசந்தக் காலத்தில் இந்த இடம் வரையிலும் நடத்துகிறார். நதியானது மிகவும் மோசமாக இருக்கும் போது, கடப்பதற்கு மிகவும் மோசமான காலம் இது. அப்படியானால், அவர் தம்முடையச் சேனையை இங்கே வழி நடத்தி அவர்களைக் கடக்க விடுகிறாரே?” என்று சொல்லியிருப்பான். 95. இல்லை, வெற்றியைக் காண்பிக்கிறதற்காக தேவனா னவர் ஏமாற்றங்கள் ஏற்படுவதை அனுமதிக்கிறார். ஓ! அதை மாத் திரம் நம்மால் பார்க்கக் கூடுமானால்! உன்னால் மாத்திரம் இவ்வள வாய்ப் பற்றி எரிகிறவைகளை, உன்னை நிலைக் குலைக்கும் காரியங்களை, புரிந்துக் கொள்ளக கூடுமானால்! அவைகள் பரீட்சைகள் ஆகும். அவைகள், நிலையாக நின்று, வார்த்தையின் மேல் உன்னுடைய கண்ணாடியைக் குறி வைத்துப் பிறகு வார்த்தையைப் பேசி, அதற்குப் பின்பு அப்படியே முன்னேறி நடப்பதற்கான காரியங்கள் ஆகும். அதற்குரியதெல்லாம் அவ்வளவுதான்! நாம், "தேவனே, என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. நான் மாட்டிக் கொண்டேன்" என்று சொல்லுபடியான காலத்தைச் சில சமயங்களில் சந்திப் போம். 96. வார்த்தையைப் பேசு ! "கர்த்தாவே, நான் விசுவாசிக் கிறேன். பிறகு அப்படியே முன்னோக்கி நடக்க ஆரம்பி சமுத்திரத்தை திறக்கும் காரியத்தை தேவன் செய்வார். நீ தொடர்ந்து நடந்துக் கொண்டேயிரு! 97. யோசுவா, சரியாக அந்த நேரத்தில்தானே ஜெபித்தான் என்று பார்க்கிறோம். எனவே, கர்த்தர், என்ன நடக்கும் என்று அவனுக்குச் சொன்னார். ஆகவே, அவன் ஒரு வெற்றியின் நாளைப் பெற்றுக் கொண்டான். அவன் மேற்கொண்டான். ஆகவே, அவன் நதியை மேற்கொண்டபோது, அடுத்தப் பக்கம் போய் சேர்ந்தான்! அவன் என்ன செய்தான்? அவன் உடன்படிக்கைப் பெட்டியை - வார்த்தையானது உடன்படிக்கைப் பெட்டியினுள் இருந்தது - அதை அவன் முதலாவதாக வைத்தான். பிறகு பாடகர்களும் மற்றவர்களும் பின்னாக வந்தார்கள். ஆனால் உடன்படிக்கைப் பெட்டியானது முதலாவதாக முன்னேறிச் சென்றது. 98. இஸ்ரவேலர் யுத்தத்திற்குப் போனபோது, முதலாவதாக முன்னேறிப் போனது பாடகர்கள் ஆகும். பாடகர்கள் பாடிக்கொண்டு முன்னேறிப் போனார்கள். பிறகு அவர்கள் எக்காளங்கள் முதலான வைகளை ஊதினார்கள். அப்போது உடன்படிக்கைப் பெட்டியானது முன்னே நகர்ந்தது. உடன்படிக்கைப் பெட்டி முன்னே நகர்ந்தப் போது அவர்கள பெட்டியைக் கீழே அமரச் செய்தார்கள். பிறகு யுத்தம் ஆரம்பமாயிற்று. ஆனால் இப்போது, இதிலே , யோசுவா வார்த்தையை முதலாவதாக எடுத்து, வார்த்தையை முதலாவதாக வைத்தப் போது, தேவன் அவனுக்கு சொல்லியிருந்தார், "நான் மோசேயுடன் இருந்ததைப் போலவே, உன்னுடனும் இருப்பேன். நான் உன்னை கைவிட மாட்டேன். நான் உன்னுடனே இருப்பேன். உன் வாழ்நாள் முழுவதும் ஒரு மனிதனும் உனக்கு முன்பாக நிற்கக் கூடாமற்போகும். நான் அங்கேதானே இருக்கப் போகிறேன். என்ன நடக்கப் போகிறதென்று பயப்படாதே! நான் சரியாக அங்கே இருப்பேன்”. 99. அப்படிப்பட்ட உத்திரவாதத்துடன் இருந்த யோசுவா, வார்த்தையை முன் வைக்காதபடிக்கு வேறே என்ன செய்திருக்க முடியும்? ஆமென்! அதோ பார்த்துக் கொள்! தேவனிடத்திலிருந்து வந்த கட்டளையுடன் வார்த்தையை முதலாவதாக வைத்தப் போது, அது ஒரு வெற்றியின் நாளைக் கொண்டு வந்தது. ஓ! அது வந்து தான் ஆக வேண்டும். அவ்வளவுதான்! அவன் வார்த்தையை முதல் வைத்தப் போது என்ன நடந்தது? உடன்படிக்கைப் பெட்டி முதலா வதாக தண்ணீரினண்டையில் போயிற்று, அது அப்படிச் செய்தப் போது நதியானது திறந்துக் கொடுத்தது. மேலும் அவர்கள் கடந்துப் போனார்கள், பிறகு அவன் அங்கே சேர்ந்தவுடன் என்ன செய்யப் போகிறான்? நடக்கப் போகிற அடுத்தக் காரியம் என்ன? 100. அவன் அடுத்தப் பக்கம் சேர்ந்தப் போது, அவன் வரும் போது, அவனைக் குறித்த பயத்தினால் அவர்கள் எல்லாரும் சுவற் றிர்க்குப் பின்னாலே பதுங்கியிருந்தார்கள். ஆனால் அவன் பிரதான தளபதியை ஒரு நாள் சந்தித்தான். பிறகு அவன் இன்னும் ஒரு வெற்றியின் நாளைப் பெற்றுக் கொண்டான். என்ன செய்ய வேண்டும் என்று அவர் அவனுக்குச் சரியாகச் சொல்லிக் கொடுத்தார். எனவே, எரிகோவின் மதில்கள் கீழே விழுந்தன. அவர் அதை எப்படி செய்யப் போகிறார்? மாம்சமான மனிதன் கண்ணாடியின் மூலமாய்ப் பார்க்கும்போது, "இப்போது பாருங்கள்! இதோ நான் இங்கே இருக்கிறேன். ஏனய்யா , அவர்கள் எல்லாம் தங்களுடைய கவண்களை வைத்துக் கொண்டு மதிலுக்கு உள்பக்கத்தில் இருக்கிறார்கள். நாம் மதில்களுக்கு அருகில் எப்போதாவது போவோமானால், நமக்கு ஐயோ! அவர்கள் அங்கே கற்களைத் குவித்து வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய பெரிய கவண்கள். அவர்களுக்கு ஈட்டிகள் உண்டு. அவர்களிடம் பாறைகள் இருக்கின்றன. அவர்கள் எல்லாவற்றையும் ஆயத்தமாக வைத்திருக்கிறார்கள்" என்று சொல்லியிருப்பான். 101. ஆனால் பாருங்கள், யோசுவா தேவனை முதலாவதாக வைத்தான். நீ அங்கே மேலே எப்படிப் போகப் போகிறாய் என்பது காரியம் அல்ல, அது தேவனுடைய சித்தம் ஆகும். அப்படியே நகர்ந்துக் கொண்டே இரு, வார்த்தையைப் பின்பற்றிப் போ! அவர் "அதைச் சுற்றி ஏழு நாட்கள் நட , பிறகு ஏழாவது நாளிலே ஏழு தடவைகள் நட, கடைசிச் சுற்றின் போது எக்காளத்தை ஊது" என்று சொன்னார். 102. தேவனுடைய ஸ்தானமானது. மாம்சமானதை எடுத்து அகற்றுவதுதான். மேலும் ஆவிக்குரியது உள்ளே பிரவேசித்தது, எனவே மதில்கள் விழுந்தன, அவர்கள் நேராக மேலேறிப் போய் அதைக் கைப் பற்றினார்கள். ஆம் ஐயா! தேவன் ஒரு வெற்றியின் நாளைக் கண்டார். 103. மிகுதியான காலமாக, குழந்தைக்கான வாக்குத்தத்தத் தோடு இருந்தப் பிறகு, ஆபிரகாம் ஒரு வெற்றியின் நாளைக் கண்டான். நாம் தேவனை விசுவாசிப்பதின் நிமித்தம் யாருடைய வித்தாக இருப் போமோ, அவனை, அவனுடைய அன்புக்காகவும், அவனுடைய விசுவா சத்திற்காகவும் தேவன் பரீட்சித்தார். மேலும் ஆபிரகாம் ஒரு வெற்றியின் நாளைப் பெற்றுக் கொண்டான். அது எப்போது? அவன் சினேயார் சமவெளி பூமியை விட்டுப் போனப் போதா? இல்லை! அவன் ஐபிராத்தைக் கடந்து வந்தான், அது சரி! பிறகு அது ஒரு நல்ல நாளாக இருந்தது. ஆனால் அவனுடைய முக்கியமான வெற் றியின் நாளானது . மோரியா மலையின் மேலே! அவன் அன்றைய தினம் அங்கே மேலே வந்தப் போது, தேவனானவர் அவனுக்குக் கடைசிப் பரீட்சையை வைத்தார். அவனுடைய ஒரே குமாரன் அவனுக்கு இருந்தப் போது. அவர், "இப்போது. ஆபிரகாமே. அவனை மேலே அந்த மலைக்குக் கொண்டு போய், அவனை ஒரு பலியாகச் செலுத்து. நான் உன்னை தேசங்களுக்குப் பிதா வாக்கினேன். இதோ உன்னை தேசங்களுக்குப் பிதாவாகச் செய்யும் உனக்கிருக்கும் ஒரே காரியம் இதுதான், இந்தக் குமாரன் மூல மாகதான். ஆக, நீ அவனைக் கொல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று சொன்னார். 104. ஓ! உங்களால் புரிந்துக் கொள்ள முடிகிறதா? எல்லா வற்றையும் அழித்துப் போடு - நோக்கத்தையே அழித்துப் போடு! "இதோ பார்த்துக்கொள் ஆபிரகாமே! உனக்கு இப்பொழுது நூற்றுப் பதினான்கு அல்லது நூற்றுப் பதினைந்து வயதாகிறது - மேலும் நீ. குழந்தைக்காக இருபத்தைந்து வருடங்கள் காத்திருந்தாய். இப்போது பையனுக்கு பதினைந்து அல்லது பதினாறு வயதாகிறது. ஆகவே, நான் உன்னை தேசங்களின் பிதாவாக்கும்படிக்கு, நீ அவனை மேலே கொண்டு போயக் கொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்". 105. ஓ! என்ன சொல்வேன்! ஆமாம். ஆபிரகாம் அசைந்துக் கொடுக்கவில்லை. தேவனுடைய வார்த்தையினிடம் நடுங்கவில்லை. "சரி கர்த்தாவே, இதோ நான் போகிறேன்" என்றான். விறகைத் தூக்கிக் கொண்டான். பிறகு ஈசாக்கை மலையின் மீது சரியாகக் கொண்டு போனான், அப்படியே சரியாகக் கீழ்படிதலிலே! ஏன்? அவன் தேவனுடைய கட்டளையை முதலாவதாக வைத்தான் 106. அவனுக்கு ஒரே மகன் மாத்திரம் இருக்கும்போது அவன் தேசங்களின் பிதாவாக ஆவது எப்படி? மேலும் இப்போது நூற்றுக்கும் மேலாக வயதாகிவிட்டது. அவன் அதை எப்படி செய் தான்? மரணத்திலிருந்து வந்தவனைப் போல ஈசாக்கைக் கொடுக்க தேவனாலே கூடுமானால், அவனை மரணத்திலிருந்து உயிர்த்து எழ வைக்கவும் அவராலே கூடும் என்பதை உணர்ந்து அறிந்துக் கொண்டான். 107. இப்போது, நண்பர்களே, இந்த உலகத்தின் காரியங் களிலிருந்தும், இந்த பூமியின் கெடுதல்களிலிருந்தும் நம்மை உயிர்த்து எழும்பும்படியாக செய்த தேவனானவர். இன்னும் அதிகக் கூடுதலாகவே நமக்கு நித்திய ஜீவனைக் கொடுத்து, எங்கே மரண மில்லையோ, அந்த தேசத்தில் நம்மை வைக்கவும் அவரால் கூடாதோ? 108. பாருங்கள், நாம் இந்த சோதனைகளைப் பார்த்து, அவைகள் என்னவோவென்று நினைக்கிறோம். ஏன்? அவைகள் சீறிய சோதனைக் காலங்களேத் தவிர வேறே எதுவும் இல்லை. புரிகிறதார தேவனானவர் ஆபிரகாமைப் பரீட்சித்தார், ஆனால் அவன் தன்னுடைய வெற்றியின் நாளைப் பெற்றுக் கொண்டது எப்போது என்றால், தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்படிதலுடன் அவன் அந்த மலைக்குப் போனபோதுதான்! 109. சில காலத்திற்கு முன்பு ஒரு ஊழியக்காரர் அப்போஸ் தலர் 2:38ஐ வாசிக்கக் கேட்டேன். ஆனால் அவர் பேதுரு அவர்கள் கட்டாயமாக ஞானஸ்நானம் பெற வேண்டும் என்றும், அப்போது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வார்கள் என்றும் சொன்னான்' என்றும் வாசித்தப் போது, அவர் சிலதை விட்டு விட் டார். அவர் அதனுடைய மீதமுள்ள பாகத்தைப் படிக்கவில்லை. ஏன்? அந்த அதே காரியத்தைதான் ஸ்தாபனங்கள் எதிர்த்தன. 110. இப்போது உங்களுக்கு ஆலோசனைப் புரிகிறதா? நீ ஏன் இதை செய்கிறாய்? அந்தக் காரியங்களை நீ ஏன் கடந்துப் போகிறாய்? வேதாகமானது அதைச் சொல்லிற்று என்றால், அது சொல்லுகிற விதமாகவே அதைத் தொடர்ந்துப் படியேன்? வேதாகமம் சொல் வதையே சொல்! அப்போதுதான் நீ மறுபடியும் உன்னுடைய குறிப்பார்க்குதலைச் சரியாகக் கொண்டிருக்கிறாய். புரிகிறதா? வார்த்தைச் சொல்வது எதுவோ, அதற்குத் திரும்பி வா! இப்போது நீ குறித் தவறிப் போகிறாய் என்று பார்க்கிறோம். 111. ஆபிரகாம் தன்னுடைய குறிப் பார்க்குதலை சரியாக வைத்திருந்தான். ஏனென்றால், தேவனானவர் , அவனுக்கு எழுபத் தைந்து வயதும், சாராளுக்கு அறுபத்தைந்து வயதும் ஆன காலத் தில்!! "நான் உன்னை தேசங்களுக்குப் பிதாவாக ஆக்கப் போகிறேன்" என்று தேவன் சொன்னார். அவன் தேவனை விசுவாசித்தான். அவன் என்ன செய்தான்?" அவன் "கர்த்தர் இவ்விதமாக உரைக்கிறார்" என்பது எதுவோ, அதன்மீது தன்னுடைய குறியை வைத்தான். "கர்த் தர் இவ்விதமாக உரைக்கிறார்" என்பதாக இருந்ததுடன் மிகவும் சீராக நடந்தான். நாட்கள் நாட்களாக அவன் நடந்தான். அதற்கு முரணான எதுவும் சரியில்லை என்பதாக அறிக்கையிட்டுக் கொண்டே வருஷா வருஷம் நடந்தான். "இல்லை ஐயா! இது அந்த விதமாகத் தான் இருந்து ஆக வேண்டும், தேவன் அவ்விதமாகச் சொன்னார். 112.. "தேசங்களின் பிதாவா? உனக்கு எத்தனைப் பிள்ளைகள் இப்பொழுது இருக்கிறார்கள்?” என்று அவனுடைய எதிரிகளில் சிலர் சொல்லி அவனைச் சுற்றி நடந்துச் சொல்வதை என்னால் கற்பனைச் செய்ய முடிகிறது. "எனக்கு இப்பொழுது எத்தனைப் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பது எந்த வித்தியாசத்தையும் உண்டாக்கவில்லை. நான் தேசங்களின் பிதாவாக இருக்கிறேன்." "உனக்கு எப்படித் தெரியும்?" "தேவன் அவ்விதமாகச் சொன்னார்." 113. அது அதை முடிவு செய்தது. அதற்கு உரியது எல்லாம் அவ்வளவுதான். தேவன் இதைச் சொன்னார். ஆக அது இதை முடித்தது. அவ்விதமாக ஆபிரகாம் போய்க் கொண்டிருந்தான். அப்போது பாருங்கள்; உண்மையுள்ளவனாய் இருக்கும் பட்சத்தில், கூடுதலான உத்தமம் - கூடுதலான பரீட்சைகள், புரிகிறதா? ஆகவே அவர் அவனைச் சரியாக திருப்பிக் கொண்டு வந்தார். - 114. இப்போது ஞாபகமிருக்கட்டும், உனக்கு ஒரு பரீட்சை வரும்போது; தேவன் உன்னை தகுதியுள்ளவனாக நினைத்தார்! இப்போது இதைப் புரிந்துக் கொள்ளத் தவறிவிடாதே! உனக்கு ஒரு சோதனையோ பரீட்சையோ வரும்போது, அது தேவனுடைய கிருபை யைக் காண்பிக்கிறது. நீ தேவனிடத்தில் தயவும் பெற்றாய், தேவனும் நீ இந்தப் பரீட்சையைத் தாங்குவாய் என்று நம்புகிறார். 115. உனக்கு ஞாபகமிருக்கிறதா? அவர் இந்தக் காரியத்தை தான் யோபுவினிடம் செய்தார். "ஓ! ஆமாம். நான் யோபுவைப் பார்த்து விட்டேன்" என்று சாத்தான் சொன்னான். 116. அவன் ஒரு பூரணமான வேலைக்காரன் ஆவன். அங்கே அவனைப் போல யாரும் இல்லை. யோபுவைப் போல அங்கே யாருமே இல்லை. "அவன் ஒரு குறையில்லாத மனிதன் ஆவான். அவன் என் பெருமையும் சந்தோஷமுமாய் இருக்கிறான்” என்று தேவன் சொன் னார். 117. "ஓ! நிச்சயமாக, அவன் கேட்பதெல்லாம் அவனுக்குக் கிடைக்கிறதே?" என்று கூறிய சாத்தான், "ஒரு தடவை அவனை எனக்குத் தாரும். அவனை நான், உம்மை உம்முடைய முகத்திலேயே சபிக்கும்படிச் செய்வேன்" என்றான். 118. "அவன் உன்னுடைய கையில் இருக்கிறான், ஆனால் அவனுடையப் பிராணனை மாத்திரம் எடுக்காதே' என்று தேவன் கூறினார். பார்த்தாயா? தேவனுக்கு யோபுவின் மீது நம்பிக்கை இருந்தது. ஆமென். 119. எல்லாமே கெட்டுப் போனதைப் போலக் காணப்படும் போது, தேவன் உனக்கு ஒரு சோதனையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு உன் மேல் நம்பிக்கை உண்டாயிருக்கிறது. உன்னைக் குழந்தையைப் போல அவர் நடத்த வேண்டிய அவசிய மில்லை. நீ ஒரு பரிசோதனைச் செடியல்ல, ஒரு கலப்பு வர்க்கம் அல்ல! நீ ஒரு மெய்யான கிறிஸ்தவனாயிருக்கிறாய், அதைக் குறித்து நீ என்ன செய்வாய் என்பதைப் பார்க்க தேவன் உனக்கு ஒரு பரீட்சை வைக்கிறார். ஆமென்! 120. "பற்றி எரிகின்ற அக்கினியைப் போன்ற சோதனைகள், ஏன்? இதை சந்தோஷமாக நினைத்துக் கொள். இது உனக்குப் பொன்னைக் காட்டிலும் விலையுயர்ந்ததாயிருக்கிறது" என்று பேதுரு சொன்னது அதிசயமல்லவே! 121. பல சமயங்களில் நாம் முறுமுறுத்து நான் மாத்திரம்..." என்போம். நீமேற் கொள்ளும்படியாக தேவன் கொடுத்த ஏதோ ஒரு காரியம் அது. உன்னால் இதைச் செய்ய முடியும் என்று அவர் அறிவார். அவர் தம்முடைய நம்பிக்கையை உனக்குள் வைத்து விட்டார். 122. மேலும் ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான். தேவ னும், சந்தேகமேயில்லை, சாத்தானிடம் சொன்னார், "அவன் என்னை நேசிக்கிறான் என்று என்னால் அப்படியே நிரூபிக்க முடியும். நான் அதை அவனுக்குச் சொன்னபடியால் அவன் அந்த வாக்குத் தத்தத்தை அப்படியே விசுவாசிக்கிறான்" என்றார். 123. ஆகவே, அவன் தன்னுடைய சொந்தக் குமாரனை அந்த மலையின் உச்சிக்குக் கொண்டு போய், தேவன் சொன்ன அந்த நாளிலே, அவனுடைய கைகளைப் பின்னாகக் கட்டினான். சின்ன ஈசாக்கு சந்தேகத்திற்குள்ளானான். உங்களுக்குத் தெரியுமே, ஆதியா கமம் 22ல், "தகப்பனே" என்று அவன் சொன்னான். "இதோ இருக்கிறேன், என் மகனே” என்று இவன் பதிலளித்தான். 124. "விறகு இங்கேயிருக்கிறது, பலிபீடம் இங்கேயிருக் கிறது, ஆனால், பலியிடப்பட ஆட்டுக்குட்டி எங்கே?" என்று அவன் கேட்டான். பார்த்தீர்களா? அவனுக்குச் சிறிது சங்கடமாக உணர ஆரம்பித்தான். இது எல்லாம் என்ன? நாம் எதையோ விட்டு விட்டோம். 125. நீ எதை விட்டு விட்டோம் என்று நினைக்கிறாயோ, அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. "மற்றவை எல்லாவற் றினுடைய ஐக்கியத்தை நீ விட்டு விட்டாய்... நல்லது நீ உன்னுடைய சீட்டு ஆட்டங்களை அனுபவித்து தான் ஆக வேண்டும். நீ இதை செய்துதான் ஆக வேண்டும், ஒரு சிறிதளவு நீ குடித்துதான் ஆக வேண்டும்! நீ எதையும் விட்டுவிடவில்லை. தொடர்ந்து போ , வார்த் தைக்குக் கீழ்படி, அவ்வளவுதான். வார்த்தைக்கு மாத்திரம் கீழ் படி. நீ எதையும் விட்டுவிடவில்லை. வார்த்தைக்கு மாத்திரம் கீழ்படி. 126. "தேவன் அவனை மேலே எடுத்துக் கொண்டுப் போகச் சொன்னார் , இங்கே மலையின் உச்சியிலே நான் ஏதோ செய்ய வேண்டியது இருக்கிறது. நான் அங்கே போய் சேரும்போது. அதை நான் செய்வேன். 127. ஆகவே அவன் அங்கே மேலே போய், அவனுடைய கரங்களைக் கட்டி, அந்த விதமாக அவனை பலிபீடத்தின் மீது கிடத்தினான். ஈசாக்கு முறுமுறுக்கவில்லை, கீழ்படி பவனாயிருந்தான். புரி கிறதா? கிறிஸ்துவுக்கு ஒரு முன்னடையாளம் ஆகும். பிறகு இவன் தன் கத்தியை உரையிலிருந்து இழுத்து, அவனுடைய உயிரையெடுக்க, அவனுடைய தலைமயிரை அவனுடைய முகத்தைவிட்டு விலக்கினான், அது ஆபிரகாமின் வெற்றியின் நாளாக இருந்தது. ஓ! என்ன சொல்வேன்! அவன், அவனால் தாங்கக் கூடிய கடைசி அளவா யிருக்கிற தன்னுடைய ஒரே குமாரன் வரையிலும் சோதிக்கப்பட் டானே! 128. இப்போது, ஒருபரீட்சை என்பதாக அப்படியே உன்னால் ஆவிக்குள்ளாக எடுத்துக் கொள்ளக் கூடுமானால், தேவனானவர் அவனுடைய குமாரனைத் தந்த போது, அந்த வெற்றியின் நாளை அவன் நேசித்தான். தேவனானவர் விழுந்துப் போன ஆதாமினுடைய இனத்தை அவ்வளவாக நேசித்தார். சிறிது நேரத்தில் நாம் அதற் குச் செல்லுவோம். 129. மோரே மலையின் மீது தேவனானவர் அவனுடைய மகனுக்குப் பதிலாக ஒரு பலியைத் தந்தப் போது, அது ஆபிரகாமின் வெற்றியின் நாளாக இருந்தது. அந்த நாளிலே சந்தேகத்தின் ஒரு நிழலும் இல்லாதபடி, தன்னுடைய உண்மையான விசுவாசத்தை தேவனுக்கு நிரூபித்தான். ஆபிரகாம் தேவனிடமாய் அவனுக்கு இருந்த விசுவாசத்தை அவருக்கு நிரூபித்தான். எப்படியெனில், "ஒரு வாக்கு த்தத்தத்தை விசுவாசித்ததின் மூலமாய் நான் நூறு வயதாயிருந்தப் போது இந்தப் பையனைப் பெற்றுக் கொண்டேன். மேலும் நான் தேசங்களின் பிதாவாக இருப்பதாகச் சொன்னார். அவனுடைய ஜீவனை எடுக்கும்படி அவர் எனக்கு சொன்னால், தேவனானவர் அவனை மரித்தோரிலிருந்து எழும்பச் செய்ய வல்ல வராய் இருக்கிறார்" என்று சொன்னான். 130. ஓ! பிரமாதம்! அது ஒரு பிரஸ்பிடேரியனை கத்த வைக்க வேண்டும்! 131. அவர் எனக்கு ஒரு வாக்குத்தத்தத்தைத் தந்து, இப்போது அதனுடைய சாட்சியையும் அவர் எனக்குக் காண்பித்தார்". ஆமென்! அவர் தம்முடைய வாக்கைக் காப்பாற்றுகிறார் என்பதை அவர் எனக்கு நிரூபித்தக் காண்பித்தார்". 132. சரி, அவர் நம்மை எடுத்தது எங்கே? எந்தவிதமான சீர்கெட்ட நிலையிலிருந்து நான் வெளியே வந்தேன்? எந்த விதமான திலிருந்து நீங்கள் வெளியே வந்தீர்கள்? இந்த காலையில் நம்முடைய சிந்தனைகள் எங்கேயிருக்கிறது? அவர் நம் மத்தியில் இருப்பதாக அவர் ஏன் நிரூபித்தார்? அதைக் குறித்து அங்கே சந்தேகமில்லை. ஆமென். நம் முடைய வெற்றியின் நாளானது நிச்சயமானது! நாம் அதைப் பெற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அவர் அதை நிரூபித்து விட்டார். 133. அவர் இதை எனக்கு நிரூபித்தார். நான் குழந்தை லாமல்லிருந்தேன். நான் ஒரு வயோதிபனாக இருந்தேன். நான் மலடாகவும் என் மனைவியின் கர்ப்பமானது செத்துப் போயும் இருந்தது. அவளுக்கு அறுபத்து ஐந்தும் எனக்கு எழுபத்து ஐந்துமாக இருந்தோம். ஆனால் தேவனானவர் அவள் மூலமாய் நான் உனக்கு ஒரு குழந்தையைத் தரப் போகிறேன்' என்றார். அது . காரியத்தை முடித்தது. அதற்குரியது எல்லாம் அவ்வளவுதான். நான் அதை விசுவாசித்தேன்' என்று ஆபிரகாம் சொன்னான். அப்போது தேவனா னவர் அவனை இருபத்தைந்து வருடகால பரீட்சையில் தூக்கிப் போட்டார். 134. அது ஆபிரகாமுக்கு ஒரு பொருட்டாயிருக்கவில்லை. அவன் முதலில் இருந்ததை விட இன்னும் பெலமடைந்தான். தொடர்ந்து தேவனைப் புகழ்ந்தான். சந்தேகமில்லாமல், தேவனானவர் கீழே நோக்கிப் பார்த்து, "எப்படிப்பட்ட வேலைக்காரன்" என்று சொல்லியிருப்பார். 135. சாத்தானோ "ஓ! சரிதான்... ஆனாலும்...." என்றான். 136. "அவன் என்னை நேசிக்கிறான் என்று நிரூபிக்கிறேன். அவனை அந்த மலையின் உச்சிக்குக் கொண்டு போய் சாட்சியையே அழித்து விடு. அவனை மேலே கொண்டு போ!" பிறகு அதை செய்யும்படியாய் ஆபிரகாம் மேலேறிப் போனான். அது சரி. 137. பிறகு ஆபிரகாம் அவன், குழந்தையின் ஜீவனை எடுக்க ஆரம்பித்த போது, பரிசுத்த ஆவியானவர் அவனுடைய கரத்தைப் பற்றி, "ஆபிரகாமே! உன் கரத்தை நிறுத்து! நீ என்னை நேசிக்கிறாய் என்று நான அறிவேன்!" என்றார். ஆமென். 138. அந்தவிதமான நபராகத் தான் நான் இருக்க விரும்பு கிறேன். என்ன நிகழ்ந்தாலும் அக்கறைப்படாமல் தேவனை நேசிப் பது! " உன் கரத்தை நிறுத்து! நீ என்னை நேசிக்கிறாய் என்பதை நான் அறிவேன், ஏனென்றால், உன்னுடைய ஒரே குமாரனையும்கூட நீ என்னிடத்திலிருந்து பிடித்துக் வைத்துக் கொள்வில்லை. உன்னை ஆசிர்வதிக்கவே ஆசிர்வதித்தேன். மேலும், அவனுடைய வித்து சத்துருவின் வாசல்களில், நிற்பான். மேலும் அவன் ஜெயங் கொள்ளு வான்!" ஓ! என்ன சொல்வேன்! அவர் அதை செய்யவும் செய்தார். 140. சிறிது நேரம் கழித்து நாம் அந்த வித்து என்பதைப் பார்ப்போம். நல்லது. ஆகட்டும்! 141. ஆபிரகாமை விட்டு சந்தேகங்கள் போய் விட்டன. மெய்யான வார்த்தைகளை அவன் கேட்ட போது சந்தேகங்கள் போய் விட்டன. தேவனானவர் வார்த்தையை நிரூபிப்பதை அவன் பார்த்த போது சந்தேகங்கள் போய் விட்டன, அன்பு தன் ஸ்தானத்தைப் பற்றிக் கொண்டது. "நீ என்னை ஒரு சிறிது கூட சந்தேகிக்கவில்லை. நீ எவ்வளவு நீண்ட காலமாக காத்திருக்கும்படியாக நேர்ந்தாலும் பொருட்டல்ல, நீ தொடர்ந்து என்னை விசுவாசிக்கிறாய். நான் உனக்குத் தந்த அந்த அடையாள சாட்சியையே அழிக்கும்படி உனக்குச் சொன்னேன், நீ அவ்வளவு நன்றாக என்னை நேசித்தப் படியால், அது என்னவாக இருந்தாலும் பொருட்படுத்தாமல் என் வார்த்தையைக் கடைப்பிடிக்கிறவனாயிருக்கிறாய்!" ஆமென். அது தேவனுக்கும் கூட ஒரு மெய்யான வெற்றியின் நாளாக இருந்தது. 142. ஒரு சமயம் யாக்கோபு ஒரு வெற்றியின் நாளைக் கண் டான். அவன் தீமை செய்தபடியினால் தன் சகோதரனிடம் திரும்பிப் போக பயந்தான். ஆனால், இருப்பினும், "நீ எங்கேயிருந்து வந்தாயோ, அங்கே உன் சொந்த பூமிக்குத் திரும்பிப் போ!" என்று பரிசுத்த ஆவியானவர் அவனை எச்சரித்தார். "நீ உன் சொந்த நாட்டிலிருந்து வந்தாய், அங்கே நீ தீமையை செய்தாய், இப்போது, நான் உன்னை திருப்பி அனுப்புகிறேன்". 143. அவன் நெருங்கி வந்தபோது, எவ்வளவு நெருங்கி வந்தானோ, கட்டாயமாக, நிச்சயமாகவே, அதினால் தான் பிசாசான வன் அவ்வளவாய் நம்மை தொடருகிறான். புரிகிறதா? பிசாவானவன் இப்போது, இதுவரையிலும், இப்படியாக மணவாட்டியை சபையை தொல்லைப்படுத்துவதின் காரணம் அதுதான். இது வெற்றியின் நாளை மிகவும் நெருங்கியிருக்கிறது. அது சரி. அவள் மிகவும் நெருங்கி விட்டாள். அந்த சமயத்தில்தான் சத்துருவானவன் வெகுவாக, தன்னுடைய மிகுதியான தீமையை எந்த வழியிலாவது செய்வான். வேதாகமானது, "பூமியின் மீது இருக்கிறவர்கறாக்கு ஐயோ, எனென்றால் பிசாசானவன் இந்த கடைசி நாட்களில், கெர்ஜிக்கிற சிங்கத்தைப் போல சுற்றித் திரிந்து யாரை வேண்டுமானாலும் விழுங்குகிறான்" என்று கூறுகிறது. நீங்கள் பார்த்தீர்களா? அவர் களுக்கு ஐயோ!" கொல்லப்படுவது போன்றவைகள் நிகழும். அதை சரியாக பற்றிக்கொள், நீ இடது பக்கமோ, வலது பக்கமோ நகராதே! சரியாக வார்த்தையோடு நிலைத்திரு! தேவன் அவ்விதமாகச் சொன்னார். அதுதான் முடிவு. 144. யாக்கோபு தன் இருதயத்தலே ஏங்கினான். எல்லாமே சரியில்லாமல் காணப்பட்டது. அவன் தன்னுடைய வீட்டிற்கு திரும்பிப் போக வாஞ்சித்தான். பரிசுத்த ஆவியானவர் அவனை வழிநடத்தினார். அவன், தான் பெத்தேலுக்கு போய் தன்னுடைய தசமபாகங்களை செலுத்துவதாக தேவனுக்கு வாக்குத்தத்தம் கொடுத்திருந்தான். ஆகவே, இங்கே அவன் திரும்பி வருகிற பாதையிலே, அவனுடைய எதிரியாயிருக்கிற சகோதரனானவன், இதோ நதிக்கு அப்பாலே, ஒரு சேனையுடன் தனக்காக காத்திருக்கிறான் என்பதாக அவன் தெரிந்து கொள்ளுகிறான். யாக்கோபு ஒரு கோழையாயிருந்தான் , ஆகிலும், தேவனுடைய ஆசீர்வாதங்களையுடையவனாயிருந்தான், அவன் பிறப்புரிமையை உடையவனாக இருந்தான். ஆமென்! 145. இன்றைக்கு பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்துடன் உள்ள சபைக்கு, இது எப்படிப்பட்ட ஒரு முன்னடையாளம் ஆகும். அதை வெளிப்படுத்தி நிரூபிக்க தேவனுடைய வாக்குத்தத்தத்துடனே! ஏனென்றால், நீ அந்த வார்த்தையின், பிறப்புரிமையின் ஒரு பாகமாக ஆகிவிடுகிறாய். எனவே யாக்கோபினிடம் அந்த பிறப்புரிமை இருந்தது. ஆமென். அவனுடைய சகோதரன் அதற்காக அக்கறைக் கொள்ளவில்லை, பிறகு இவனுக்கு அந்த பிறப்புரிமை இருந்தது. ஏனென்றால் இவனுடைய சகோதரன் அதை இவனுக்கு சிறிது கூழுக்காக விற்றுப் போட்டான். 146. மேலும், இன்றைக்கு சபை உலகமும் அவ்விதமாகவே தங்களுடைய பிறப்புரிமையை விற்றுப் போட்டார்கள். மேலும், தேவனுக்கு நன்றி, நாம் அதை உடையவர்களாயிருக்கிறோம். நாம் இந்த பிறப்புரிமையை உடையவர்களாயிருக்கும் வரையில், இந்த சபைகளின் சங்கத்தைப் பற்றியும், தேசங்களின் கூட்டமைப்பைப் பற்றியும், மற்ற இந்த எல்லாக் காரியங்களைப் பற்றியும் நமக்கு என்ன கவலை? சபையானது செய்யத் தேவையாயிருப்பது என்ன தெரியுமா? நீ உன்னுடைய வெற்றியின் நாளைப் பெற்றுக் கொள்ளும் வரையில், யாக்கோபு செய்ததைப் போல ஜெபிப்பதுதான் அது! 147. யாக்கோபு ஒரு மல்யுத்த விளையாட்டை அனுபவித்தான். அவன் இரவு நேரம் முழுவதும் கர்த்தரோடு போராடினான். ஆனால் அவன், "இந்த வெற்றியை நான் பெற்றுக்கொள்ளும் வரையிலும் நான் உம்மை போக விடமாட்டேன்" என்று சொன்னான். அப்போது, காலையில், வெளிச்சத்தின் போது அவனுக்கு ஒரு வெற்றியின் நாள் கிடைத்தது. அவன் அதற்குப் பின் அதே விதமாக நடக்கவில்லை. இந்தப் பக்கத்திலே அவன் ஒரு பெரிய, பலசாலியான, பயப்படத் தக்க, சபை அங்கத்தினனாயிருந்தான். ஆனால் அடுத்தப் பக்கத் திலேயே முழு சேனையையும் எதிர்த்து சண்டையிட, போதுமான அளவு தைரியத்தையுடைய ஒரு நொண்டுகிற அதிபதியாயிருந்தான். 148. "நான் சேனையைக் கொடுக்கிறேன்" என்றான். 149. இவனோ , "எனக்கு அது தேவையில்லை" என்றான். அவன் ஒரு வெற்றியின் நாளைப் பெற்றுக் கொண்டான். 150. நமக்கு அவர்களுடைய நிர்வாகங்கள் தேவையில்லை. நமக்கு அவர்களுடைய உலகத்தின் பொருள் தேவையில்லை. உலகத்தின் காரியங்களுடன் ஒன்று சேர்ந்து போகும்படியான தேவை நமக்குக் கிடையாது. நாம் ஒரு வெற்றியின் நாளைப் பெற்று விட்டோம். நாம் ஒரு இரவு போராடினோம். நான் எனக்குத்தானே சாக வேண்டியிருந்த அந்தப் போராட்டத்தை, ஓ! நான் எவ்வளவாக நினைவுகூருகிறேன்! ஆனால் அதோ, ஒரு வெற்றியின் நாள் வந்தது. நான் அந்த வெற்றியைப் பெற்றப் பொழுது, அப்போது தேவனுடைய வார்த்தை எனக்கு சரியாக ஆயிற்று, பிறகு பாப்டிஸ்டு சபையானது எனக்கு, மற்ற வேறு எந்த ஸ்தாபனத்தைக் காட்டிலும் விசேஷமாக இல்லாமற்போயிற்று. அது சரி! நான் ஒரு வெற்றியின் நாளைப் பெற்றுக் கொண்டேன். தேவனுடைய வார்த்தையானது சரியாக இருக்கிறது. டாக்டர் டேவிஸ் என்பவர் "ஏன், நீ ஒரு பரிசுத்த பைத்தியமாக (fanatic) ஆகிவிடுவாய்” என்றார். 151. "பரிசுத்த பைத்தியமானாலும், பரிசுத்த பைத்தியமாகா விட்டாலும்" என்று சொன்னேன். அங்கே மேலே, கிரீன்ஸ்மில்லில் இரவு முழுவதும் ஜெபத்தில் இருந்தேன், கடைசியில் அன்றைக்குக் காலையிலே, தேவதூதனானவர் அங்கே அந்த வெளிச்சத்துடன் உள்ளே வந்தார். அங்கேதானே, நான், போராடுவதற்காக, கர்த்தர் கொடுத்த, அந்த ஒரு காரியமாகிய தரிசனங்களை, நான் ஒழித்துப் போட முயற்சிப்பதை எனக்குப் புரிய வைத்தார். அவர்கள் அது "பிசாசி னுடையது" என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, பிறகு அவர் வந்து எனக்குச் சொல்லி, வேதவசனங்களை திருப்பி சுட்டிக்காட்டி, "தேவனுடைய குமாரனைப் பற்றியும்கூட அவர்கள் அதே காரியத்தை சொல்லவில்லையா?” என மேலும் அவ்விதமானவைகளைச் சொன்னார். நான் ஒரு வெற்றியின் நாளைப் பெற்றுக் கொண்டேன். அது, அவர் கள் சொன்னது, வேறே எனக்கு வேண்டாம். நான் வயல்களுக்கும், பிறகு உலகத்தைச் சுற்றிலும் போனேன். ஒரு வெற்றியின் நாள்! 152. யாக்கோபு, இந்த வெற்றியின் நாளைப் பெற்றுக் கொண்டான். அவன் இரவெல்லாம் போராடினான். ஆனால், நாளானது விடியும்போது, அது அவனுக்கு ஒரு வெற்ற்யின் நாளாக இருந்தது. 153. இந்தப் பெரிய வெற்றிகளும், காரியங்களுமெல்லாம் நீ இந்தக் காரியங்களைப் பற்றி பேசுவாயானால், அங்கே நிறுத்துவதற்கே இடம் இல்லையல்லவா? இந்த பெரிய வெற்றிகள் எல்லாம் நன்றாக உள்ளன. நாம் அவைகள் ஒவ்வொன்றையும் மெச்சிக் கொள்ளுகிறோம். அவைகள் எல்லாம் சிறந்த வெற்றிகள் ஆகும். யுத்தங்களின் சிறந்த வெற்றிகளும் மற்றும் ஆவிக்குரிய யுத்தங்களின் பெரிய வெற்றிகள் சிறந்தவைகளாயிருந்தன. ஆனால், நீ கவனித்தாயானால், அவைகளில் ஒன்றுகூட நிலையாக இல்லை, பார்த் தீர்களா? நாம் பெரிய வெற்றியைக் கண்டோம், தற்காலிகமாக! கொஞ்ச காலத்திற்கு முன்புதான் நாம் ஜப்பானுடன் யுத்தத்திற்குப் போனபோது நாம் இங்கே கண்டோம். 154. ஏன், எங்கள் வீட்டிலே, அங்கே, ஒரு சிறிய, குட்டியான சாதனம் இருந்தது. யாரோ எங்களுக்கு ஒரு சிறிய பொருளைக் கொடுத்திருந்தார்கள், பாருங்கள், ஒரு பொம்மை மாதிரி , மேலும் அதின் மீது Made in Japan என்று இருந்தது. ஒரு நண்பர் அதை கீழே எறிந்து அதை உடைத்து விட்டார். புரிகிறதா? நீ ஜப்பானில் செய்யப்பட்டது என்று சொல்லும் போதும் அவர்கள் அதை வெளியிலே எறிந்து விடுவார்கள். அவர்கள் பத்து சென்ட்டு கடைக்குப் போவார்கள், ஒருரிக்கிகள் கூட்டம், உங்களுக்கு தெரியுமே, அடங்காத மக்கள், அப்படியே சாமர்த்தியமாக நடந்துக் கொள்வதற்காகவே பத்து சென்ட்டு கடைக்குள் போவார்கள். உள்ளே போய் ஜப்பானில் செய்யப்பட்ட பொருள்களை வாங்குவார்கள். அவர்கள் தங்களுடைய தேகப் பற்றுதலைக் காண்பிக்க விரும்புவார்கள். தேவனுக்குக் காண்பிக்க வேண்டியதைப் பற்றி என்ன? அவருடைய முகத்திலேயே சிரிப்பார்கள், புரிகிறதா? அந்த பத்து சென்ட்டு கடைக்குள்ளே ஓடி, கடை ஷெல்புகளையும், பலகைகளையும், அவைகளின் மேலே ஜப்பானில் செய்யப்பட்டதான சிறு பொருள்களும் பொம்மைகளும் இருந்த ஒரே காரணத்தினிமித்தம், கீழே தள்ளிப் போடுவதற்கு அவர்கள் அவ்வளவு ஆவலுடன் இருந்தார்கள், ஏனென்றால், அவர் அவ்வளவு தேசப்பற்றுதலுடன், இருந்தார்கள் என்றால், சிகரெட்டு புகைப் பதையும் குடிப்பதையும் பொய் சொல்லுவதையும் திருடுவதையும், மேலும் அது போன்ற காரியங்களைப் பற்றியும் என்ன சொல்லு கிறீர்கள்? தேவனுடைய மெய்யான சேனைக்குப் புரிகின்றதா? அவர்கள் பற்றுதலுடன் இருக்க விரும்பினார்கள். நாம் பற்றுதலாய் இருப்பதைப் பற்றி என்ன சொல்கிறாய்? அவர்கள் அதைச் செய்வதற்காக சிறைக்குச் சென்றார்கள் என்றால், அதினால் உண்டான வித்தியாசம் என்ன? அவர்கள் தேசத்திற்கு, தேசீயக் கொடிக்கு உண்மை யுள்ளவர்களாய் இருக்க விரும்பினார்கள்; ஆனால் கிறிஸ்தவர்கள் சில சமயத்தில், தெளிவாகப் பேசப் பயப்படுகிறார்கள், பார்த்தீர்களா? அந்த காரணத்தினிமித்தம் நமக்கு கூடுதலான வெற்றியின் நாட்கள் தேவைப்படுகிறது. அப்போது நீ உன்னையே ஜெயிக்கப்படும்படி யாகச் செய்யலாம். தேவனானவர் தம்முடைய அன்பின் வல்லமை யினாலே உன்னை வெற்றிக் கொள்ள இடங்கொடு. 155. இந்தப் பெரிய வெற்றிகளெல்லாம் மோசேக்கும் கூட தற்காலிக வெற்றிகள் ஆகும். இஸ்ரவேலர் நேராகத் திரும்பி அடிமைத்தனத்திற்குள்ளே நேராக பிரவேசித்தார்கள். நாம் பார்க்கிறபடி அவர்கள் எல்லாக் காலங்களிலும் உள்ளும் வெளியுமாக உள்ளும் வெளியுமாகப் போனார்கள். பல வீரர்கள் போரிட்டு மடிந்தார்கள், அவர்கள் இன்னும்கூட மாம்சமான குறிப்பார்க்கு தலிலே, அதை யுத்தங்களிலே செய்கிறார்கள். அவர்கள் அதை ஆவிக்குரியவைகளிலும் செய்கிறார்கள். வீரர்கள் போரிட்டு மரண மடைகிறார்கள். நம்மால் எப்படியாக கீழே போக முடிகிறது... நான், தானியேல் மற்றும் எபிரேயப் பிள்ளைகள் மற்றும் அதுபோல ஒரு முழுமையான வரிசையை இங்கே குறித்து வைத்துள்ளேன். அங்கே கடந்த காலத்தில் சிறந்த வெற்றிகளை வென்றார்கள், ஆனால் அவர்கள் தொடர்ந்து செயல்பட, முடிவிலே "மரணம்” என்று அழைக்கப்பட்ட ஒன்று வந்து அவர்களை எடுத்துக் கொண்டது. அவர்கள் தொடர்ந்து அவ்விதமாகவே போய்க் கொண்டிருந்தார்கள். இன்னும் கூட போராடுவது, மரிப்பது, வெற்றிகளை வென்று மரிப்பது, வெற்றிகளை வென்று மரிப்பது! 156. ஆனால் நீங்கள் பாருங்களேன். எல்லாம் இருப்பினும், மனிதனானவன் மரிப்பதற்காக உருவாக்கப்படவில்லை. மனிதன் ஜீவிப்பதற்காகவே உருவாக்கப்பட்டான். மேலும், அவன் எத்தனை சாதனைகளைச் செய்தாலும் பொருட்டல்ல, அவன் எப்படியும் அதே விதமாகவே மரித்தான். பிறகு அவன் கல்லறைக்குப் போனான், அவனை புதைத்தார்கள், அது அதை முடிவுபடுத்தியது. அங்கே வெளியே அவர்கள் அவனுடைய கல்லறையை ஒரு கல்லினால் அடையாளம் குறித்தார்கள், ஒரு சமாதி உண்டாயிற்று, பிறகு அவனுடைய முடிவு அதுதான். மரணம் அவனை விழுங்கிப் போட்டது. 157. அந்த மேன்மையான மோசே, பெரிய யோசுவா, வேதத்தின் பெரிய தீர்க்கதரிசிகள், இரண்டு மூன்று பேர்களைத் தவிர, அவர்கள் எல்லாருமே, இவர்களுடைய கல்லறைகள் எங்கே என்றும், அவைகளை அவர்கள் அதை எங்கே குறியிட்டிருக்கிறார்கள் என்றும் நாம் அறிவோம்; மரணமானது அவர்களை விழுங்கிப் போட்டு, அவர்களை தொடர்ந்து கைப்பற்றியது. ஆனால் ஒரு நாள் அங்கே ஒரு யுத்தம் வந்தது; பிரதான யுத்த வீரர் கீழேயிறங்கி வந்தார், இயேசு கிறிஸ்து! தேவனுடைய குமாரன். பிறகு அங்கே ஒரு உயிர்த்தெழுதல் உண்டாயிற்று. இயேசுவானவர் யுத்தம் செய்து மேற்கொண்ட பிறகு அது ஒரு உண்மையான வெற்றியின் நாளாக இருந்தது. எதிர்த்து யுத்தம் செய்யும்படியாக அங்கே இருந்த எல்லா சத்துருக்களையும் எதிர்த்து, அவர் யுத்தம் செய்தார். 158. அவர் பிறந்தபொழுது, முதலாவதாக என்ன தெரியுமா? முதலாவதாக அவர் ஒரு அசுத்தம் பெயரோடு பிறந்தார். ஒரு முறைக் கெட்டப் பிள்ளையைப் போல மக்கள் மத்தியில் இருந்தார். அதின் காரியத்தை அவர்தாமே போராட வேண்டியிருந்தது. மரியாள் கலியாணம் ஆகாதவளாகவே இந்தக் குழந்தையை யோசேப்புக்குப் பெற்றெடுத்தாள்! அவர் பாலிய குழந்தைகள் மத்தியில் ஒரு கெட்ட பெயரோடு வந்தார். ஆனால் தம்முடைய இருதயத்திலோ , தாம் தேவனுடைய குமாரனாக இருப்பதை அறிந்திருந்தார். புரிகிறதா? அவர் அதையும் எதிர்த்துப் போராடினார். 159. தாம் என்ன செய்யப் போகிறார் என்று தம்முடைய முடிவை எடுக்கும் அந்த நாளுக்கு வந்தார். இது, அவர் பரிசுத்த ஆவியைப் பெற்றப் பிறகு. சாத்தான், அவரை மலையின் மேலே கொண்டு போய், அவருக்கு உலகத்தின் சகல இராஜ்யங்களையும் காண்பித்து, "இப்போது நான் உன்னை ஒரு இராஜாவாக மாற்றுவேன். நீர் தேவனுடைய குமாரன் என்றும், நீர் வல்லமையை உடையவராக இருக்கிறீர் என்றும் சொல்லுகிறீர்" - "நான் எல்லா தேசங்களின் மேலும் அதிகாரத்தை உமக்கு தருவேன்" என்றான். (சரியாக அந்திக்கிறிஸ்துதானே, இவ்விதமாக இருக்க இன்றைய நாளிலே முயற்சி செய்கிறான்) அது ஒரு வெற்றியின் நாளாக இருந்தது, அதையும் அவர் நேராக எதிர்த்து போராடினார். 160. "நீர் தேவனுடைய குமாரனாக இருந்தால்...." என்று சொன்னான். அங்கே ஒரு சந்தர்ப்பம் வந்தது. அப்போது அவருக்கு வார்த்தையின் மூலமாய் சவால் விடப்பட்டது. "நீர் தேவனுடைய குமாரனாக இருந்தால் இந்த கல்லுகள் அப்பமாக மாற கட்டளை கொடும். மேலும் நீர் பசியாயிருக்கிறீர். இப்போது அவைகளை சாப்பிடும். நீர் தேவனுடைய குமாரனாயிருந்தால் உம்மால் இதை செய்ய முடியும்” என்று சொன்னான். 161. அவர் அதை செய்திருக்கலாம், அது வாஸ்தவம்தான். ஆனால் அங்கே ஒரு வெற்றியின் நாள் இருந்தாக வேண்டுமே? அவர் சோதனையின் மீது ஒரு வெற்றியைப் பெற்றுக் கொண்டார். 162. "இப்போது, நீர் ஒரு பெரிய ஆளாக இருக்கலாம், நீர் என்னவாய் இருக்கிறீர் என்று உமக்கே நீர் காண்பிக்கலாம்" என்று சொன்னான். அவரை கோபுரத்தின் கூர்முனைக்குக் கொண்டுபோய், "கீழே விழும் ! நான் உமக்கு வேத வசனங்களை சொல்லி காண்பிக்கிறேன். நீர் உம்முடைய பாதங்களை கல்லின் மீது இடித்துக்கொள்ளும்போது தேவ தூதர்கள் உம்மை தூக்கி தாங்குவார்கள் என்பதாக அவர் அவர்களுக்குச் சொல்லி உம்மேல் கண்காணிப்பை அவர்களுக்குக் கொடுப்பார்" என்று சொன்னான். அந்த சாத் தானானவன் ஒரு வேதாகமப் பண்டிதனாயிருந்தான். 163. "என் பின்னாலே போ, சாத்தானே" என்பதாக வார்த்தை வந்தது. இது ஒரு வெற்றியின் நாளாக இருந்தது. அவர் ஒவ்வொரு வெற்றியின் நாளையும் கண்டார். 164. அவர் நடந்து போய், பேதுருவின் மனைவியின் தாயானவள் சுர வியாதியாலே படுத்துக்கிடந்த இடத்திற்கு வந்தார். அவளுடைய சரீரத்திலே சுரமானது சீறிக் கொண்டிருந்தது. அவர் களுக்கு சேவை தேவைப்பட்டது. அவர் நடந்து அங்கே போய், அவளுடைய கரங்களைத் தொட்டார். வியாதியானது அவருடைய சமூகத்தில் நிற்கக் கூடாமற்போயிற்று. நிச்சயமாக கூடாமற் போயிற்று. 165. பிறகு அவர் ஒரு இடத்திற்கு வந்தார். அங்கே ஒரு குடும்பத்தில் மரணம் சம்பவித்திருந்தது. அவர் ஒரு இடத்திற்கு வந்தார். அங்கே லாசரு என்ற பெயரையுடைய மனுஷன், அவருடைய நண்பனாயிருந்தவன், அவன் மரித்துப் போனான், பிறகு புதைக்கப் 'பட்டு கல்லறையில் கிடந்து, நாறிப் போய், அழுகிப் போயிருந்தான். (அது சுமார் நான்கு நாளுயிருந்தது. மேலும் சரீரமானது மூன்று நாளிலே அழுகத் தொடங்குகிறது - 72 மணி நேரத்திலே) அங்கே ஜீவனையும் மரணத்தையும் சந்திக்கும் சந்தர்ப்பம் வந்தது'. இங்கே, அவர், ஜீவனானவர் இருக்கிறார்; அங்கே அவருடைய சிநேகிதனை எடுத்துக் கொண்ட மரணம் இருந்தது. இது ஒரு நேர் எதிர் தாக்குதலாக இருந்தது. 166. அவர் கல்லறை மட்டுமாய் நடந்துப் போனார். தம்முடைய சிறிய தோள்களைப் பின்னே தள்ளி, "லாசருவே! வெளியே வா!" என்று சொன்னார். ஓ! என்ன சொல்வேன்! அந்த வார்த்தையானது புறப்பட்டுப் போன வேளையிலே அது தேவனுடைய வார்த்தையாக இருந்தது. ஜீவனானது தனக்குள்ளே மறுபடியும் பொங்கிற்று. அங்கே பின்னாலே மறுபக்கம் எங்கேயோயிருந்து அந்த பாதிக்கப்பட்டவன் திரும்பி வந்தான். மறுபடியுமாக ஜீவனுக்குள் வந்தான். நிச்சயமாக, அவர் வெற்றியைப் பெற்றுக் கொண்டார். அது சரிதான்! 167. வியாதிகள், சோதனை. இருக்கக்கூடிய எல்லாம், அதின் ஒவ்வொரு சிறு அணுவோடும் அவர் போராடி முடித்தார். ஒரு வெற்றியின் நாள் மிகப் பொருத்தமாய் சரி! பிறகு அவர் முழு உலக மும் ஒரு நிழலிலே , மரணத்தின் நிழலிலே கிடக்கும்படியான நேரத்திற்குள் வந்தார். ஒவ்வொரு மனுஷனும், ஒவ்வொரு மனுஷப் பிறவியும், ஒவ்வொரு தீர்க்கதரிசியும், ஒவ்வொரு மேன்மையான மனுஷனும், அவர் அனுப்பி வைத்த இந்த எல்லா சிறந்த வீரர்களும், அவர்கள் எல்லாம் அங்கே விழுந்துக் கிடந்தார்கள். அதோ அங்கே, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு , யோசேப்பு - அவர்கள் எல்லாரும் விசுவாசித்தவர்களாக அதோ பின்புறத்திலே கல்லறைகளில் படுத்துக்கிடந்தார்கள். வெறுமனே, "தேவனுடைய வார்த்தையானது இவ்விதமாக சொல்லிற்று" என்பதைத் தவிர வேறே சாட்சி கிடை யாது! தேவன் அவ்விதமாகச் சொன்னார். 168. யோபுவைப் பாருங்கள், "அவன் அவ்வளவு கடின மாகப் போராடும் போது, அவனுடைய வழித் துணையான தன்னுடைய மனைவியைப் பற்றியும் கூட அவன், "அவளுடைய சுவாசமும் கூட எனக்கு அந்நியமாகி விட்டது" என்று சொன்னான். எப்படிப்பட்ட நேரத்தை அந்த மனிதன் கண்டான். அந்த சோதனைகள், சோப்பார், மற்றவர்கள் வரையிலும் கூட அவனைக் குற்றப்படுத்தவும், அது போன்றக் காரியங்களைக் செய்யவும் முயற்சித்தார்கள். ஆனால் அவனோ, தான் வார்த்தையுடனே நிலைத்திருப்பதை அறிந்திருந்தான். பிறகு அவனுடைய மனைவி வந்து, "யோபுவே. நீ வேதனைக்கு உள்ளனவனாகக் காணப்படுகிறாய், நீ ஏன் அப்படியே தேவனை சபித்துவிட்டு மரித்துப் போகக் கூடாது?" என்று கேட்டான். 169. அவனோ, "நீ ஒரு முட்டாள் ஸ்திரீயைப் போல பேசுகி றாய்" என்றான். ஓ! ஆஹா! எப்படிப்பட்ட வீரன் ! இயேசுவும் கூட அவனைக் குறிப்பிட்டுப் பேசி, "யோபுவின் பொறுமையைக் குறித்து நீங்கள் கேள்விப்படவில்லையா?" என்று சொன்னார். யோபு சேணத்தைக் கட்டிக் கொண்டிருக்கிற நிலையிலேயே தன்னுடைய காலத்தை முடித்தான். 170. ஆபிரகாமும் சேணத்தைக் கட்டிக்கொண்டுள்ளபடியே தன் காலத்தை முடித்தான். யோசேப்பும் சேணத்தைக் கட்டிக் கொண்டுள்ளபடியே தன் காலத்தை முடித்தான். யோசேப்பு, "என்னை அங்கே மேலே, அடக்கம் செய்யுங்கள். அங்கே மேலே என்னுடைய பிதாக்களுடன் என்னை அடக்கம் செய்யுங்கள். அவர்கள் புதைக்கப்பட்ட விதமாக என்னை புதையுங்கள். அது தான் வார்த்தை. அவர்கள் புதைக்கப்பட்ட சமபூமியில், அவர்கள் புதைக்கப்பட்ட ஸ்தலத்தில் என்னை புதையுங்கள்" என்று சொன்னான். 171. என் காரியமும் அதுவே தான். நான் இயேசுவின் நாமத்தில் புதைக்கப்பட விரும்புவதின் காரணம் அது தான். "ஏனெனில், கிறிஸ்துவுக்குள்ளே இருப்பவர்களை தேவன் தம்முடனே கூட கொண்டு வருவார்". 172. ஆகவே இந்த வீரர்கள், வீரர்கள், வீரர்கள் போய்க் கொண்டே, போய்க்கொண்டே இருந்தார்கள் என்பதாக நாம் காண்கிறோம். பிறகு அவர்களுடைய பிரதான படைத் தலைவனானவர் அவர்களை அனுப்பும்படியான நாள் வந்தது. மேலும் அவர்கள் யுத்தக் களத்தில் விழுந்தும் போனார்கள். பெரிய வெற்றி வீரர்கள், அவர்கள் தங்களுடைய வெற்றியின் நாளுக்கு வந்தார்கள். மேலும் அவர்கள் சத்துருவின் மீது வெற்றியைப் பெற்றார்கள். 173. யோசுவாவும் கூட, நேரம் தேவைபட்டதினால், தன்னு டைய சொந்த வார்த்தைகளினால் சூரியனை நிறுத்தினான். சூரிய னானது 24 மணி நேரத்திற்கு கீழே இறங்காமலிருந்தது. வேதாகமம், "அதற்கு முன்பாகவும், அதற்குப் பிறகும் சூரியனை தரித்து நிற்கும்படியாய் கட்டளையிட்ட ஒரு மனிதன் இருந்ததே கிடையாது. மேலும் தேவன் அந்த மனிதனின் சத்தத்திற்கு செவி கொடுத்தார்" என்று கூறுகிறது. ஏன்? அவன் சத்துருவை எல்லாவிதத்திலும் தூக்கியெறிந்திருந்தான். அவர்கள் எல்லாரும் எல்லா இடங்களிலும் தூக்கி ஏறியப்பட்டார்கள். அவன் அவர்களை தேடிப் பிடித்து அவர்களைக் கொல்ல வேண்டியிருந்தது. அதற்குரியக் காரியம் அவ்வளவுதான், ஏனென்றால் அது தான் அவனுக்குக் கொடுக்கப் பட்டக் கட்டளையாகும். இரவு நேரம் வந்துவிட்டால், ஒன்றுகூடி செயல்பட அவர்களுக்கு நேரம் கிடைத்து விடும் என்றும், பிறகு தான் இன்னும் கூடுதலான ஆட்களை இழக்க நேரிடும் என்றும் அவன் அறிந்திருந்தான். ஆகவே அவன், "எனக்கு நேரம் தேவைப்படு கிறது. எனக்கு வெளிச்சம் தேவையாயிருக்கிறது. சூரியனே தரித்து நில்!" என்று சொன்னான். ஆமென்! தேவனே! தேவனானவர், ஒரு மனிதனுடைய வார்த்தைக்கு செவி கொடுத்து, சூரியனை நிறுத்தினார். அது ஒரே இடத்தில் 24 மணி நேரத்திற்கு நின்றது - அவன் அவர்களுடன் யுத்தம் செய்து, சத்துருக்களில் ஒவ்வொருவனையும் தேடி வெளியே இழுத்து, அவர்களை அடித்துப் போடும் வரையிலும் அவர்கள் அவர்களுக்கு, மறுபடியும் ஒன்று சேர்ந்து எதிர்க்கும் படியான அவகாசத்தைத் தரவில்லை! அவன் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தான். இருப்பினும் யோசுவா தன்னுடைய ஜீவனை கீழே கிடத்தினான். பூமியின் தூசியிலே படுத்துக் கொண்டிருக்கிறான். 174. ஆனால் இந்த மகா மேன்மைப் பொருந்திய அதிபதி, தானியேல் ஒருவரைப் பார்த்தானே, அவர், கிறிஸ்து, வந்த போது, அந்த மகாப் பெரிய யுத்த வீரனான தானியேல், தொல்லைகளுக்கும் அது போன்றவைகளுக்கும் மத்தியிலே, ஓ! நமக்கு நேரம் இருந்தால் நாம் அவனையும் ஒப்பிட்டுப் பார்த்திருக்கலாம். ஆயினும், அவனும் பூமியின் தூசியிலே படுத்தான். அவர், "நீ உன்னுடைய சுதந்திர வீதத்திலே இளைப்பாறிக் கொண்டிருப்பாய், ஆனால், தானியேலே, நீ மறுபடியும் நிற்பாய்” என்று சொன்னார். 175. இப்போழுது, வாக்குத்தத்தமானது அவனுக்குக் கொடுக் கப்பட்டது, இந்த வீரர்கள் அனைவருக்குமே, பிறகு முடிவிலே, அவர்களுடைய முக்கியமான மணி நேரத்தில், இது செலுத்தப் பட்டுதான் ஆக வேண்டும் என்ற காலம் வந்தது. இயேசுவானவர் பூமிக்கு வந்துவிட்டார். அவர் ஒவ்வொரு வியாதியையும் ஜெயித்தார். அவர் எல்லாவற்றையும் ஜெயித்தார். இப்போழுது அவர் கல்லறை யையும் ஜெயித்து ஆக வேண்டும். அவர் மரணத்தை ஜெயித்து விட்டார். மரணத்தால் அவருடைய சமூகத்தில் நிற்க முடியாமற் போயிற்று. அவர் ஒரு அடக்க ஆராதனை பிரசங்கமும் செய்யவில்லை , இல்லை, ஐயா! நாயினூர் விதவையானவள் தன்னுடைய மகனுடன் அவ்விதமாக வெளியே வந்தாள். எனவே, அவர் நிறுத்தி, அவனை எழுப்பினார். ஓ! என்ன சொல்வேன்! ஆம் ஐயா! தமக்கு மரணத்தை மேற்கொள்ளும் வல்லமை உண்டு என்பதை அவர் நிரூபித்தார். 176. இப்பொழுது இன்னும் இரண்டு விரோதிகள் அங்கே இருந்தன, அவைகள் , அதோ அங்கே வெளியில் உள்ள கல்லறையும் நரகமும் ஆகும். ஆகவே அந்த நாளிலே, சூரியன் பிரகாசிப்பதை நிறுத்திவிடும்படியாகவும், பூமியானது நடுங்கி விழும்படியாகவும், பாறைகள் மலைகளிலிருந்து பெயர்ந்து எறியப்படும்படியாகவும், அவர் அவ்வளவாய் மரிக்கவே மரித்தார். அவர் மரணத்தை ஜெயித்தார்; அவர் பாதாளத்தை ஜெயித்தார். உயிர்த்தெழுதலின் காலையில் அவர் கல்லறையை ஜெயித்தார். ஆமென்! ஒரு பூரணமான வெற்றியின் நாள் ! ஒரு மெய்யான வெற்றியின் நாள்! 177. அது மாத்திரமல்ல, ஆனால் அவர் கல்லறையை விட்டு வெளியே வந்த போது, அவர் அங்கேயிருந்த சிறைப் பிடிக்கப் பட்டவர்களை கொண்டு வந்தார். அவர் சிறைப்பட்டவர்களை சிறைப்படுத்தினார் என்று வேதாகமம் சொல்லுகிறது. அவர் அங்கே வெளியே இருந்த எல்லா வீரர்களையும் தம்முடனே அழைத்துக் கொண்டு கல்லறையை விட்டு வெளியே வந்தார். அங்கே மேலே. அந்த நாளிலே, அவர்கள் அந்த ராஜ்யத்திற்குள்ளாகப் பிரவே சித்தது ஒரு சிறப்பான சம்பவமாக இருந்தது என்பது உங்களுக்குத் தெரியாதா? ஆஹா! அவர்கள் தேவனுடைய ராஜ்யத்திற்குள்ளே பிரவேசித்தப்போது என்ன? சிறைப்பட்டுப் போயிருந்த பரிசுத்த வான்களைக் கொண்டு வந்தார். 178. இது ஒரு பூரணமான வெற்றியாய் , பூரணமான வெற்றியாயிருந்தது. அவர் மரித்துப் போன எல்லா வீரர்களையும் வெளியே கொண்டு வந்தார். அவர், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோபு மீதியான யாவரையும் தம்மோடு கூட கல்லறையை விட்டு கொண்டு வந்தார், புரிகிறதா? அவர் பூமிக்கு வந்து மரணத்தை சிறை பிடித்தார், அவர் நரகத்தை சிறைபிடித்தார், அவர் கல்லறையை சிறைப் பிடித்தார், அவர் எல்லாவற்றையும் சிறைபிடித்தார். பிறகு இப்போது அவர், தம்முடைய பரிசுத்தவான்களுடனே கூட உயிர்த் தெழுந்தார், ஆமென்! 179. இப்போது அவர் உயரே ஏறிச் சென்று மனிதனுக்கு வரங்களைத் திரும்பவும் கொடுத்தார். அவைகள் என்ன? பட்டயங்கள் ! ஜெயிப்பதற்காக அவர் , அவர்களுடைய கரங்களில் பட்டயத்தை, வார்த்தையைக் கொடுத்தார். ஓ! என்ன சொல்வேன்! எதற்காக? வார்த்தை ! எதை ஜெயிப்பதற்காக? வியாதியை, பாவத்தை , மூட நம்பிக்கையை, தீமையை. "நான் ஜீவிக்கிறபடியால் நீங்களும் ஜீவிப் பீர்கள்” என்பதை உணர்ந்தறியும்படியான ஒவ்வொருவரையும், வாழ விருப்பமுள்ள உயிரோடுள்ள எல்லா ஜீவராசிகளையும் கொண்டு வருவதற்காக. 180. நமக்கு விசுவாசத்தின் போராட்டம் உண்டு. நாம் நல்ல போராட்டத்தைப் போராடி , நம்முடைய வெற்றியைப் பூரணப்படுத்து வோம். எனென்றால் நம்முடைய பூரண வெற்றியானது கட்டாயமானதாகும். நிச்சயமாக! அது அப்படியாக இருந்துதான் ஆக வேண்டும். நாம் அவருடைய முதற்கனியை உடையவர்களா யிருக்கிறோம். நாம் அதற்குரிய அத்தாட்சியை நம்முடைய இருதயங் களிலே கொண்டிருக்கிறோம். ஏனென்றால் நாம் முதல் யுத்தத்தை ஏற்கனவே கடந்து வந்துவிட்டோம். இயேசு கிறிஸ்துவின் விசுவா சத்தின் மூலமாய் நம்மால் ஜெயிக்க முடிந்தது. நாம் ஒரு வெற்றியின் நாளைப் பெற்றுக் கொண்டோம். 181. அங்கே, ஒரு இராத்திரியில், சுமார் பத்து மணியளவில் நான் அந்த பழைய , சிறிய கொட்டகையிலே, "தேவனே, என்னை கொல்லும் அல்லது காப்பாற்றும்” என்று ஜெபித்துக் கொண்டிருந்தது எனக்கு ஞாபகமுண்டு. நான் சபைக்குப் போனேன், அங்கே நான் முன்னாலே வந்து பிரசங்கியாருடன் கைகுலுக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். அப்போது, "எனக்கு அதைவிட கூடுத லாக ஏதாகிலும் வேண்டும்" என்று சொன்னேன். எனவே, அன் றைக்கு இரவு அந்த கொட்டகையிலே, "தேவனே, என்னால் இன்னும் தொடர்ந்து போகமுடியாது, நான் மரித்து விடுவேன்” என்றேன். மேலும் நான் அந்த பழைய ஈரமான கட்டிடத்தில் நின்றபோது நான் ஒரு பழைய வைக்கோல் பையின் மேலே முழங்காலில் நின்றிருந் தேன், என் கைகளை உயர்த்தியபடி, நான், "தேவனே, எனக்கு எப் படி பேசுவது என்று தெரியவில்லை, மிஸ்டர்!” என்று சொன்னேன். 182. அவருக்கு ஒரு கடிதம் எழுதி, என்னை மன்னிக்கும்படி கேட்கவேண்டும் என்று விரும்பினேன். எப்படி ஜெபிப்பது என்று எனக்கு தெரியாமலிருந்தது. நான் மன்னிக்கப்பட வேண்டும் என்று விரும்பினேன். ஆகவே நான் படுக்கையின் மீது மரித்துக் கொண் டிருக்கும் போது அதை வாக்குத்தத்தம் செய்தேன். அதற்குப் பிறகு, டாக்டர் என்னைக் கைவிட்டப் பிறகு, என் இருதயம் ஒரு நிமிஷத்திற்கு பதினேழு தடவைகள் தான் அடித்தது. அது எவ்வளவு மெதுவாகவென்று உங்களுக்குத் தெரியும். அவர், "அவன் - மரித்துக் கொண்டிருக்கிறான்” என்றார். அதை நான் கேட்டேன். அவர் என் தகப்பனாருக்கு அதைச் சொல்லி என்னைச் சுற்றிலும் திரையை இழுத்துப் போட்டார். 183. ஆகவே, அந்த அறைக்குள்ளே, அந்த மணிநேரத்திலே அப்படியே என்னைச் சுற்றியிருந்த திரைச்சீலையிலே பெரிய "ஜெ" (J) எழுத்துக்கள் காணப்பட்டன. அந்த நர்ஸ் அம்மாள் அழுதுக் கொண்டு "அவன் ஒரு சிறு பிள்ளையாகத்தானிருக்கிறான், ஆக இதோ அவன் மரித்துக் கொண்டிருக்கிறான்" என்று சொன்னது எனக்கு கேட்டது. முதுகுத் தண்டில் செலுத்தப்பட்ட மயக்க மருந்து கசிந்து வந்து என் இருதயத்திற்குள்ளே புகுந்து விட்டது, புரிகிறதா? அது ஒரு நிமிஷத் திற்கு பதினேழுதடவைகள் மாத்திரமே அடித்துக் கொண்டிருந்தது. 184. நான் வீட்டுக்கு வந்த போது, நான் தேவனை நேசிக் கிறேன் என்று நிரூபிக்க வேண்டியவனாக இருந்தேன். பிறகு, நான் அங்கே தரையில் அமர்ந்து "எனக்கு எப்படி ஜெபிப்பது என்று தெரியாது" என்று சென்னேன். நான் என் பெருவிரல் நகத்தைக் கடித்தபடி "ஒரு வேளை... நான் படங்கள் பார்த்திருக்கிறேன். நான் என் கரங்களை இந்த விதமாக மடக்குவேன். என் விரல்களை சேர்த்து வைப்பேன்" என்று நினைத்தேன். 185. "அன்புள்ள ஐயா, நான் உம்மிடம் பேசுவதற்கு விரும்பு கிறேன்" என்று சொன்னேன். மேலும் நான் கவனித்து செவி கொடுத்தேன். "நீர் பேசுவதை என்னால் கேட்க முடியவில்லை" என்று சொன்னேன். 186. "நான் என் கைகளை தவறாக மடக்கிவிட்டேன் , ஒருவேளை நான் இந்த விதமாக செய்திருக்க வேண்டும்!..." என்று சொல்லிக் கொண்டு, "அன்புள்ள ஐயா , இயேசு கிறிஸ்துவே, நான் உம்மிடம் பேசுவதற்கு விரும்புகிறேன்" என்றேன். 187. "ஐயா, நீர் எனக்கு பதில் செல்வதை நான் கேட்க வில்லையே, தேவன் என்னுடன் பேசினார் என்று மற்றவர்கள் சொல் வதைக் கேட்டிருக்கிறேன். இப்போது இதை நான் உம்முடன் பேசி முடிக்க விரும்புகிறேன். நான் இதைச் செய்வேன் என்பதாக உமக்கு வாக்கு கொடுத்தேன். இப்போது நான் இதைப் பேசி முடிக்க விரும்புகிறேன். நீர் தயவு செய்து வந்து, என்னுடன் பேசுவீரா, ஐயா?” என்று சொன்னேன். 188- நான் நினைத்தேன், "இல்லை, நான் என் கைகளை சரியாக வைத்திருக்கவில்லை, இல்லாவிட்டால் அவர் ஏதாகிலும் சொல்லி யிருப்பார்” என்று நான் நினைத்தேன். என்ன சொல்வது என்று நான் அறியாமலிருந்தேன், நான் என் ஜீவியத்தில் ஜெபித்ததே கிடையாது. இந்தப் பழைய கொட்டகையில் என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்போது நான் இதை நினைத்தேன், "வேதத்தின் பிரகாரம் அவர் ஒரு மனிதனாயிருந்தார். அவர் ஒரு மனிதனாயிருந்ததால், அவர் ஒரு மனிதனைப் போல புரிந்துக் கொள்பவராவார். ஆகவே, இப்போது நீர் எனக்கு செவி கொடுக்கிறீரோ இல்லையோ என்று எனக்கு தெரியவில்லை". 189. "சரிதான், நீ உன் கிருபையின் நாளைப் பாவம் செய்து அழித்துப் போட்டாய், அது தீர்ந்து போயிற்று, அவர் உன்னை மன் னிக்க முடியாத அளவுக்கு நீ, அவ்வளவு மோசமானவனாக இருந் தாய், புரிகிறதா?” என்று பிசாசு சொல்லிற்று. 190. "நான் அதை நம்பவில்லை! அதை என்னால் நம்ப முடியவே இல்லை. அவர் என்னுடனே பேசுவார் என்று நான் நம்புகிறேன்” என்று நான் சொன்னேன். 191. "ஐயா, நான் ஒரு தவறு செய்தேனோ என்று எனக்குத் தெரியவில்லை. நான் என் கரங்களைச் சீராக மடக்கவில்லையோ அல்லது எதுவானாலும் என்னை அதற்காக நீர் மன்னியும். ஆனால் நான் உம்மிடம் பேச விரும்புகிறேன். நான் இந்த உலகத்திலேயே மிகவும் கீழ்த்தரமான போக்கிரி ஆவேன். நான் இந்தக் காரியங்களையெல் லாம் செய்தேன். மேலும் நான் உம்மை விட்டு ஓடிப் போனேன் ...” நான் அவ்விதமாகப் பேசிக்கொண்டே போனேன். பிறகு முதல் காரியம் என்ன தெரியுமா? அறையின் நெடுகில் ஒரு சிறிய வெளிச்சம் வந்தது. பிறகு சுவற்றின் பக்கமாகப் போய் அந்த வெளிச்சத்தாலே ஒரு சிலுவையை உருவாக்கிற்று, பிறகு அது ஒரு பாஷையிலே பேச ஆரம்பித்தது. நான் அந்நிய பாஷைகள் பேசுவது” என்பதாக ஒரு காரியத்தைக் கேள்விப்பட்டதே கிடையாது. வேதத்தைக்கூட வாசித்ததே கிடையாது. நான் ஆதியாகமத்திலே யாக்கோபு 5:14க் காக தேடிக் கொண்டிருந்தேன். 192. நான் அங்கே மேலே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அந்த வெளிச்சத்தை நான் கண்டேன் மேலும் அது ஏதோ ஒரு பாஷையைப் பேசிக் கொண்டிருந்தது. அதற்குப் பின் அது போய்விட்டது, எனவே நான் "ஐயா, கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அங்கே என்னுடனே பேசிக் கொண்டிருந்தது நீரேயானால், உம்முடைய பாஷையை என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை, ஐயா , ஆனால் உம்மால் என் பாஷையைப் பேச முடியவில்லையானால், பாருங்கள், என்னாலும் உம்முடைய பாஷையைப் புரிந்துக் கொள்ள முடியவில்லை, ஒரு வேளை நாம் ஒருவரையொருவர் இந்த விதமாகப் புரிந்துக் கொள்ளலாமே? நீர் அங்கே மறுபடியும் வந்தீர் என்றால், நீர் என்னை மன்னித்து விட்டீர் என்பதற்கு, உமக்கும் எனக்கும் மத்தியில் அது அடையாளமாயிருக்கும்” என்றேன். அதோ, அங்கே மறுபடியும் அது! ஒரு வெற்றியின் நாளைப் பற்றிப் பேசுவீர்களானால், நான ஒன்றினைப் பெற்றுக் கொண்டேன். ஒரு மெய்யான வெற்றியின் நாள் ! அதோ அது மறுபடியும் வந்திருந்தது. அதே விதமாகப் பேசிற்று, எனவே நான் ஒரு வெற்றியின் நாளைப் பெற்றுக் கொண்டேன். 193. ஓ! எப்படிச் சொல்வேன்! அது முதற்கொண்டு, அவர் வார்த்தையினை என் கையில் கொடுத்தது முதற்கொண்டு, பரிசைப் பெற்றுக் கொள்ளவும், இரத்தக் கடல்களில் கப்பலைச் செலுத்தவும், நான் போராடி வருகிறேன். நாம் எல்லோரும் ஒரு வெற்றியைப் பெற்றோம்; நாம் பல வெற்றிகளினூடே போராடிச் சென்றோம். மேலும் ஒரு வெற்றியானது. அதோ மூலையைத் திரும்பிக் கடந்து இதோ சீக்கிரமாய் வந்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய பூரணமான வெற்றியின் நாளானது சீக்கிரத்தில் இருக்கும், அப்போது, தேவனு டைய குமாரனானவர், பிரதான தூதனுடைய சத்தத்தின் முழக்கத்தைக் கொண்டு வானங்களை உடைப்பார். பிறகு அவர் மறுபடியும் வருவார். மேலும் கல்லறைகள் திறக்கப்படும், மரித்தவர்கள் வெளியே நடப்பார்கள். 194. என்னுடைய ஒலி நாடாக்களை நீங்கள் இங்கே போட்டுக் கேட்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். நான் இப்பொழுதுதானே பெற்றுக் கொண்டே ஒரு தரிசனத்தை அல்லது மறுரூபப்படுதலைப் பற்றி... அது எதுவாக இருப்பினும், ஒரு அறைக்குள்ளே, நான் அவ்விடத்திற்கும் போய், நான் உங்களைப் பார்ப்பதைப் போலவே அந்த மக்களைப் பார்த்தேன். இந்த வேதாகமானது எனக்கு முன்பாக திறக்கப்பட்டுக் கிடக்கிறது. மேலும் அது உண்மைதான் என்று தேவன் அறிவார். அதோ அவர்கள் இருந்தார்கள். வாலிபமாக, அப்படியே அதைப் போலவே .... நீங்கள் எல்லாரும் அந்தக் கூட்டங்களில் இருந்திருக்கிறீர்கள். அந்த தரிசனங்களை புரிந்தும் கொள்ளுகிறீர்கள். நீங்கள் எப்பொழுதாவது அதில் ஒன்று தவறி விடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லை, ஐயா! இதோ சமீபத்தில் அவர் என்னை அங்கே ஒரு தரிசனத்தில் அனுப்பினார்..... என்ன சம்பவிக்கும் என்று எனக்குச் சொன்னார். அதைப்பற்றி நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இது அங்கே அப்படியேச் சென்றது, மிகவும் சரியாக, இது தவறிப் போவதே கிடையாது. மேலும் உங்களை இங்கே இன்றைக்குக் காலையில் உட்கார்ந்திருக்கும் ஒரு கிறிஸ்தவக் கூட்டமாகச் சொல்லுகிறேன்; தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு தற்காலிக வெற்றியைப் பெற்றுக் கொண்டீர்கள், ஆனால் அங்கே ஒரு மெய்யான வெற்றியின் நாளானது வந்துக் கொண்டிருக்கிறது. பூரணமானதாக. அப்போது, இயேசுவானவர் வரும் போது, எக்காளமும் தொனிக்கும், கிறிஸ்து வுக்குள் மரித்தவர்களும் எழுந்திருப்பார்கள். நீ இந்த நம்பிக்கையை உனக்குள்ளே கொண்டிராவிட்டால், அதைப் பெற்றுக் கொள்ளாமல் இந்த நாளைக் கடந்துப்போக விடாதே. 195. சிறிது நேரத்திற்கு முன்னே நான் ஒரு சிறிய ஏதோ ஒன்றைக் கேள்விப்பட்டேன். அதை திரும்பவும் சொல்ல விரும்புகிறேன். அது எங்கேயிருந்து வந்தது என்றால் ..... அந்த வார்த்தை களைச் சொன்னது பில்லி சண்டே என்று நான் நினைக்கிறேன். 196. ஒரு குற்றத்தைச் செய்த ஒருபையன் இருந்தான் (இதைக் குறித்து நீ எப்போதாவது கேள்விப்பட்டாயோ எனக்குத் தெரியாது) அவன் ஒரு குற்றத்தைச் செய்தான், எனவே அவர்கள் அவனை சிறையில் அடைத்தார்கள். ஆகவே அவன் நீதி விசாரணைக்குட் பட்டான். பிறகு ஜூரிகள் வெளியே வந்து "இந்த பையன் இந்தக் குற்றத்தைச் செய்ததாக நாங்கள் காண்கிறோம், மேலும் நாங்கள் அவனுடைய உயிரைக் கேட்கிறோம்” என்றார்கள். 197. நீதிபதியானவரும், "நீ சாகும்படியாக நான் தீர்ப்பு கூறு கிறேன். உன் மாம்ச ஜீவன் போகும் வரையில் கயிற்றில் தூக்கிப் போடப்படக்கடவாய். தேவன் உன் ஆத்துமாவின் மீது இரக்கம் கொள்வாராக” என்று சொன்னார். 198. அந்தப் பையன் சிறைச்சாலைக்குக் கொண்டு போகப் பட்டு, உள் சிறையில் வைக்கப்பட்டான். அவன் மரிக்கும்படியான நேரம் வரையில் அவன் அங்கே இருந்தாக வேண்டும். மேலும், நண்பர்கள் நீதிபதியிடம் வந்து, "நீதிபதியே, நகரத்திலே உம்மை தேர்ந்தெடுக்க நாங்கள் உதவி செய்தோம். தயவு செய்து, தயவு செய்து, அந்த வாலிப நண்பனை அவ்விதமாக மரிக்க விடாதேயும்” என்றார்கள். 199. அதைப் போன்ற வேறொரு ஏதோ காரியத்திற்கு இப்போதுதான் டெக்சாசிலிருந்து வந்தேன், அதற்கு மூன்று நான்கு நாட்கள் கழித்து அவர்கள் மரிப்பதாகவிருந்தது, ஆனால் தேவன் அவர்களுடைய பிராணன்களைக் காப்பாற்றினார். நீங்கள் எல்லாரும் செய்தித் தாளைப் பார்த்தீர்கள் என்று நான் நம்புகிறேன், அவ்விடத்திலே என்னோடு இருந்த நீங்களும், அதாவது அவர்கள் அவர்களுடைய பிராணன்களை காப்பாற்றினார்கள். 200. ஆகவே, அவர் அதைச் செய்யக்கூடாது என்பதாக அவர்கள் கெஞ்சு கெஞ்சு என்று கெஞ்சினார்கள், சிறிது காலம் சென்றபின்பு, கவர்னரின் மாளிகைக் கதவுக்கு வெளியே, ஒரு நாள், அந்த தாயானவள் அப்படியே தரையில் விழுந்து, உள்ளே போவ தற்காக அழுதாள். முடிவிலே அந்த மனிதன் உள்ளே வந்து, "கவர்னர் ஐயா , அந்தப் பையனின் தாயார் அங்கே வெளியில் இருக்கிறாள். அவள் உம்மைக் காண விரும்புகிறாள்” என்று சொன்னான். 201. "அவளை உள்ளே கொண்டுவா' என்று கவர்னர் சொன்னார். 202. அந்த ஸ்திரீயும், மிகுந்த தாழ்மையுடன் தன்னுடைய கைகளாலும் முழங்கால்களாலும் கவர்னரிடம் தவழ்ந்துச் சென்று அவருடைய பாதங்களை கைகளில் பற்றிக் கொண்டு, "ஐயா, அது என்னுடைய குழந்தை , அவனை கொல்ல வேண்டாம், அவனைக் கொல்ல வேண்டாம்! எனக்குள்ளது அவன் ஒருவன் தான். அவனை கொல்ல வேண்டாம். அவன் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை, அவனுக்கு வெறும் சிறை வாழ்க்கையை கட்டளையிடும், ஆனால் அவனுடைய உயிரை எடுக்க வேண்டாம், கவர்னர் ஐயா!" என்றாள். 203. "நல்லது, நான் போய் அவனை பார்க்கிறேன்" என்று சொன்னார். 204. “ஆகட்டும்” என்று அவள் சொன்னாள் . 205. ஆகவே, கவர்னர் அவன் இருக்கும்படியான சிறைச் சாலை பகுதிக்குச் சென்றார், அவர்கள் உள்ளே போனார்கள். அந்த பையன் அகங்காரமுள்ளவனாக இருக்க விரும்பினான். "உன்னை பார்க்க ஒருவரைக் கொண்டு வந்திருக்கிறோம்” என்று சொன்னார்கள். 206. எனவே, கவர்னர் உள்ளே போய், "வாலிபனே, உன் னிடத்தில் நான் பேச விரும்புகிறேன்” என்றார். அவன் மிகவும் அகங்காரங் கொண்டான். அப்படியே உட்கார்ந்துக் கொண்டு வாயை மூடிக்கொண்டான். ஒரு காரியத்தையும் சொல்ல மாட்டேன் என்றான். அவரோ, "வாலிபனே, நீ என்னுடன் பேச வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நான் உன்னுடன் பேச விரும்புகிறேன்" என்று சொன்னார். அந்த பையனோ, அவர் சொன்னது தன் காதிலே விழாததைப் போல நடந்துக் கொண்டான். மேலும் அவர், "வாலிபனே, நீ எனக்கு இடங்கொடுத்தால், உனக்கு உதவ என்னால் முடியும்" என்று சொன்னார். அவனோ, "இங்கேயிருந்து வெளியே போ! நீ சொல்ல வேண்டும் என்று இருக்கிற எதையும் நான் கேட்க விரும்பவில்லை" என்றான். அவர் சொன்னார். "நல்லது, மகனே..." அவனோ, "வாயை மூடு! நான் ஆடிப்போயிருப்பது உனக்கு தெரியவில்லையா? நீ சொல்லப் போகிற ஒரு வார்த்தையும் கேட்க நான் விரும்பவில்லை!" என்றான். அவர், “நல்லது, நான் எதற்கு வந்திருக்கிறேன் என்றால்...." என்று சொன்னார். அவனோ , "இந்த கூண்டை விட்டு வெளியே போ!" என்றான். 207. ஆகவே அவர் வெளியே நடந்தார். அவர்கள் கதவுகளை மூடினார்கள். எனவே, கதவுக்கு அருகிலிருந்த காவலர்காரர், அவர் திரும்பி நடந்து வந்தபோது, "நீ ஒரு மிகவும் முட்டாள்தனமான மனுஷன்" என்றார். 208. இவனோ, "எப்படியுமிருக்கட்டும், அந்தப் பயித்தியக் காரன் யார்?” என்று கேட்டான். 209. "அவர் இந்த தேசத்தின் கவர்னர்" என்று சொன்னார்கள். 210. "ஐயோ! கவர்னரா அது? என்னை மன்னிக்கக்கூடிய ஒரே மனிதர். அவரை நான் என் கூண்டைவிட்டு துரத்தினேன்! என் மன்னிப்பு சாசனத்தில் கையொப்பமிடக்கூடிய ஒரே மனிதர், நான் அவரை கூண்டைவிட்டு வெளியே துரத்திவிட்டேனே - என்று அவன் சொன்னான். 211. கவர்னர் போகும் போது. அவர், "அவன் தனக்கு வேண்டியதை தெரிந்துக் கொண்டான்' என்று சொன்னார். 212. ஆகவே, அந்த பையன் தூக்கிலிடப்படும்படியாக அவனுடைய முகத்தின் மீது கருப்பு உறையை அவர்கள் மாட்டிய போது, அவர்கள் கயிரை இறுக்கமாக இழுத்து அந்த உறையை மாட்டியபோது அவன் கடைசியாக சொன்னது என்னவென்றால், "நினைத்துப் பாருங்கள், கவர்னர் என் சிறைகூண்டில் நின்றார். நான் மாத்திரம் அவரை வெளியேற்றியிராவிட்டால், அவர் என்னை மன்னித்திருப்பார்” என்பதே. 213. இன்றைக்கு காலையிலே, கவர்னரானவர் நமது கூண் டினருகில் நின்றுக் கொண்டிருக்கலாம், நாம் எப்படி அறிவோம்? அவரிடமிருந்து நீ இதுவரையில் மன்னிப்பை பெற்றுக் கொண் டிராவிட்டால், அவரை திருப்பி அனுப்பிவிடாதே! கவர்னர் மாத் திரமல்ல, ஆனால் ராஜாவும்கூட! உன்னை மன்னிக்கக்கூடிய ஒரே ஒருவர். நீ நெடுங்காலமாய் வசித்துக் கொண்டிருக்கும் அந்த சிறிய கூண்டினருகில் அவர் நின்றுக் கொண்டிருக்கலாம். நீ அவரை உள்ளே வர விடமாட்டாயா? அவரிடம் ஒரு முழுமையான சரணடை தலை செய்திருக்காவிட்டால், எதாவது ஒரு நாள் .... இந்த எளிமை யான வழியை நீ ஒரு அறிவில்லாத காரியமாக நினைக்கலாம், நாங் கள் எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்று அறிந் திராதவர்கள் என்று நீ நினைக்கலாம். ஒரு நாள் நீ அறிந்துக்கொள்வாய்! அந்த கவர்னர் இந்தக் காலை வேளையில் இங்கே இருந்தார் என்பதை தெரிந்து கொள்வாய். 214. உன்னுடைய வியாதியான சிறிய கூண்டிலே உனக்கு "தேவை. இருக்குமானால், உன்னால் அதை விட்டு வெளியேற முடியாது, கவர்னர் இங்கே இருக்கிறார்! இந்த உலகத்தின் ஜனாதிபதி! அவர் நீதியுள்ளவர். அவர் உன்னை வெளியே கொண்டு வருவார். அவர் வந்தாயிற்று! அவர் உன்னுடைய மன்னிப்பை கையெழுத்திட்டு விட்டார்! அவர் அதை உனக்குக் கொடுக்க மாத்திரம் விரும்புகிறார்! அதை வேண்டாம் என்று தள்ளாதே! நம்முடைய தலைகளை ஒரு நிமிடம் வணங்குவோம். 215. இப்போது, உங்களுடைய தலைகள் வணங்கிய நிலையில், உங்களுக்கு ஒரு மெய்யான வெற்றி வேண்டுமானால், சரணடைந்து விட்டு, கவர்னரானவர் உங்கள் மன்னிப்பின் சாசனத்தைக் கையொப்பமிட இந்த காலையிலே நீங்கள் ஏன் இடங்கொடுக்கக் கூடாது? உங்களை வெளியே எடுக்க அவர் ஆயத்தமாயிருக்கிறார். பாவத்திலிருந்து உங்களை வெளியே எடுக்க, அவிசுவாசத்திலிருந்து உங்களை வெளியே எடுக்க, வியாதியிலிருந்து உங்களை வெளியே எடுக்க, உங்களுக்கு எதிலிருந்து வெளியே எடுக்க வேண்டுமோ அதிலிருந்து உங்களை வெளியே எடுக்க! நாம் ஜெபிக்கும்போது நீ அதைச் செய்! இப்போது நீ உன் சொந்த விதத்தில் ஜெபி, நீ அவரிடத்தில் பேசு! புரிகிறதா? ஜெயில் அதிகாரி கவர்னரிடம் பேசியிருக்கலாம். அது எந்த நன்மையையும் செய்திருக்காது, புரி கிறதா? அந்த பையன் கவர்னரிடம் பேச வேண்டியதாயிருந்தது. 216. நீ கவர்னரிடம் பேசியாக வேண்டும். நீ வியாதிப் பட்டிருந்தால் அவருடன் பேசு. நீ பாவம் செய்துவிட்டு , தவறு செய்திருந்தால் அவருடன் பேசு. உனக்காக ஒரு மன்னிப்பை அவர் வைத்திருக்கிறார். 217. பரலோகப் பிதாவே, நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மேலும் நான், கர்த்தாவே, நான் அவ்வளவாய் உமக்கு கடன்பட்டிருக்கிறேன். என் பாவத்தின் கடனை நான் எப்பொழுதாவது செலுத்துவேன் என்பதற்கு வழியே இல்லை. நான் ஒரு நாள் ஒரு கூண்டில் காணப்பட்டேன், எனென்றால் நான் அந்த கூண்டிற்குள்ளே பிறந்தேன். சுதந்திரம் என்பதின் அர்த்தத்தை அறிந்திருந்தேன். விலைக்கிரயமானது அவ்வளவு பிரமாண்டமாக இருந்தபடியால், என்னால் அதைச் செலுத்த முடியாமற்போயிற்று. ஆனால் நீர் என் கூண்டைப் பார்க்க வந்தீர் , அதினிமித்தம் நான் இன்றைக்கு அவ்வளவாய் சந்தோஷப்படுகிறேன். இது ஒன்று மாத்திரமே மன்னிக்க முடியும் என்றும், நான் எப்பொழுதாகிலும் சுதந்திரமாக இருக்கவும், வெற்றியை, ஒரு முழுமையான வெற்றியைப் பெற்றுக் கொள்ளவும், ஒரே வழியானது, நீர் எனக்காக கையொப்ப மிட்ட மன்னிப்பை ஏற்றுக் கொள்வதினாலேதான் என்பதை நான் அடை யாளம் கண்டுகொண்டேன். எனவே இன்றைக்கு நான் விடு தலையாயிருக்கிறேன். 218. நான் அவ்வளவாய் சந்தோஷமாயிருக்கிறேன், கர்த் தாவே. நான் சிறைவீடு சிறைவீடாகப் போய் பார்த்துக் கொண்டிருக்கிறேன், கலியாணத்தைப் பற்றி கொள்கை வைராக்கி யங்களையுடையவர்களிடமிருந்து, வியாதிப்பட்டு சுரத்துடனிருப்ப வர்களும், வியாதிப்பட்டிருந்து சிறையிலிருப்பவர்களும், பாவமுள்ள வர்களாயிருந்து சிறையிலிருப்பவர்களும் அதிருப்தியடைந்தவர் களாகவும், சந்தேகமுள்ளவர்களாகவும் சிறையில் இருப்பவர்களும், நான் சிறை சிறையாகப் போய் அவர்களுக்கு, "எல்லோரையும் மன்னித்துக் கொண்டும், எல்லோரையும் வெளியே எடுத்துக் கொண்டும், இதோ கவர்னர் வந்துக் கொண்டேயிருக்கிறார்" என்று சொல்லுகிறேன். 219. பிதாவே, இன்றைக்கு இங்கேயுள்ள மக்களின் இரு தயங்களை நீர் அறிந்திருக்கிறீர். இது ஒரு வெற்றியின் நாளாக, ஒரு பூரணமான வெற்றியின் நாளாக இருக்கட்டுமே. இது, ஒவ் வொருவரும், கர்த்தாவே, இன்றைக்கு வெற்றியைப் பெற்றுக் கொள்ளும்படியான நாளாக இருக்கட்டுமே! அனுக்கிரகம் செய்யும் கர்த்தாவே! இந்த கட்டிடத்திலிருக்கும் ஒவ்வொரு வியாதிப் பட்டிருக்கிற நபரும் சுகமாக்கப்படுவார்களாக. பாலைவனத்தின் பின்புறமாகவுள்ள இந்த நேரமானது, எரிகிற விசுவாசத்தின் அக்கினியுடன் தேவனுடைய சத்தமானது பேசும்படியான நேரமா யிருக்கட்டுமே! ஓ தேவனே! அங்கே எரிந்துக் கொண்டிருக்கும் படியான விசுவாசத்தின் சிறிய அக்கினி மூட்டமானது, எரிந்துக் கொண்டிருக்கும்படியான அந்த சிறிய விசுவாசம், அதன் மூலமாக தேவனுடைய சத்தமானது, சிறைபிடிக்கப்பட்டிருக்கிற ஒவ்வொரு வருடனும் இந்த காலை வேளையில் பேசி "உன்னை விடுதலை செய்வ தற்காக நான் இன்றைக்கு வந்திருக்கிறேன்” என்று சொல்லட்டுமே! 220. அங்கே ஒருபையனோ பெண்ணோ , மனுஷனோ மனுஷியோ , கர்த்தாவே, உம்மை தங்களுடைய இரட்சகராக அறியாமலிருப் பார்களானால், அந்த சிறிய சத்தமானது பேசி, அந்த சிறிய விசு வாசத்தின் சத்தமானது பேசி, "ஆமாம், தேவன் இருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர்கள் அவரைப் பற்றி சொல்லுகிற எல்லாமாக அவர் இருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன்" என்று இப்போது சொல்லட்டுமே. மேலும் கர்த்தாவே, இதோ இப்பொழுது அந்த சிறிய விசுவாசமானது அவர்களை விடுதலைச் செய்யட்டும். இதை அனுக்கிரகம் செய்யும், கர்த்தாவே. 221. இங்கேயுள்ள சகோதரன் “ஐசக்சன்னை ஆசீர்வதியும் கர்த்தாவே . இந்த வாலிபனையும் அவருடைய மனைவியையும் அவர்களுடைய சிறு பிள்ளைகளையும் நாங்கள் நேசிக்கிறோம். இந்த சிறிய சபையை ஆசிர்வதியும். ஓ! தேவனே, அவர்களுக்காக நாங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறோம். இங்கே அவர்களுடைய தலைகளுக்கு மேல் கூரையையும், இங்கே ஒரு இடத்தையும் அவர்களுக்கு இருப்பதைக் காண நாங்கள் அவ்வளவாய் சந்தோஷப்படுகிறோம். நீர் அவர்களுக்கு மிகவும் நல்லவராயிருக்கிறீர், கர்த்தாவே. எனவே நாங்கள் உமக்கு மிகுந்த நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். அவர்கள் எப்பொழுதும் தேவனுடைய சமூகத்தில் தாழ்மையுடனும் இனிமை யாகவும் நிலைத்திருப்பார்களாக. 222. எங்கள்வாசலில் உள்ள அந்நியனை ஆசிர்வதியும். பார்க்க வந்தவர்களையும் ஆசிர்வதியும், கர்த்தாவே. நீர் அவர்களுடன் இருக்க வேண்டுமாய் ஜெபிக்கிறோம். தேவன் பேசும்படியான ஒவ்வொரு வார்த்தைக்கும் "ஆமென்” என்று சொல்லும் அளவிற்கு அவர்கள் இந்த பூரணமாக வெற்றியைப் பெற்றுக் கொள்ளவே ல யென்றால், அப்போது கர்த்தாவே, அவர்கள் உம்மிடத்தில் வைத் திருக்கும்படியான விசுவாசமானது, இந்த காலையிலே, ஒவ்வொரு வார்த்தையையும் "ஆமென்” என்று குறியிடட்டுமே. இதை அனுக்கிரகம் செய்யும், கர்த்தாவே! 223. எங்களை ஒன்றாக சேர்த்து ஆசிர்வதியும். வியாதியுள்ள வர்களையும் பீடிக்கப்பட்டவர்களையும் விடுவியும். உமக்கே மகிமையை எடுத்துக் கொள்ளும். மேலும், அன்பான தேவனே, நாங்கள் இப் போது தவித்துப் போகாமலிருப்போமாக. மேலும், எங்களுக்கு வரும் இந்த சோதனைகளும் காரியங்களும் தேவன் எங்களை நேசிப்பதினால் தான் செயல்படுகின்றன என்று நாங்கள் நினைவு கொள்வோமாக. அவருக்கு எங்கள் மீது நம்பிக்கை இருப்பதினால் அவர் இவைகளை எங்களுக்கு தருகிறார். அவர்மீது எங்களுக்கு விசுவாசமும் அன்பும் உண்டு என்றும், எங்களால் மேற்கொள்ள முடியும் என்றும் அவர் நம்புகிறார். அவர் அதை கவனித்துக் கொள்வார். ஆகவே, நாங்கள் அதைக் குறித்து தவித்து தத்தளித்துப் போகாமலிருப்போமாக. நாங்கள் அப்படியே அங்கே நடந்து போய். வார்த்தையைப் பேசி, முன்னோக்கி நடப்போமாக. சமுத்திரங்கள் கட்டாயமாக திறக்கும்! வெற்றியின் நாட்கள் கட்டாயம் வரும். இதை அனுக்கிரகியும் கர்த்தாவே. மேலும், இது எங்கள் காலத்தின் மிகச் சிறந்த வெற்றியின் நாளாக இருப்பதாக. நாங்கள் மறுபடியும் சேர்ந்து சந்திக்கும் வரையில் எங்களை ஆசிர்வதியும். இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே, ஆமென். 224. நான் போக வேண்டியதற்கு சிறிது முன்பாக நான் இதை சொல்ல விரும்புகிறேன். டூசானுக்குப் போக, எனக்கு இப்போது ஒன்றரை மணி நேரம் இருக்கிறது. அது சரியான ஒரு சிறு ஓட்ட மாகும். ஆனால் நான் இதைச் சொல்ல விரும்புகிறேன். இங்கே வந்து இருந்ததையும், உங்களுக்கு இருக்கிற இந்த விசுவாசத்தை உணர்ந்ததையும், நான் உண்மையிலேயே அனுபவித்து மகிழ்ந்தேன். அதைவிட்டு ஒருபோதும் விலகிப் போய்விடாதீர்கள். அந்த சிறிய அக்கினிமூட்டம் தொடர்ந்து எரிந்துக் கொண்டே, எரிந்துக் கொண்டே யிருக்கட்டும். மேலும், ஞாபகமிருக்கட்டும், தேவனானவர் அந்த சிறிய அக்கினி மூட்டங்களிலே பேசுகிறார்…